ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஜஃபர்: இதனால் தான் நான் அஹ்லுல் பைத்துக்களுடைய மத்ஹபைத் தேர்ந்தெடுத்தேன். ஷீஆவானேன். 'வலீத்' என்ற எனது பெயரையும் 'ஜஃபர்' என மாற்றிக் கொண்டேன். நான் மற்றவர்களின் கரத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த காலமெல்லாம் உண்மை என்னிடம் தான் இருக்கின்றது என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் உண்மையை உரிய படி தேட ஆரம்பித்த போது தான் இந்த நிலையை அடைந்தேன்.

ஒவ்வொரு மனிதரும் தன்னிடமுள்ள பிடிவாதக் கொள்கையை விட்டு உண்மையை காணும் போது அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருந்தால், அதை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால் நிச்சயம் அதைப் பெற்றுக் கொள்வார்கள்.

புவாத்: இதன் பிறகு உண்மையை அறிந்து அதன் படி நடக்க முயற்சி செய்வேன். எப்போதாவது, யாரிடமாவது அதைக் காணும் போது அதைப் பின்பற்றுவேன். இதன் பால் என்னை விழிப்புரச் செய்த உனக்கு எப்போதும் எனது நன்றிகள். இத்தோடு இதை முடித்துக் கொண்டு செல்வதற்கு அனுமதி வேண்டுகிறேன் ஏனெனில் வேறொருவருடன் சந்திக்க நேரம் கொடுத்துள்ளேன்.

ஜஃபர்: போய் வா. அல்லாஹ் உன்னை பாதுகாப்பான்.

புவாத்: பீ அமானில்லாஹ்

ஜஃபர்: நன்றி.

அவ்லியாக்களின் ஹரம்களை அலங்கரித்தல்

சாபிர்: அஸ்ஸலாமு அலைக்கும்

பாக்கிர்: அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்

சாபிர்: நல்வரவு

பாக்கிர்: இங்கே எனது சாச்சாவின் மகன் இருக்கின்றார். அவரைக் காண வந்தேன்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next