ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.சாதிக்: இதன்படி நீங்கள் அல்லாஹுக்கு  இணைவைத்து விட்டாய். அது மிருக தோலினால் செய்யப்பட்ட அட்டையாகும். அல்லாஹ் இச்செயல்களை விட சிறந்தவன்.

மாலிக்: இவ்வாறில்லை, நாங்கள் அல்குர்ஆனின் அட்டையை முத்தமிடுகின்ற போது அதன் உள்ளே அல்லாஹ்வின் வேதம், வாக்கு இருக்கின்றது என்றே முத்தமிடுகின்றோம். இச்செயலும் அல்குர்ஆன் மீதுள்ள அன்பிளால் மரியாதையினால் தான் செய்கின்றோம். இந்நிலையில் இச்செயல் எந்த வகையில் ஷிர்க் ஆகும் என்று சொல்லியே ஆகவேண்டும்? அல்குர்ஆனை முத்தமிடுகின்ற போது இறைவனது கூலி கிடைக்கும். இச்செயல் நன்மைக் கொண்டிருக்கின்றது. எனவே இதற்கும் இணைவைப்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மிகவும் தூரமாகும்.

சாதிக்: விடயம் அப்படித்தான், இவ்வாறு இருக்கும் போது ஏன் நீங்கள் இவ்விடயத்தை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களதும் இமாம்களதும்1* ழரீஹுகளை முத்தமிடுவதில் ஏற்றுக் கொள்கின்றீர்கள் அல்ல?

சிலவேலை நீங்கள், ழரீஹை முத்தமிடுபவர்கள் இரும்பை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிவிட்டனர் என்று சொல்லக் கூடும். இவ்வாதம் உண்மையானதாக, சரியானதாக இருந்தால் அநேகமாக இப்போது வெளியில் எல்லா இடத்திலும் இரும்பு காணப்படுகின்றது. அதை முத்தமிடுகின்றார்கள் அல்ல? ஒருபோதும் இப்படி இல்லை. அவர்கள் ழரீஹை அதனுள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அல்லது இமாம்கள் அலைஹிமுஸ்ஸலாம் இருக்கின்றார்கள் என்றே முத்தமிடுகின்றார்கள். இப்பெரியார்கள் இப்போது அவர்களுக்கு மத்தியில் இல்லாததின் காரணத்தால் அவர்களது ழரீஹை முத்தமிட்டு அவர்களைக் கண்ணியப்படுத்துகின்றனர். அவர்களது ழரஹை முத்தமிடுவது உண்மையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களை அல்லது இமாம்களை முத்தமிடுட்டு அவர்களைக் கண்ணியப்படுத்துவது  நிச்சயமாக அப்பெரியார்கள் எதன்பால் அழைத்தார்களோ அந்த இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்துவது போலாகும். எக்காரியம் இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்துகின்றதோ அது இறைசின்னமாகும். அல்லாஹ் இது பற்றிய இவ்வாறு கூறியுள்ளான். 'எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தில் நின்றும் உள்ளதாகும்.' (சூரா ஹஜ் வசனம் 32 )

1* இமாம்கள் அலி இப்னு அபீதாலிக் அவர்களும், அவர்களின் பிள்ளைகளான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் பேரப் பிள்ளைகளான சுவனத்து வாலிபர்களின் தலைவர்களான செய்யிதினா இமாம ஹஸன், இமாம் ஹுஸைன் அலைஹிமாஸலாம் ஆகியோரும், இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பரம்பரையில் வந்த ஒன்பது பிள்ளைகளுமாகும். இது விடயமாக வந்திருக்கும் ஹதீதுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளபட்ட  ஒன்றாகும். அதிலே இமாம்கள் அனைவரும் குறைஷிகளைச் சேர்ந்தவர்கள் தான் என கூறப்பட்டுள்ளது. அவரகள் முறைப்படியே: அலி இப்னு அபீதாலிப், ஹஸன் இப்னு அலி, ஹுஸைன் இப்னு அலி, அலி இப்னுல் ஹுஸைன், முஹம்மத் இப்னு அலி, ஜஃபர் இப்னு முஹம்மத், மூஸா இப்னு ஜஃபர், அலி இப்னு மூஸா, முஹம்மத் இப்னு அலி, அலி இப்னு முஹம்மத், ஹஸன் இப்னு அலி, ஹுஜ்ஜதிப்னுல் ஹஸன் மஹ்தி அலைஹிமுஸ்ஸலாம் ஆகும்.

 

மாலிக்: இப்படி இருக்கும் போது ஏன் சிலர் உங்களை முஷ்ரிகுகள் என்கின்றார்கள்?

சாதிக்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீதிலே இப்படி வந்துள்ளது.

'انـمـــا الاعـمــال بالـنـيـات’ 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களுக்கு ஏற்பவே அமையும் (இதன் அடிப்படையிலே நன்மையோ தீமையோ வழங்கப்படும்)'. (சஹீஹுல் புஹாரி பாக 1 பக் 3 ஹதீது இல 1 பாபு 1 , கிதாபு பத்இல் வஹீ இலா ரஸுலில்லாஹ்; பஹ்குர்ராஷி, தப்ஸீருல் கபீர் பாக 4 பக் 5 விடயம் 4 சூரதுல் பகரா 112 வது வசனத்தின் விளக்கவுiர் தஹ்தீபுல் அஹ்காம் பாக 1 பக் 83 பாபு 4 ஹதீது இல 67...)

இதன்படி எவராகினும் ஒருவர் ழரீஹை இணைவைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முத்தமிட்டால் அவர் முஷ்ரிகாகும். ஆனால் அதை அதன் உள்ளே இருப்பவர்களின் மேல் கொண்டுள்ள அன்பால், இறைசின்னங்களை நிலைநாட்ட வேண்டும், நன்மையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் முத்தமிட்டால் அது முஸ்தஹப்பாகும். அதற்கு இறைகூலியும் உண்டு. நீங்கள் விரும்பினால் ஷீஆ சுன்னாக்களிடத்தில் எந்த நோக்கத்தில் அவர்கள் ழரீஹை முத்தமிடுகின்றார்கள் என்று கேட்டுப்பாருங்கள் அவர்கள், நாங்கள் அதனுல் இருப்பவர்கள் மீது கொண்டுள்ள மரியாதையினால் அன்பினால் முத்தமிடுகின்றறோம் என்று சொல்வதைக் கேட்பீர். இதற்கு மாற்றமாக ஒரு விடையைக் கூட நீங்கள் கேட்க மாட்டீர்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next