ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.பாக்கிர்: ஆமாம், இது வீண்விரம் இல்லை, மாறாக அது இறை அடியார்களை கண்ணியப்படுத்துவது என்பதையும் தெளிவு, உறுதிப் படுத்துகின்றது. உண்மையில் இச்செயல் இஸ்லாத்தையும் கண்ணியப்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இஸ்லாத்தை கண்ணியப்படுத்தும் ஒவ்வொரு செயலும் இறைசின்னங்களாகும். இதைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

' ... ومن شعائر الله فانـها من تـقوي الـقلوب'

'எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தில் நின்றும் உள்ளதாகும்.' (சூரா ஹஜ் வசனம் 32 )

இதன்படி இறையடியார்களுடைய அடக்கதளங்களை அலங்கரிப்பது இறைசின்னங்களில் உள்ளதாகும். எவர் அதைச் செய்கின்றாரோ அவர் இறை அருளைப் பெருவார் என்பதில் ஐயமில்லை.

சாபிர்: உனது நேரத்தை எடுத்ததற்காக வேண்டி உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை இருளில் இருந்து வெளியில் கொண்டு வந்தற்கு உனக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வரைக்கும் நானும் இச்செயல் ஆகுமென தனக்குத் தானே புரியவைக்க கடுமையாக சிந்தித்தேன் ஆனால் அது என்னால் முடிய வில்லை. இப்போது நீ எனக்குத் தெளிவு படுத்தி விட்டாய். இறுதியாக உனது இந்த தெளிவான விளக்கம் தொலைந்த என்னை மறுபடியும் பெற்றுக் கொள்ள காரணமாகிட்டு.

பாக்கிர்: இந்த புனிதஸ்தலங்களை அலங்கரிப்பது பற்றிய உனது அனைத்துச் சந்தேகங்களும் நீங்கி விட்டதா?

சாபிர்: ஆமாம், இன்னும் இச்செயல் குர்ஆனுடைய அத்தியாயத்தைக் கொண்டு, 'எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தில் உள்ளதாகும்.' முஸ்தஹப்பு என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

பாக்கிர்: இன்னும் இது பற்றி உமக்கு சந்தேகமிருக்கின்ற அல்லது தெளிவில்லாது இருக்கின்ற எவ்விடயத்தைப் பற்றிப் பேசி அதை தவறாக அறிந்திருப்பதை தெளிவு படுத்த நான் தயாராக இருக்கின்றேன். அப்படி இருந்தால் கேட்டுக் கொள்.

சாபிர்: மிகவும் நன்றி, அல்லாஹ் உனக்கு மேலும் நன்மையைத் தருவானாக.

ழரீஹை முத்தமிடல்

(ழரீஹ்: கப்ருக்கு மேல் வைக்கப்படும் நான்கு பக்கமும் இரும்பினால் செய்யப் பட்ட சதுரப் பெட்டி)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next