ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.சாபிர்: இன்று உன்னிடம் இருப்பது எமக்கு பெருமையாகும்.

பாக்கிர்: நிறைய வேலைகள் இருக்கின்றன அவைகளை விட்டு விட்டு குடும்பத்தினரை பார்ப்பதற்கு வந்தேன். மன்னித்துக் கொள். வேறொரு நாள் பார்த்துக் கொள்வோம்.

சாபிர்: இல்லை, இரண்டு நண்பர்கள் சுமார் பத்து வருடங்களாக சந்திக்காது இருந்து இன்று ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர். ஆதலால் அவர்கள் பேசாது போக முடியுமா? நான் உன்னுடைய இஸ்லாமிய சகோதரனாகும். மறுபுறம் எனக்கும் முஃமினான ஒரு சகோதரருக்கும் 'ஷீஆ' 'சுன்னா' விடயத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. நான் உன்னை எல்லா விடயத்திலும் நம்புகிறேன் நீ ஒரு போதும் இல்லாததைச் சொல்ல மாட்டாய் என்பதும் எனக்குத் தெரியும். எனவே இது விடயமாக உன்னுடன் பேச ஆசைப்படுகிறேன். இதன் மூலம் உண்மை எனக்குத் தெளிவாகும் என நம்புகிறேன். இதற்காக வேண்டியாவது என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொள்.

பாக்கிர்: சரி, வருகிறேன்.

        அப்போது இருவரும் சாபிருடைய வீட்டை நோக்கி நடக்களாயினர்.  இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை முடிந்ததின் பிறகு பாக்கிர் சாபிரிடம் உமக்கும் அந்த ஷீஆ நண்பருக்கும் இடையில் எவ்விடயத்தில் பேச்சு வார்த்தை நடந்து எனக்கேட்டார்.

சாபிர்: தங்கம் வெள்ளி போன்ற ஆபரணப் பொருட்களால் நபிமார்கள், இமாம்கள், ஆலிம்கள், முஃமின்கள், சாலிஹீன்களின் கப்ருகளை அலங்கரிப்பது பற்றி பேசப்பட்டது.

பாக்கிர்: இது என்ன தவறுள்ளது?

சாபிர்: இச்செயல் ஹராம் இல்லையா?

பாக்கிர்: ஏன் ஹராமாக இருக்கனும்?

சாபிர்: மரணித்தவர்கள் இப்படியான அலங்காரங்களிலிருந்து பிரயோசணம் அடைகின்றனரா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next