ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.கப்ருகளை தரிசித்தல்

தற்காலிய திருமணம்

நூல் அறிமுகம்

பதிப்புரை

எல்லாப் புகழும் சர்வ வல்லவமையும் கொண்ட அல்லாஹ்வுக்கே உரியன. சாந்தியும் சமாதானமும் சத்தியத்தை உலகில் முழங்கச் செய்த உத்தம நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும், நாயகத்தின் வாழ்க்கை வழி முறையை அவ்வப்போது மக்களுக்கு எடுத்துக் கூறி அதில் மாற்றம் ஏற்பட விடாது பாதுகாத்து அதற்காவும் தங்கள் உயிர்களை அற்பணம் செய்த, சகல விதமான அழுக்குகள், அசுத்தங்களை விட்டும் அல்லாஹ்வினாலேயே பரிசுத்தம் செய்யப்பட்ட அன்னாரின் கண்ணியம் வாய்ந்த புண்ணிய குடும்பமான அஹ்லுல் பைத்தினர் மீதும் அவர்களது வழியை இறுதி வரைக்கும் பின்பற்றி நடக்கும் அனைவர் மீதும் உண்டாவாக.

அண்மைக் காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள், குறிப்பாக ஈரானிலும் இராக்கிலும் ஏற்பட்ட நிகழ்வுகள் காரணமாக ஷீயா முஸ்லிம்கள் பற்றி நிறையவே தொடர்பு சாதனங்கள் பேசத் தொடங்கின. ஷீயா முஸ்லிம்கள் பற்றி தாறுமாறான எண்ணக் கருக்கள் உலக முஸ்லிம்களிடையே பரவ விடப்பட்டன.

இதனால் ஷீயாக்களின் நம்பிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி ஆதாரபூர்வமாக விளக்கும் நூல்களின் தேவை நீண்ட காலமாகவே உணரப்பட்டு வந்தது. அப்பாரிய இடைவெளியை நிரப்பும் விதத்திலும் நமது இளம் சந்ததியினர் பயன்பெறும் வகையிலும் நாம் இந்நூலை வெளியிடத் தீர்மானித்தோம்.

அஹ்லுல் பைத் நேசர்களாகிய நமது நம்பிக்கைக் கோட்பாடு, நமது அன்றாட நடைமுறை வாழ்வுக்கு உதவும் பிக்ஹ் சட்டதிட்டங்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி முதல் இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் வரையிலான பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறு, அல்லாஹ்வோடு தனியாக உரையாடுவது போன்ற உணர்வைக் கொடுக்கும் பிரார்த்தனைகளின் தொகுப்பு என பல்வேறு புத்தகங்களை தமிழே வெளிவந்துள்ளன. இந்த வரிசையிலே நாமும் முதன் முறையாக கருத்துவேறுபாடுள்ள சில விடயங்களை இதில் தழிழ் தொகுத்து இந்நூலை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

உங்கள் கைகளில் தவழும், 'ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்' எனும் நூல் அரபு மொழியில் 'ஹகாயிக் அனிஷ் ஷீஆ' என்ற பெயரில் ஹஸரத் ஆயதுல்லாஹ் அல் உழ்மா செய்யித் சாதிக் ஹுஸைனி ஷீராஸி அவர்கள் மூலம் எழுதப்பட்டு முதன் முiறாக இராகின் நஜப் நகரிலே வெளியிடப்பட்டது. பல மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு பல முறை பதிப்பிக்கப் பட்ட இந்நூலினை முதன் முதலில் தமிழ் மொழியில் தருவது பற்றி நமது நிறுவனம் பெருமிதம் அடைகின்றது.

உலகின் பல நாடுகளில் ஏராளமான தமிழ் பேசும் ஷீயாக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை யாவரும் அறிவர். தமிழில் ஷீயாக்கள் பற்றிய நூல்கள் அரிதாக இருப்பது அவர்களுக்கும் அவர்களைப் பற்றி வாசித்தறிந்து கொள்ள விரும்பும் ஏனையோருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. கவலையைக் கொடுக்கின்றது. அவைகளை நாம் நிவர்த்தி செய்ய இது போன்ற மேலும் பல நூற்களை மிக விரைவில் தமிழில் மாற்றி அம்மொழி பேசும் மக்களின் கைகளில் தவழ வைக்க உத்தேசித்துள்ளோம்.

இதிலே இந்நூலாசியரியர் ஹஸரத் ஆயதுல்லாஹ் அல்உழ்மா செய்யித் சாதிக் ஹுஸைனி ஷீராஸி அவர்கள் கருத்து வேறுபாடுள்ள, குழப்ப வாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் குழப்பைத்தை ஏற்படுத்த முன்வைத்துள்ள சில விடயங்களை அல் குர்ஆன், அல்ஹதீதுகளைப் பயன் படுத்தி உரையாடல் அமைப்பில் தந்துள்ளதை இட்டு அவருக்கும் அதை தழில் மொழி பெயர்த்த எமது மொழி பெயர்ப்புக்கு குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறி அல்லாஹ் அவர்களுக்கு  நற்கூலிகளை வழங்குவானாக எனப் பிரார்தனை செய்கின்றோம்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next