நிர்வாக அதிகாரிகளுக்கான ஆலோசனைகள் ஹஸரத் அலி (அலை) வழங்கியதுஇந்த வர்த்தகத்தினரால் எத்தகைய குழப்பமும் ஏற்படுமென அஞ்சவேண்டியதில்லை. அவர்கள் அமைதியையும் ஒழுக்கத்தையும் நேசிப்பவர்களாவர். நிச்சயமாக, அவர்களால் ஒழுங்கீனத்தை உருவாக்க முடியாது. நாட்டின் சகல பாகங்களுக்கும் சென்று இந்த வகுப்பாரைச் சந்தித்து அவர்களின் நிலைமை பற்றி நேரில் கண்டரிவீராக. அவர்களில் அநேகமானோர் பேராசையில் மூழ்கியவர்களென்பதையும் தவறான கொடுக்கல் வாங்கள்களில் சிக்கியிருப்பவர்களென்பதையும் மறக்க வேண்டாம். அவர்கள் தானியங்களைப் பதுக்கி வைத்துக் கூடுதலான விலைக்கு விற்பனை செய்ய முயற்சிப்பார்கள். இது பொதுமக்களுக்கு பெரும்தீங்கு விளைவப்பதாகும். இந்தத் தீமையை எதிர்துப் போராடாமல் இருப்பது ஆட்சியாளருக்கு ஒரு களங்கமாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் (உணவுப் பண்டங்களைப்) பதுக்கி வைப்பதைத் தடைசெய்திருப்பதனால் நீரும் அதனைத் தடைசெய்வீராக. வர்த்தகம் ஆகக்கூடுதலான சிக்கலற்ற தன்மையுடன் நடைபெறுவதை உறுதிப்படுத்துவீராக. துராசு சரிசமனாகப் பிடிக்கப்படுலதையும் வாங்குபவருக்கோ அல்லது விற்பவருக்கோ நட்டம் ஏற்படாத வகையில் சரியாக விலைகள் குறிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் நிச்சயப்படுத்திக் கொள்வீராக. உமது எச்சரிக்கையின் பின்னரும் உமது கட்டளைகளைப் பின்பற்றாமல் பதுக்கள் என்ற குற்றச் செயலைப் புரிபவர்களுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவீராக.

வறியவர்கள்

எச்சரிக்கையாக இருப்பீராக! ஏழைகளின் பிரச்சனைகளைக் கையாளும்போது இறைவனுக்கு அஞ்சி நடப்பீராக. அவர்களை ஆதரிப்பார் யாருமில்லை. அனாதரவானவர்களும் வருமையால் பீடிக்கப்பட்டவர்களுமான அவர்கள் மன வேதனைகளால் அல்லற்படுபவர்களாவர் அவர்கள் காலத்தின் கோலங்களுக்குப் பலியானவர்களாவர். அவர்கள் மத்தியிலும் அவர்களது வாழ்க்கைப் பிரச்சனை பற்றிப் பிறரிடம் முறையிடாதவர்களும், தங்களை வருமை வாட்டிய போதிலும் இடத்துக்கிடம் அலைந்து திரிந்து யாசகம் கேட்காதவர்களும் இருப்பார்கள். இறைவனுக்காக அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பீராக. ஏனெனில் (அவர்களைப்) பாதுகாக்கும் பொருப்பு உமது தலையிலேயே சுமத்தப்பட்டுள்ளது. வரியவர்கள் உமக்கு அருகிலேயே இருந்தாலும் தூரம் தொலைவில் இருந்தாலும் அவர்களின் மேன்பாட்டுக்காகப் பொதுச் சொத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவீராக. உமது பர்hவையில் அவர்கள் இரு சாராரின் உரிமைகளும் சமமாகவே இருத்தல் வேண்டும். நீர்வேறு அலுவல்களில் மூழ்கியிருப்பதன் காரணமாக வரியவர்களை மறந்துவிட வேண்டாம். அவர்களின் உரிமைகளைப் புறக்கனித்தமைக்காக இறைவன் உமது சமாதானம் எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவர்களின் உரிமைகள் உமது சொந்த உரிமைகளிலும் பர்க்க முக்கியத்துவம் குறைந்தவையெனக் கருத வேண்டாம். எப்Nhதும் அவர்களை உமது முக்கிய கவனங்களின் வரம்புக்குள்ளேயே வைத்திருப்பீராக. அவர்களைத் தாழ்வாக மதிப்பவர்கள் பற்றியும் அவர்களது நிலைமை பற்றி உமக்குத் தெரிவிக்காதர்களையும் அடையாளங் கண்டு கொள்வீராக.

வறியவர்களின் நிலைமை பற்றி (உடனுக்குடன்) சரியான தகவல்களை உமக்குத் தருவதற்காக உமது அதிகாரிகளிலிருந்து இரக்கசிந்தனையுள்ளவர்களையும் இறையச்சம் கொண்டவர்களையும் தெரிவு செய்வீராக. நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனுடைய சந்நிதானத்தில் நீர் எத்தகைய சமாதானமும் கூறுவதற்கு இடம் வைக்காதவாறு ஏழைகளின் தேவைகளைக் கவனிப்பீராக. ஏனெனில் மற்றெல்லா மக்கள் பிரிவினரிலும் பார்க்க இவர்களே தயாள குணத்தடன் நடத்தப்பட வேண்டியவர்களாவர். வரியவர்கள் மத்தியிலுள்ள வயோதிபர்களுக்குச் சுதந்திரமாக ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்ள வழியில்லாமை காரணமாகவும் அவர்கள் யாசகம் கேட்க விரும்பாதவர்களாக இருப்பதன் காரணமாக அவர்களை இனம் கண்டு, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதை உமது பினிதக் கடமையாக விதித்துக் கொள்வீராக. இந்தக் கடமையை நிறைவேற்றுவது,பொதுவாக ஆட்சியாளர்களுக்கு மிகவும் கடினமான சோதனையாக இருக்கும். எனினும் இறைவனின் திருப்தியை நாடி இதில் ஈடுபட்டால் இறைவன் இதனை மிக எளிதாக ஆக்கி வைப்பான். இச்சிரமங்களை அவர்கள் மகிழ்ச்சியுடனும் கடமை உணர்ச்சியுடனும் தாங்கிக் கொள்வார்கள். இறைவனின் வாக்குறுதியில் திருப்தியுமடைவார்கள்.

பகிரங்க மகாநாடுகள் 

ஒடுக்கப்பட்டவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் அடிக்கடி பகிரங்க மகாநாடுகளில் சந்திப்பீராக. அங்கு இறைவனும் உம்மோடு இருக்கின்றான் என்பதை மனதிற் கொண்டு அவர்களோடு மனம் திறந்து உரையாடுவீராக. ஆந்தச் சமயத்தில் உமது காவலர்கள், அரசாங்க அதிகரிகள், பொலிஸ் வீரர்கள், பலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகிய எவரையுமே உம்முடன் இருக்க அனுமதியாதீர். ஆப்போதுதான் ஏழைகளின் பிரதிநிதிகள் அவர்களது குறைகளை அச்'சமோ தயக்கமோ இன்றி உம்மிடத்தில் எடுத்துக் கூறுவர்hக்ள ஏனெனில் வலிமையுள்ளவர்கள், பலவீனமானவர்களுக்குரிய தமது கடமைகளை நிறைவேற்றாமலிருக்கும் எந்த ஒரு தேசமோ சமுதாயமோ உயர்ந்த அந்தஸ்தை அடையமாட்டாது என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் அவர்கள் பயன்படுத்தும் எத்தகைய சுடுசொற்களையும் அடக்கத்துடன் சகித்துக் கொள்வீராக. அவர்களது பிரச்சனையைத் தெளிவான மொழியில் எடுத்துக் கூற முடியாமற் போனாலும் அதனையிட்டு வருத்தப்பட வேண்டாம். ஏனெனில் இறைவன் தனது நல்லாசிகளினதும் வெகுமதிகளினதும் வாசல்களை உமக்காகத் திறந்;து விடுவான். அவர்களுக்கு எவற்றைக் கொடுக்க வசதி இல்லையோ அவை பற்றி இயன்றளவு பண்வோடு அவர்களுக்கு விளக்கிக் கூறுவீராக.

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. ஊழியாகளின் குறைகளுக்கு நிவாரணம் வழங்கும்போது உமது அதிகாரிகளின் சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வீராக. உமது கவனத்துக்காகச் சமாப்பிக்ப்படும் மகஜர்களும் விண்ணப்பங்களும் அவை சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய தினத்திலேயே உமது பார்வைக்கு சமர்ப்பிக்ப்படுவதை உறுதி செய்து கொள்ளவும் தாமதங்களக்கு எத்தகைய சமாதானமும் கூற உமது அதிகாரிகளுக்கு இடமளிக்க வேண்டாம். அன்றாட அலுவல்களை அன்றைய தினத்திலேயே பூர்த்தி செய்வீராக. ஏனெனில் நாளைய தினம் அதனோடு மேலும் பல பணிகளைச் சுமந்துகொண்டு வரலாம்.

மக்கள் தொடர்பு மகத்தானது

நான் மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றுவதோடு மற்றுமொரு விடயத்தையும் மனதில் நிறுத்திக் கொள்வீராக. ஒரு போதும் எந்த அளவு காலத்திற்கேனும், மக்களுடன் தொடர்பில்லாமல் இருக்க வேண்டாம். இவ்வாறு இருப்பதனால் மக்களின் விவகாரங்கள் பற்றி அறிய முடியாமற் போய்விடும். அது ஆட்சியாளரில் ஒரு தவரான கண்ணோட்டத்தை ஏற்படத்தி அவரால் முக்கிய மானவற்றையும் அல்லாதனவற்றையும், சரியானதையும், தவறானதையும், உண்மையையும் பொய்மையையும் பிரித்தறிய முடியாத இயல்பை வளர்த்துவிடும். ஆட்சியாளரும் ஒரு மனிதரே எனவே அவரது கண்ணுக்குப் புலப்படாத ஒன்றைப் பற்றி அவர் சரியான அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்பொள்ள முடியாது.

பலதரப்பட்ட உண்மைகளையும் பொய்மையையும் பிரித்தறிவதற்கு ஏற்றவாறு உண்மைகளில் ஒரு விசேட அடையாளம் பொறிக்கப்படவில்லை. ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் உண்மையாக இருக்கும் அதாவது நீர் ஒரு நீதியாளராகவோ அன்றி நீதியற்றவராகவோ இருக்க முடியும். நீர் ஒரு நீதியான ஆட்சியாளரானால் மக்களிடமிருந்து விலகியிருக்க மாட்டீர் நீரோ அவர்களின் கறைகளுக்குச் செவிமடுத்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்பவராக இருப்பீர். நுPர் ஒரு நீதியற்ற ஆட்சியாளராக இருந்தால் மக்களாகவே உம்மை விட்டும் விலகிக் கொள்வார்கள். மக்களோடு தொடர்பு இல்லாமல் இருப்பதால் என்ன நன்மை? வுpசேடமாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையே உமது கடமையாகக் கொண்டுள்ள நீர் எச்சந்தர்ப்பத்திலும் அவர்களிடமிருந்து விலகியிருப்பது விரும்பத்தக்கதல்ல. உமது அதிகாரிகளின் அடக்குமறைகள் பற்றிய மறைப்பாடுகளோ அல்லது நீதிக்காக விடுக்கப்படும் மனுக்களோ உமக்கு வெறுப்பைத் தரக் கூடாது.back 1 2 3 4 5 6 7 next