ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.மாலிக்: ஆமாம், இந்தப் பாக்கியத்தை கொடுத்ததற்கு அல்லாஹுக்கு நன்றி கூறுகிறேன்.

சாதிக்: அப்படியென்றால் அங்கே ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் ழரீஹை முத்தமிட நான் முந்தி நீ முந்தி என்று நின்றதை கட்டாயம் நீ கண்டிருப்பாய். ஆனால் நன்மையை ஏவுதல் எனும் குழுவின் சிலர் அவர்களுக்கு அடித்து தடை செய்கின்றனர்?

மாலிக்: அப்படித்தான்.

சாதிக்: இதன்படி ஷீஆக்களாகிய நாம் மட்டும் நபிமார்களின் ழரீஹை முத்தமிடுகிறோம் இல்லை. மாறாக அனைத்து முஸ்லிம்களும் அதை செய்கின்றனர்.

மாலிக்: இப்படி இருக்கும்போது ஏன் சிலர் அதை முத்தமிடுவதை ஹராம் எனக்கருதி அது ஷிர்க் என்கின்றார்கள்?

சாதிக்: ழரீஹை முத்தமிடுவது ஹராம் அச்செயல் அல்லாஹுக்கு இணை வைத்தல் என்று கூறுபவர்கள் சிறிதளவு முஸ்லிம்களாகும். அவர்கள் தங்களை மட்டும் முஸ்லிம்கள் தாம் சொல்வது தான் சரியானது எனக் கூறிக் கொண்டு மற்ற அனைத்து முஸ்லிம்களையும் காபிர், முஷ்ரிக், இறைவன் அல்லாதவனை வணங்குபவர்கள் என்று சொல்லுகின்றார்கள். இதனால் தான் அவர்கள் வேறு அனைத்து இஸ்லாமிய பிரிவுகளையும் காபிர் என்று கூறுகின்றனர். ஹிஜாஸிலே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் ழரீஹை முத்தமிட நிற்கின்ற முஸ்லிம்களை நன்மையை ஏவுதல் எனும் குழுவின் சிலர் அவர்களை அடித்து, இன்னும் அவர்களை காபிரே! முஷ்ரிகே! ... பன்றியே! நாயே! போன்ற மிகவும் மோசமான வார்த்தைகளால் ஏசுவதை நிச்சயம் நீ கண்டிருப்பாய். அவர்களின் பார்வையில் பேசப்படுபவர் ஷீஆவாகவோ அல்லது சுன்னா ஹனபி, மாலிகி, ஷாஃபி, ஹம்பலியாகவோ அல்லது வேறு பிரிவுகயாக இருக்கின்றார்கள் என்ற வித்தியாசம் கிடையாது.

மாலிக்: ஆமாம், நீ சொல்வதை நானும் கண்டேன். இல்லை அதை விட மோசமான சம்பவங்களையும் கண்டேன். அதாவது எவராகினும் ஒருவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் ழரீஹை முத்தமிட முனைகின்ற போது அவரை அங்கு நிற்கின்ற படையினர் அவர்களது கைகளில் வைத்திருக்கும் அசாவினால் அவரை அடித்தனர். சிலவேலை அவரின் தலை உடைந்தது இரத்தம் ஓடியது. அல்லது கையினால் ஓங்கி நெஞ்சில் அடித்தனர் இதன் மூலம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைக் கண்ட நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

ஆச்சிரியமாக உள்ளதே! அல்லாஹுதஆலா இந்த கூட்டத்தினரையா முஸ்லிம்களுக்கு தங்களது வாழ்க்கையில் எற்படும் ஆத்மீக் இலௌஹீகம் சம்பந்தப்பட்ட விடயங்களை சொல்லிக் கொடுப்பதற்கு ஆக்கியுள்ளான்? இவர்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்கள் என தங்களுக்கு பெயர் சூட்டிக் கொண்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகின்றனறே!

சாதிக்: விடயத்திற்கு வருவோம். நீங்கள் உமது பிள்ளைய முத்தமிடுகின்றீரா?

மாலிக்: ஆமாம்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next