ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.  -சில நபிமார்களின் கப்ருகள், உதாரணமாக ஹஸரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு ஜோர்டான் நாட்டின் 'அல் கலீல்' என்ற ஊரில் இருக்கின்றன. அது மிகப் பெரிய கட்டிடம், மினாரா, மண்ணரையைக் கொண்டிருக்கின்றது.

  -ஹஸரத் மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் கப்ரு ஜோர்டானில் பைதுல் மக்தஸ், அமான் என்ற ஊருகளுக்கு இடையில்  இருக்கின்றது. இதுவும் பெரிய மண்ணரையைக் கொண்டுள்ளது.

  -பக்தாதரில் உள்ள அபூ ஹனீபாவுடைய கப்ருள்ள இடம் மற்ற இடங்களை விட வித்தியாசமாக காணப்படுகின்றது. அங்கும் பெரிய மண்ணரை காணப்படுகிறது.

  -அபூ ஹுரைராவுடைய கப்ரு எகிப்தில் இருக்கின்றது. இது மக்கள் தரிசிக்கச் செல்லும் ஒரு இடமாக இருக்கின்றது. இதுவும் பெரிய மண்ணரையைக் கொண்டுள்ளது.

  -பக்தாதில் இருக்கும் அப்துல் காதிர் ஜுலானி என்பவருடய கப்ரு பெரும் நிலப்பரப்பையும் பெரிய கட்டிடத்தையும் மண்ணரையையும் கொண்டுள்ளன.

இன்னும் இஸ்லாமிய நாடுகளிலே நபிமார்கள் இமாம்களுடைய கப்ருகள் மண்ணரை கட்டப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. அதற்கு கூடுதலான அளவு அன்பளிப்புகள் கிடைக்கின்றது. இப்படியாக வந்து சேரும் நன்கொடைகள், அன்பளிப்புகள் இன்னும் நேர்ச்சைகள் அனைத்தையும் அவைகளை புணர்நிருமானம், பாதுகாப்பதற்கு உபயோகிக்கப் படுகின்றது. மதஹ்புடைய கண்ணோட்டத்தில் அன்றைய முஸ்லிம்கள் இச்செயலை மேற்கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள் ஒரு போதும் அவர்கள் மக்கள் அங்கு செல்வதை தடுக்க வில்லை. இவைகளை திருத்தம் செய்வதற்கும் விரைந்து சென்றார்கள். மக்களை அதன் பால் ஆர்வமூட்டினார்கள். இதன் படி நாம் மாத்திரம் கப்ருகளின் மீது மண்ணரை கட்ட வில்லை. மாறாக அனைத்து முஸ்லிம்களும் இவ்விடயத்தில் எங்களுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். தங்களது பெரியார்களின் கப்ருகளை கட்டி அதை தரிசிக்க செல்கின்றனர்.

  இரண்டாவது: நாங்களோ ஏனைய முஸ்லிம்களோ ஒரு இறைநேசரின் கப்ருக்கு அருகில் நின்று தொழும் போது நாம் அல்லாஹுக்காகவே தொழுகின்றோம். மாறாக அவ்லியாக்களுக்காக தொழவில்லை.  ஏனெனில் நாம் இப்படியான இடங்களில் தொழ நிற்கின்றபோது கிப்லாவை முன்னோக்கியே நிற்கின்றோம். மாறாக எமது தொழுகை அவர்களுக்காக இருந்திருந்தால் நிச்சயம் நாம் தொழுகை;காக அவர்களது கப்ருகளை முன்னோக்கியவர்களாகவே நின்றிருக்க வேண்டும்.

புவாத்: அப்படியென்றால் நீங்கள் ஏன் அந்த கப்ருகளுக்கு பின்னான் நின்று தொழுகின்றீர்கள், அதை தங்களின் கிப்லாவாக ஆக்குகின்றீர்கள்?

ஜஃபர்: நாங்கள் இந்த கப்ருகளுக்கு பின்னால் நின்று தொழுகின்ற போது நாம் கஃபாவையே எமது கிப்லாவாக நினைக்கின்றோம் ஒருபோது இந்த கப்ருகளை நினைப்பதே கிடையாது. இதை இன்னும் தெளிவாக கூறப்போனால் இப்படி சொல்லலாம் அதாவது ஒருவர் ஒரு இடத்தில் நின்று கிப்லாவை நோக்கி தொழுகின்றார் அவருக்கு முன் பெரிய உயர்ந்த கட்டிடம் இருக்கின்றது. இந்நிலையில் இவ்விடத்தில் தொழுபவர் அக்கட்டிடத்தையா வணங்குகிறார்?!

இதை விடவும் விரிவாக அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் 'கிப்லாவை முன்னோக்கி தொழுதல் அது முஷ்ரிகீன்களின் வணக்கஸ்தளத்திலானாலும் சரி அது ஆகும்', எனக் கூறியுள்ளார்கள்.  தொழுகின்றவருக்கு முன்னிலையில் அல்லாஹ்வுக்கு மாற்றமாக வணங்கப்படும் சிலை இருந்தாலும் சரி. ஏனெனில் தொழுபவரின் கவனம் இறைவனின் பக்கம்தான் உள்ளது. மாறாக இந்த சிலைகளின் பக்கமில்லை. இந்நிலையில் தொழுபவர் அந்த சிலையையா வணங்குகிறார்?!.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next