ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.பாக்கிர்: இல்லை.

சாபிர்: இதனால் இவ்வேலைகள் வீண்விரயமாகும். இதைப் பற்றி இறைவன் கூறுகின்றான். ' ولا تـبـذر تـبـذيـرا  ان الـمـبـذريـن كانــــــوا اخــوان الـشـيـاطــين 'வீண்விரயம் செய்யாதீர்கள் ஏனெனில் வீண் விரயம் செய்பவர்கள் ஷைதானுடைய சகோதரர்களாகும்' (17: 26-27)

பாக்கிர்: கஃபாவை அலங்கரிக்கப் பட்டுள்ளதையும் அதன் தொங்க விடப்பட்டிருக்கும் தங்கம் வெள்ளிகளைப் பற்றி என்ன சொல்லுகிறாய்?

சாபிர்: சொல்வதற்கு ஒன்றுமில்லை. தெரியாது.

பாக்கிர்: அறியாமைக் காலம் என வர்ணிக்கப்படும் அய்யாமுல் ஜாஹிலிய்யாக் காலம் தொட்டு இன்று வரை எல்லா இடங்களிலிருந்தும் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணப் பொருட்கள் கஃபாவுக்கு வழங்கப்படுகின்றது. 'இப்னு கல்தூன்' என்பவர் 'அல் முகத்திமா' என்ற தனது நூலில் கூறியுள்ளதாவது: 'ஜாஹிலிய்யாக் காலத்திலிருந்து உம்மத்துக்கள் கஃபாவை கண்ணியப்படுத்துகின்றனர். கிஸ்ரா (பாரசீக பேரரசர்) போன்றவர்கள் அதிகமான பொருட்களை கஃபாவுக்கு அனுப்பினர். அப்துல் முத்தலிப் அவர்கள் ஸம்ஸம் கிணற்றைத் தோன்றும் போது கண்டெடுத்த வால் மற்றும் தங்கப் பொருட்கள் பிரபல்யமான சம்பவம். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அங்கிருந்த கிணற்றிலே மன்னர்களால் கஃபாவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்த இரண்டு மில்லியன் தங்க தீனார்களை எடுத்தார்கள். அதன் நிறை இருநூறு கன்தார் ஆகும். (ஒவ்வொரு கன்தாரும் இருநூறு ராத்தல்) ஹஸரத் அலி இப்னு அபூதலிப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களைப் பார்த்துச் சொன்னார்கள்: ' யா ரஸுலல்லாஹ், இச்செல்வங்களிலிருந்து (முஸ்ரிகீன்களுடன்) போர் செய்ய பயன் படுத்துவது சிறந்தது என்றார்' ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் இவ்வாறு செய்ய வில்லை. கலீபா அபூ பக்கர் கூட அதை கவனிக்க வில்லை. (இப்னு கல்தூன் இப்படி அறிவிக்கின்றார்) அபூ வாயில் என்பவர் ஸைபதப்னு உஸ்மான் என்பவரிடமிருந்து இவ்வாறு அறிவிக்கின்றார். 'நான் கலீபா உமரிடம் இருந்தேன்.  அப்போது உமர் (கஃபாவில் இருக்கும்) எல்லா தங்கம் வெள்ளிகளையும் கொண்டு வாருங்கள் அதை முஸ்லிம்களுக்கு மத்தியில் பங்கிடப் போகிறேன் என்றார்.

நான்: என்ன வேலை செய்யப் போகிறீர் என்றேன்.

அவர்: ஏன் என்றார்.

நான்: உனக்கு முன்னிரந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களும் அபூபக்கரும் இந்த வேலையைச் செய்ய வில்லை.

உமர்: அப்படியானால் கட்டாயம் அவர்களைப் பின்பற்றத்தான் வேண்டும்.' (ஆதாரம் தாரீகு இப்னு கல்தூன் பாக 1 பக் 440, முதலாம் கிதாபு ஆறாம் பிரிவு, நான்காம் பாடம் ' அல் மஸாஜித் வல் புயூதுல் அழீமா ஃபில் ஆலம்' )

சாபிரே! இப்போது உன்னிடம்  கேட்கிறேன். அத்தனை தங்கம் வெள்ளிகளையும் கஃபாவா பயன் படுத்துக் கொண்டிருந்தது? அல்லது (இவைகளை விட்டும் பரிசுத்தமாகிய) அல்லாஹுதஆலாவா அவைகளில் இருந்து ஏதாவது பயன் பெற்றானா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next