ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.புவாத்: நீங்கள் சொல்வது போல் கப்ருகளின் மேல் மண்ணரை கட்டுவது ஷிர்க் இல்லை என்றிருந்தால் ஏன் ஹிஜாஸ் மாகாண அறிஞர்களின் பத்வாக்களின் (மார்க்கத் தீர்ப்பு) படி அவ்லியாக்களின் கப்ருகள், உங்களது இமாம்களின் கப்ருகளின் மேல் கட்டப்பட்டிருந்த மண்ணரைகளை இணைவைப்பு இன்னும் இறைவன் அல்லாதவர்களை வணங்குதல் என்ற சாட்டுப்போக்;கை வைத்துக் கொண்டு இடித்து தரமட்டமாக்கினார்கள்?

ஜஃபர்: ஹிஜாஸில் இருந்த அனைத்து அறிஞர்களும் இவ்விடயத்திற்கு ஆகுமமென பத்வா கொடுக்க வில்லை. அப்போது இருந்த சிலரே இதற்கு பத்வாக் கொடுத்தனர். மதினாவில் இருந்த வயோதிபர் எனக்குச் சொன்னார்: 'பகீயில் அடக்கப்பட்டிருந்த இமாம்களின் கப்ருகளை, மண்ணரைகளை இடித்து தரைமட்டமாக்குவதற்குறிய பத்வா மார்க்கத்தீர்ப்பு கொடுக்கப் பட்டபோது அதை ஹிஜாஸில் பல அறிஞர்கள் எதிர்த்தார்கள். இச்செயல் ஷிர்க் இல்லை மாறாக இது இஸ்லாமிய ஷரீஆவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, புகழப்பட்ட ஒரு முஸ்தஹப்பான விடயம் என கூறி ஆதாரமும் முன்வைத்தனர். அல்லாஹ் கூறுகின்றான்:

' ... ومن شعائر الله فانـها من تـقوي الـقلوب'

'எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தில் நின்றும் உள்ளதாகும்.' (சூரா ஹஜ் வசனம் 32 )

என்பதைக் கூறி கப்ருகளை கட்டுவது ஷிர்க் என வாதிட்டவர்களின் வாதத்தை  முறியடித்தனர். இந்த அவர்களின் எதிர்ப்பு அவர்கள் அவர்களை சமுகத்தை விட்டும் தூக்கிவீச காரணமாகியது. இன்னும் சிலர் அரசு உத்தியோகத்தையும் இழந்தனர்.

புவாத்: நான் கூட இப்படியான சிந்கனையில் தான் இருந்தேன் அதாவது மண்ணரை கட்டுவது ஹராம், ஷிர்காக இருந்தால் ஏன் அது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்து இன்று வரைக்குள்ள முஸ்லிம்களுக்கு விளங்க வில்லை. மண்ணரை கட்டுவதை தடுத்து நிறுத்தவில்லை? சுமார் பதின்மூன்று நூற்றாண்டுகளாக இச்செயல் ஹராம் என அவர்களுக்கு விளங்க வில்லையா?

ஜஃபர்: நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மண்ணரை கட்டுவதை அனுமதித்துள்ளார்கள். அதைத் தடை செய்ய வில்லை. 'ஹிஜ்ர் இஸ்மாயீல்' ஹஸரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும்  இன்னும் அவரது தாய் அன்னை ஹாஜரா அவர்களினதும் அடக்கஸ்தளமாகும். இது இந்த வாக்கு வாதத்திற்கு மிகப் பெரிய சான்றாகும். மேலும் ஹஸரத் இப்ராஹீம், ஹஸரத் மூஸா அலைஹிமாஸலாம் போன்ற நபிமார்களின் அடக்கஸ்தளம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் காலத்திலிந்து இன்று வரை புனிதஸ்தளங்களாக இருந்து வருகின்றது. அதை நாயகமோ அல்லது குலபாக்களோ இச்செயலில் இருந்து தடுக்க வில்லை. இச்செயல் ஷிர்க், ஹராம் என்று இப்போது சிலர் சொல்வது போல் இருந்திருந்தால் நிச்சயம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அவைகளை இடித்து தரை மட்டமாக்குமாறு கட்டளையிட்டிருப்பார்கள். இன்னும் அங்கு செல்வதை தடை செய்துமிருப்பார்கள். ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அதைச் செய்ய வில்லை. அதிலிருந்து இமாம்கள், சாலிகீன்களின் கப்ருகளின் மேல் மண்ணரை கட்டுவது ஷிர்க்கோ அல்லது ஹராமோ இல்லை. அங்கு தொழுவதிலும் பிரச்சினையில்லை அது ஆகுமான செயலாகும் என அறிய முடிகின்றது.

மறுபுறம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மரணித்த பிறகு அவர்களுடைய அறையிலே அடக்கம் செய்யப்பட்டு அதன் கதவும் மூடப்பட்டது. இதன்படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் கப்ரு நான்று சுவர்களாலும் ஒரு மோட்டாலும் மூடப்பட்ட அறையில் தான் இருந்தது. எனவே இச்செயல் கூடாது என நாயகத் தோழர்களில் ஒருவர் நாகயம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூற கேட்டிருந்தால் நிச்சயம் அதை அங்கு சொல்லியிருப்பார், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களை அங்கே அடக்கம் செய்திருக்க மாட்டார்கள். அல்லது அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டிந்தாலும் அந்த அறையை கப்ரு அதன் நடுவில் இருக்காது வண்ணம் இடிப்பது வாஜிபாயிருக்கும். இச்செயலை எந்தவொரு நபித்தோழரோ அல்லது குடும்பத்தினரோ செய்ய வில்லை அவ்வாறு செய்வதை ஹராம் என கருதினார்கள். இதிலிருந்து நாம் கப்ருகளின் மேல் மண்ணரை கட்டுவது ஷிர்க் மட்டுமில்லை அது ஹராமும் இல்லை என அறிய முடிகின்றது.

புவாத்: உண்மையை எனக்கு விளங்க வைத்து விட்டாய். குப்ரின் மேல் மண்ணரை கட்டுவது ஷிர்முpல்லை. ஹராமுமில்லை. இது விடயமாக சொல்லப்படுவபவை ஸனதில்லாதவைகள். ஏற்றுக் கொள்ள முடியாதவை என தெளிவு படுத்தி விட்டாய் இதற்காக உனக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜஃபர்: நானும் கூட நீ உண்மையை அறிய ஆவலாக வந்து விடயத்தைக் கேட்டாய். அதைப் பின்பற்றி நடக்க ஆவலாக உள்ளாய். இன்னும் சரியானவற்றின் வழி காட்டலைப் பின் பற்றத் துடிப்பதையிட்டு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே உண்மையை அறிவதில் உனது பார்வையை மேலும் அதிகரிக்க செய்ய இன்னும் உன்னோடு பேச விரும்புகிறேன் உனக்கு நேரமுண்டா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next