ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.புவாத்: நீ சொல்வதைக் கேட்க ஆவலாக இருக்கின்றேன். விரும்பயதைச் சொல் கேட்கிறேன்.

ஜஃபர்: நமது இப்போதைய உரையாடலின் போது கப்ருகளின் மேல் மண்ணரை கட்டுதில் எவ்வித பாவமுமில்லை, அது விலக்கப்படவுமில்லை என தெளிவாகியது?

புவாத்: ஆமாம், இவ்விடயத்தில் நானும் கூட நீ கொண்டிருக்கும் கொள்கையுடையவன் தான்.

ஜஃபர்: இப்போது அவ்லியாக்களின் மண்ணரைகளை கட்டி அதன் மீது ழரீஹ் (நான்கு பக்கமும் இரும்பினால் செய்யப் பட்ட சதுரப் பெட்டி) யை வைப்பது போன்ற அனைத்து வேலைகளும் முஸ்தஹப்பான செயலாகும். அதைச் செய்பவர்கள் இறைவனிடத்தில் நன்மைகளைப் பெறுவார்கள்.

புவாத்: எப்படி?

ஜஃபர்: அல்லாஹுதஆலா சொல்லுகின்றான்:

' ... ومن شعائر الله فانـها من تـقوي الـقلوب'

'எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தில் நின்றும் உள்ளதாகும்.' (சூரா ஹஜ் வசனம் 32 )

இதன்படி எதுவெல்லாம் இறை சின்னங்களாக இருக்கின்றனவோ அவைகளை கண்ணியப்படுத்துவது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் முஸ்தஹப்பாகும்.

புவாத்: அது சரி. ஆனால் அவ்லியாக்களின் கப்ரகளை கட்டுவது எப்படி இறை சின்னங்களாகும்?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next