நிர்வாக அதிகாரிகளுக்கான ஆலோசனைகள் ஹஸரத் அலி (அலை) வழங்கியதுஉமக்கு மிகவும் நெருக்கமானவர்களும் உம்மைச் சூழ்ந்திருப்பவர்களும் தமது அந்தஸ்தை துஸ்பிரயோகம் செய்து பிரரின் உடமைகளை அபகரித்துக் கொள்வதிலும் அநீதிகள் புரிவதிலும் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை நீர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் அத்தகைய போக்குகளை ஒழித்து விடுவீராக. உமது உறவினர்கள் எவறுக்கும் ஒருசிறிய துண்டுக் காணியையாவது கொடுக்காமலிருப்பதை ஒரு விதியாகவே வகுத்துக் கொள்வீராக. அவ்வாறு செய்வது அவர்கள் பிறரின் நலன்களுக்குப் பாதகமாக இருப்பதைத் தடுத்துவிடும். இறைவனினதும் மனிதரினதும் ஏளனத்துக்கு ஆளாகாமல் நீரும் தப்பித்துக் கொள்ள முடியும்.

ஒருவர் உமது உறவினரா அல்லது அந்நியரா என்ற பேதம் பாராட்டாமல் சகலருக்கும் சமமான நீதி வழங்குவீராக. உமது உறவினர்களில் அல்லது சகாக்களில் எவரேனும் சட்டத்தை மீறினால், தனிப்பட்ட முறையில் உமக்கு வேதனையளித்த போதிலும் அவர்களுக்குச் சட்'டத்தின் மூலம் விதிக்கப்பட்ட தண்டனையை வழங்குவீராக. ஏனெனில் அதுவே தேசத்தின் நலனைக் காக்கும் செயலாகவிருக்கும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், ஏதாவதொரு வகையில் அநீதி இழைத்துவிட்டதாக மக்கள் சந்தேகம் கொள்வார்களாயின் அவர்களோடு மனம் திறந்து உறையாடி அவர்களது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பீராக. இவ்வாறாக உமது உள்ளம் நீதியுணர்வினால் பயன்படுவதோடு மக்களும் உம்மை நேசிக்கத் தொடங்குவார்கள். அது மக்களின் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற உமது விருப்பத்தையும் நிறைவேற்றும்.

சமாதானமும் உடன்படிக்கைகளும்

உமது எதிரியே முன்வைத்தாலும் சமாதானத்துக்கான எந்தவொரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். அது இறைவனின் திருப்திக்கு வழிவகுப்பதால் அந்த வாய்ப்பை நலுவவிடாதீர். சுமாதானம் இராணுவத்துக்கு மன அமைதியைத் தரும். அது உமது கவலைகளைக் குறைத்து தேசத்தில் ஒழுங்கை நிலைநாட்டும். ஆனால் கவனமாக இருப்பீராக! சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போது எச்சரிக்கையுடன் இருப்பீராக. ஏனெனில், சில வகையான எதிரிகள் சமாதானத்துக்குரிய நிபந்தனைகளை விதிக்கும்போது உம்மைப் பாதுகாப்பு உணர்வினால் மனங் குளிர வைப்பார்கள். ஆனால் உமது பாதுகாப்பில் தளர்ச்சி ஏற்படும் போது அவர்கள் மீண்டும் உம்மைத் தாக்கக்கூடும். ஆகவே நீர் ஆகக்கூடுதலான கவனம் எடுக்க வேண்டும். அவர்களது வெளிப்பகட்டுகளில் அளவுக்கு மீறிய நம்பிக்கை வைக்கக்கூடாது. ஆனால் ஒரு சமாதான உடன்படிக்கையில் நீர் யாதாயினும் கடப்பாடுகளை தயக்கமின்றி நிறைவேற்றுவீராக. அது நீர் விசுவாசத்தோடு நிலைநிறுத்த வேண்டிய ஒரு நம்பிக்கைப் பொருப்பாகும். நீர் யாதாயினுமொரு வாக்குறுதி அளித்திருந்தால் உமது முழுப்பலத்தோடும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவீராக. ஏனைய விவகாரங்களில் எத்தகைய கருத்து வேற்றுமைகள் எழுந்த போதிலும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் பார்க்கப் போற்றத்தக்க செயல் யாதொன்றுமில்லை. இதனை முஸ்லிம் அல்லாதவர்களும் உணர்ந்திருக்கின்றார்கள். ஏனெனில் சத்திய வாக்குகளை மீறுவதன் விளைவுகளை அவர்களும் அறிந்திருக்கின்றார்கள். ஆகவே உமது பொருப்புகளை நிறைவேற்றுவதில் எத்தகைய சமாதானமும் கூறாதீர். வுhக்குறுதியை ஒருபோதும் மீற வேண்டாம். உமது எதிரியை ஏமாற்றவும் வேண்டாம். வாக்குறுதியை மீறுவது இறைவனுக்கு மாறான செயவாகும். இறைவனுக்கு எதிராக திட்டவட்டமான விஷமம் புரிபவனே இறைவனுக்கு மாறான செயலில் ஈடுபடுவான்.

நுpச்சயமாக இறைவன் வாக்குறதியளித்தவை முழு மனித குளத்தையும் அரவணைக்கும் நல்லாசிகளாகும். பூமியில் மிக்க பலம் வாய்ந்தவர்களும்கூட இறைவனுடைய வாக்குறுதியிலேயே தஞ்சமடைகின்றார்கள்.ஏனெனில் அதில் தான் ஏமாற்றப்படும் ஆபத்து இல்லாதிருக்கின்றது. எனவே பின்னர் பின்வாங்குவதற்கான சமாதானங்களைக் கூறக்கூடிய வாக்குருதிகளை ஒரு போதும் அளிக்க வேண்டாம். நீர் கடைப்பிடிப்பதாக உறுதி மொழி கூறிய எதனையும் மறுக்க வேண்டும். அன்றி, அது முதலில் கசப்பாகத் தோற்றமளித்தபோதிலும் வாக்குறுதியை மீற வேண்டாம். பயனுள்ள பெறுபேருகளுக்காகப் பொருமையுடன் காத்திருப்பது எந்த அடிப்படையிலும் வாக்குறுதியை முறிப்பதிலும் பார்க்க சிறப்பானதாகும்.

நியாயமான காரணமின்றி இரத்தம் சிந்துவதைத் தவிர்த்துக் கொள்வீராக. ஒருவரை அழித்தொழிக்கும் இச்செயலைவிடத் தீங்கானது எதுவும் இல்லை. தன்னிச்சையாக சிந்தப்படும் இரத்தம் ஓர் அரசின் ஆயளைக் குறைக்கின்றது. நியாயத் தீர்ப்பு நாளில் ஒருவர் முதலில் பதில் கூற வேண்டியது இந்தக் குற்றச் செயலுக்கேயாகும் எனவே கவனம் எடுப்பீராக. உமது அரசின் பலத்தை இரக்கத்தின் மீது காட்டியெழுப்ப வேண்டாம். ஏனெனில் இவ்வாறு சிந்தபபட்ட இரத்தமே இறுதியில் உமது அரசைப் பலவீனப்படுத்தி இதனை மாற்றான் கைக்கு மாற்றிவிடும். ஏனக்கும் எனது இறைவனுக்கும் முன்னால் தன்னிச்சையான கொலைக்கு எத்தகைய சமாதானங்களும் ஏற்றுக்கொள்ளமாட்டா.

கோலைக் குற்றத்துக்கான தண்டனை மரண தண்டனையாகும். ஆதைவிடச் சிறிய குற்றங்களுக்காக அரசாங்கம் விதிக்கும் கசையடியின்போது ஒரு குற்றவாளி இறக்க நேரிட்டால் அவரது உறவினர்கள் கோரும் நட்ஈட்டை வழங்குவதற்கு உமது அரசின் கௌரவம் குறுக்கே நிற்காமல் பார்த்துக் கொள்வீராக.

இறுதி அறிவுரைகள்

சரியான தருணம் வரும்வரையில் ஒரு காரியத்தைச் செய்ய அவசரப்படவோ அன்றி அதற்கான தருணம் வந்த பின்னரும் ஒரு காரியத்தை ஒத்தி வைக்கவோ வேண்டாம். பிழையான காரிணத்தைச் செய்வதில் பிடிவாதமாக இருக்கவோ அன்றி ஒரு பிழையைத் திருத்திக் கொள்வதில் தயக்கம் காட்டவோ வேண்டாம். சகலவற்றையும் அவற்றுக்குப் பொருத்தமான தருணத்தில் நிறைவேற்றுவதோடு சகலவற்றையும் அவற்றுக்குரிய இடத்தில் வைப்பீராக. மக்கள் அணைவரும் ஒருமித்த கருத்துடன் ஓர் இணக்கம் காணும்போது நீர் அவற்றுக்கு மேலாக அவர்கள்மீது உமது சொந்தக் கருத்தைத் திணிக்க முயற்சிக்க வேண்டாம். அவர்களின் தீர்மானத்தின்படி உம்மீது சுமத்தப்படும் பொறுப்பை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கவும் வேண்டாம். மக்கள் உம்மை நோட்டமிட்ட வண்ணம் இருப்பNhதடு நீர் அவர்களுக்காகச் செய்யும் எந்தவொரு காரியத்துக்கும் பதில் கூறியே ஆகவேண்டும். கடமையிலிருந்து சற்றுத் தவறினாலும் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். உமது கோபத்தை அடக்கிக் கொள்வதோடு உமது கைகளையும் நாவையும் கட்டுப்படுத்திக் கொள்வீராக. நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும், கடும் நடவடிக்கைகளெடுப்பதில் தாமதத்தைக் கைக்கொள்வதன் மூலமும் உமது கோபத்தை தணித்து சுய கட்டுப்பாட்டைப் பெறுவீராக. இன்றேல் அநியாயமாக உமது கவலைகளை அதிகரித்துக் கொள்வீர்.

உமக்கு முன்னிருந்த நீதியான, நல்ல ஆட்சியாளர்களுக்குச் தூணடுகோலாக அமைந்த கோட்பாடுகளைக் கற்றுக் கொள்வது உமது கடமையாகும். உமது இறைத்தூதர் (ஸல்) காட்டிய முன்மாதிரியிலும், அவர்களின் ஹதீஸ்களிலும் புனித திருமறையின் கட்டளைகள் மீதும், நான் விடயங்களைக் கையாளும் முறைகளிலிருந்தும் நீர் கற்றுக் கொண்ட எவையேனும் இருப்பின் அவற்றின்மீதும் உமது சிந்தனையைச் செலுத்துவீராக. நூன் இங்கு உமக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களையும், நீர் பின்பற்றுவதாகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டவற்றையும் நிறைவேற்ற உமது சக்திக்குட்பட்ட சகல முயற்சிகளையும் எடுப்பீராக. இந்தக் கட்டளையின் பிரகாரம் உமது சொந்த இருதயத்தின் தூண்டுதல்களுக்கு நீர் அடியனியக் கூடாதென்பதையும் உம்மீது சுமத்தப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் பின்நிற்க கூடாதென்பதையும் உம்மீது கட்டாயமாக்கியிருக்கின்றேன்.

எல்லாம் வல்ல நாயனின் வல்லமை மீதும், அவனது எல்லையற்ற அருட்கொடைகள்மீதும் நான் அடைக்கலம் கோருகின்றேன். அவனது நாட்டத்தின் முன்னிலையில் எமது நாட்டம் சரணடையவும், அவனுக்கும் அவனது படைப்புகளுக்கும் முன்னால் நாம் நிரபராதிகளாக இருக்கவும் இதன் மூலம் மனித குலம் எமது நினைவுகளைப் பசுமையாக வைத்திருக்கவும் எமது பணிகள் தொடரவும் இறைவன் தானாகவே எமக்கு அருள வேண்டுமென என்னோடு இணைந்து பிரார்த்தனை புரிவீராக. ஏம்மீத அவனது அருள் உச்சநிலையை அடைய வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.அவன் உமக்கும் எமக்கும் அவனது காருன்யத்தையும் இந்தப் பாதையில் வீர மரணம் எய்தும் பாக்கியத்தையும் அருள வேண்டுமெனப் பிரார்த்தனை புரிகின்றேன். நிச்சயமாக நாம் அவனிடத்திலேயே மீள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது பரிசுத்தமான வழித்தோன்றல்கள் மீதும் அவனுடைய நல்லாசிகளைக் கோருகின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்

 back 1 2 3 4 5 6 7