ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.சாபிர்: இல்லை. ஒரு போதும் இல்லை.

பாக்கிர்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களும் இப்பாரிய சொத்தில் கை வைக்க வில்லை. ஏன் சிறிதளவேனும் அதிலிருந்து பாவிக்க வில்லை. அக்காலத்தில் இஸ்லாத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு இப்படியான சொத்துக்கள் தேவையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் இறை மார்க்கத்தைப் பரப்ப, தான் நபியாக அனுப்பப் பட்டதின் நோக்கத்தை நிவர்த்தி செய்ய இப்படியான சொத்துக்கள் தேவையாக இருந்தும் ஏன் அவர்கள் அதைப் பாவிக்க வில்லை? என சிலவேளை கேட்கக் கூடும்.

இதன்விடை அதவாது, கஃபாவில் இவ்வளவு சொத்து இருப்பது மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் கண்ணியத்தையும் மதிப்பையும் அதிகரிக்கின்றது. ஆனால் ஒன்றை மறந்து விடக் கூடாது நாம் கஃபாவைப் பற்றி சிந்திக்கும் அல்லது கற்பனை செய்வதை விட அல்லாஹ்விடத்தில் அதன் கண்ணியம் உயர்ந்ததாகும். இந்த சொத்துக்கள் அதன் கண்ணியத்தை அதிகரிக்கவுமாட்டாது. இப்படியான சொத்துக்கள், பொருட்கள் இல்லாது இருப்பது அதன் கண்ணியத்தைக் குறைக்கவுமாட்டாது.  இமாம் அலி இப்னு அபீதாலிப், இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன், இமாம் ரிழா அலைஹிமுஸ்ஸலாம் ஆகியோரிகளின் ஹரத்தினில் இருக்கும் தங்க மினாரா, வெள்ளிக் கதவு இதைப் போன்றவையே. இவைகள் இருப்பது கொண்டு அவர்களது கண்ணியம் அதிகரிக்கவும் மாட்டாது. இல்லாது இருப்பதனால் குறையவுமாட்டாது. உதாரணமாக இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது அடக்கஸ்தளம் எத்தனையோ தடவை தாக்குதலுக்குள்ளாகி இப்போது மினாரா இல்லாது இருக்கின்றது. என்றாலும் அவர்களது அடக்கஸ்தளம் மற்ற அலங்காரங்களை விட சிறந்ததாகும்.

இந்நிலையில் அவர்களது புனிதஸ்தளங்களுக்கு அதிக விலையுள்ள கல்லுகளை அன்பளிப்புச் செய்து அவர்களது கண்ணியப் படுத்துகின்றோம்.

சாபிர்: இவைகள் அவ்லியாக்களை மக்களது பார்வையில் உயர்வடையச் செய்கின்றதா?

பாக்கிர்: ஆமாம், இவ்விடயம் மேலும் உமக்கு தெளிவாக ஒரு விடயத்தைச் சொல்கிறேன். நீ யஹுதிகளின் அடக்கஸ்தளங்களுக்குச் சென்றால் அவர்களது அறிஞர்கள், பெரியார்களின் கப்ருகள் தரைமட்டமாக எவ்வித மோடுகளும் இல்லாது காண்பாய். ஆனால் கிறிஸ்தவர்களின் அடக்கஸ்தளங்களுக்குப் போனால் அங்கே வேறொரு விதத்தில் காண்பாய். அவர்களது அறிஞர்கள், பெரியார்களின் கப்ருகள் கட்டப்பட்டு தங்கம், வெள்ளி போன்ற அலங்காரப் பொருட்களினால் அலங்கரிப்பட்ட நிலையில் காண்பாய். முஸ்லிமான நீ இவ்விரண்டையும் பாத்தில் என கருதுகிறாய். எனவே இவ்விரண்டு அடக்கஸ்தளங்களையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதில் எது எனது கவணத்தை ஈர்க்கின்றது. உனக்கு பெரிதாக தெரிகின்றது? யஹுதிகளின் அடக்கஸ்தளமா? அல்லது கிறிஸ்தவர்களின் அடக்கஸ்தளமா?

சாபிர்: யதார்த்தில் இவ்விரண்டையும் பார்க்கின்ற போது அதில் கிறிஸ்தவர்களின் அடக்கஸ்தளமே பெரிதாகவும், யஹுதிகளின் அடக்கஸ்தளம் மிகவும் கீழ்தரமாகவும் எண்ணத்தில் தோன்றும்.

பாக்கிர்: இதன்படி ஷீஆக்களும் சுன்னாக்களும் நபிமார்கள், இமாம்களின் கப்ருகளின் மேல் கட்டும் மண்ணரைகளும், மினாராக்களும் மேலும் அதை பல வகையான அலங்காரப் பொருட்களால் அலங்கரிப்பதும் அவர்களை கண்ணியப்படுத்துவது என்ற நோக்கத்திரல்;தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

சாபிர்: நீ சொல்வது சரிதான். இந்த உமது நோக்கம் அது வீண்விரயமானது என்பதையும் போக்குகின்றதா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next