ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஜஃபர்: உலகத்தாரின் கண்ணோட்டத்தில் தீனை கண்ணியப் படுத்துகின்ற அதை பெரிது படுத்துகின்ற ஒவ்வொன்றுக்கும், அது இருப்பது ஹராம் என எவ்வித ஹதீதும் நஸ்ஸும் இருக்கக் கூடாது இப்படியான ஒன்றுக்கு 'ஷஆயிர்' இறை அத்தாட்சி, இறை சின்னங்கள் எனப்படும்.

புவாத்: இந்த கட்டிடங்கள் தீனைக் கண்ணியப்படுத்துகின்றதா?

ஜஃபர்: ஆமாம்.

புவாத்: இது எப்படி முடியும்?

ஜஃபர்: இஸ்லாத்தின் பெரியார்களின் கப்ருகளைக் கட்டுவதிலும் அதை இடிப்பதை தடை செய்வதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதைத் தவிர வேறில்லை என்பதில் சந்தேகமில்லை. உதாரணத்திற்கு சொல்லப் போனால், ஒருவர் ஒரு மரத்தை கப்ருக்கு அருகில் நாட்டுகின்றார். இது அந்த கப்ருக்குல் இருப்பவரைக் கண்ணியப்படுத்துவது இல்லையா?

புவாத்: அப்படித்தான்.

ஜஃபர்: இந்நிலையில் அந்த கப்ருக்கு மேல் கட்டிடத்தைக் கட்டும் போது நிச்சயமாக அது அந்த கப்ருக்குல் இருப்பவரைக் கண்ணியப்படுத்தியதாக ஆகும். எனவே மார்க்கத்தின் பெரியார்களை இமாம்களை அவ்லியாக்களை கண்ணியப்படுத்துவது தீனை கண்ணியப்படுத்தியது போலாகும். இப்பெரியார்கள் மக்களை தீனின் பால் அழைத்து அதன் பக்கம் வழிகாட்டிக்  கொண்டிருந்தார்கள். உமது கருத்துப்படி ஒருவர் ஒரு கட்சி தலைவரை அல்லது மதத் தலைவரை கண்ணியப் படுத்துகின்றபோது அவர் அந்த கட்சியை அல்லது அந்த மதத்தை கண்ணியப் படுத்தினார் என்பதில்லையா?

புவாத்: நீ சொல்வது போன்றுதான்.

ஜஃபர்: இதன்படி, அவ்லியாக்களுடைய கப்ருகளைக் கட்டுவது அவர்களைக் கண்ணியப்படுத்துவது இறைவனைக் கண்ணியப்படுத்துவதாகும். இது இஸ்லாத்தின் கண்ணியமாகும். சுருங்கச் சொன்னால், எதன் மூலம் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த முடியுமோ இன்னும் எது இஸ்லாத்தின் எழுச்சிக்கு காரணமாக இருக்குமோ அது இறைவன் தன் அருள் மறையில் கூறுகின்ற இறை சின்னங்கள், இறை அத்தாட்சிகளாகும். அல் குர்ஆன் சொல்கின்றது: 'எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தில் உள்ளதாகும்'

புவாத்: இந்நிலையில் நபிமார்களின், இமாம்களின், இறை நேசர்களின் கப்ரகளை இடித்து அழிப்பது இஸ்லாத்தை அவமதிக்கின்ற இழிவு படுத்துகின்ற ஒரு செயலாகும். ஏனெனில் இச்செயல் எமது பெரியார்களை இழிவு படுத்துவதற்காகும். அவர்களை இழிவு படுத்துவது மார்க்கத்தை இழிவு படுத்தவது போலாகும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next