ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.முஹம்மது அபூசுஹ்ரா கூறுகின்றார்: ' ஷீஆக்கள் மிகவும் பழமை வாய்ந்த அரசியல், இஸ்லாமிய மத்ஹபை கோட்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்....  ( முஹம்மத் அபூ சுஹ்ரா, தாரிகுல் மதாஹிபுல் இஸ்லாமிய்யா)

ஜஃபர்: விரும்பியதைக் கேளு. உண்மையை உரிய படி ஆதாரங்களோடு அறிந்து அதன் படி நடப்பதையே நான் விரும்புகிறேன். இவ்வாறு இல்லாமல் எவ்வித ஆதாரமும் இல்லாது ஒரு விடயத்தை ஏற்பதை நான் வண்மையாக கண்டிப்பவன். உனக்கும் இதைத் தான் சொல்கிறேன். உண்மையை அறிய  வெட்கப்படாது கேட்க வேண்டும்.

புவாத்: அஹ்லுஸ் சுன்னத்தாகிய நாங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அதை நீ ஏற்றுக் கொள்வாயா?

ஜஃபர்: நானும் உண்மையை அறிந்து அதை ஏற்று நடப்பவர்களில் ஒருவனாகும். இதன்படியே நான் படித்து உண்மையை ஷீஆ மத்ஹபுடன் கண்டு அதை ஏற்றுக் கொண்டவன். இன்னும் உனது தாய் தந்தை மற்றும் ஏனைய உரவினர்கள், குடும்பத்தினர் அனைவரும் அஹ்லுஸ் சுன்னாரவச் சேர்ந்தவர்கள் என்பது உனக்கும் தெரியும். எனவே நீ சொல்வது தகுந்த ஆதாரத்துடன் இருந்தால் அதை நானே முதலில் ஏற்பவனாக இருப்பேன்.

புவாத்: ஷீஆக்களாகிய நீங்கள் நபிமார்கள், இமாம்கள், நல்லடியார்கள், ஆலிம்களின் கப்ருகளின் மேல் கட்டிடங்களைக் கட்டுகின்றீர்கள். இன்னும் அவர்களது கப்ருகளுக்கு அருகாமையில் தொழுகின்றீர்கள். உங்களது இச்செயல் ஷிர்க் என்பதில் ஐயமில்லை. முஷ்ரிகீன்கள் சிலை வணங்குவது போல் நீங்களும் அவ்லியாக்களுடைய கப்ருகளை வணங்குகின்றீர்கள்.

ஜஃபர்: இவ்விடயத்தில் நாம் பிடிவாத்ததை தூக்கி வீசி விட்டு உண்மையை அறிபவர்களாக இருப்போம். அவர் இவரின் சொல்பவைகளை விட்டுவிட்டு இவ்விடயம் தெளிவடைய அல் குர்ஆன் அல்ஹதீஸ் முன்சென்ற நல்லடியார்கள் வழி முறைகளை மட்டும் கவனத்தில் கொள்வோம்.

புவாத்: ஆமாம் அது தான் சரி. நானும் இதே கொள்கையையே கொண்டிருக்கின்றேன். கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றாது அதை அறிந்து விளங்கி உண்மையை அறிய ஆவலோடு இருக்கின்றேன்.

ஜஃபர்: இங்கே இரண்டு விடயங்களை தெளிவு படுத்துவது அவசியமென கருதுகின்றேன்.

  முதலாவது: ஷீஆக்களாகிய நாங்கள் மாத்திரம் பெரியார்களின் கப்ருகளின் மீது மண்ணரை கட்டவில்லை. மாறாக எல்லா முஸ்லிம்களும் நபிமார்களின், இமாம்களின் தம் பெரியார்களின் கப்ருகளின் மீது மண்ணரை கட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவைகளில் உதாரணத்திற்காக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

  -நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் மற்றும் இரண்டு கலிபாக்களின் கப்ருகளும் மிகப்பெரிய  மினாராக்களைக் கொண்டுள்ளது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next