நிர்வாக அதிகாரிகளுக்கான ஆலோசனைகள் ஹஸரத் அலி (அலை) வழங்கியதுஇவர்களில், உயர் பதவிகளுக்கு அனுபவசாலிகளையும் சன்மார்க்கத்தில் உறுதியானவர்களையும் நல்ல குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் தேர்ந்தெடுப்பீராக. அத்தகைய மனிதர்கள் இலகுவில் ஆசைகளுக்கு அடிமையாக மாட்டார்கள். அவர்கள் பிரரின் தலையாய நலன்களைக் கருதியே தமது கடமைகளை நிறைவேற்றுவார்கள். அவர்களுக்கு மனநிறைவுள்ள வாழ்கடகை அமையத்தக்கவாறு அவர்களது வேதங்களை அதிகரிப்பீராக. மனநிறைவுள்ள வாழ்க்கை மனத்தூய்மைக்கு வழிவகுக்கும். தமது பராமரிப்புக்காக அவர்கள் தமக்குக் கீழ் பணிபுரிபவர்களின் வருமானத்தைச் சுரண்டும் அவாக்கொள்ள மாட்டார்கள்.அப்போது அவர்களுக்கு அறிவுறுத்தல்களுக்கு மாறாக நடப்பதற்கோ அன்றி அரச நிதிகளைத் துஷ்பிரயோகம் செய்யவோ எத்தகைய காரணமும் இருக்கமாட்டாது. கீழ்ப்படிவும் நேர்மையான நடத்தையும் உடையவர்களைக் கொண்டு அவர்களை இரகசியமாக கண்காணிப்புச் செய்வீராக. அதிஷ்டவசமாக அவர்கள் உண்மையான நேர்மையையும் பொதுமக்கள் நலனில் உண்மையான அக்கரையையும் வளர்த்துக் கொள்ளக்கூடும். எப்போதாவது அவர்களது நே;மையீனம் பற்றிக்குற்றம் சாட்டப்பட்டு உமது உளவுச் சேவையின் அறிக்கை மூலம் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவற்றைக் கொண்டே அவர்களுக்குத் தண்டனை உடலை வருத்தக்கூடியதாக இருக்கட்டும். அதனையும் அவமானப்படுத்துவதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரிடத்தில் பகிரங்கமாகவே நிறைவேற்றுவீராக.

நிதி நிர்வாகம்

அரசுக்கு வரி செலுத்துபவர்களின் சுபீட்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், வரி செலுத்துவோரின் நலனில் மிக்க கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவர்களின் சுபீட்சத்திலேயே மற்றவர்களின் சுபீட்சம் தங்கியுள்ளது. குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரின் சுபீட்சமும் அவர்களிலேயே தங்கியுள்ளது. நிச்சயமாக அரசு இயங்குவதே வரி செலுத்துவொரிடமிருந்து பெறப்பட்ட வருமானத்திலாகும். வுரி சேகரிப்பதிலும் பார்க்க விவசாயக் காணிகளின் பராமரிப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் நிலத்தின் உற்பத்தித் திறனைப் பெருக்காவிட்டால் வரியை அறவிட முடியாது. காணியை விருத்திசெய்ய விவசாயிக்கு உதவி வழங்காமல் வரி செலுத்துமாறு வற்புறுத்துபவரோ விவசாயிக்கு விரும்பத்தகாத இன்னல்களை ஏற்படுத்துவதோடு தேசத்தையும் நாசம் செய்துவிடுகின்றார். அத்தகைய அட்சியாளரின் ஆட்சி நீடிக்க மாட்டாது.

தொற்று நோய்கள் பரவியதன் காரணமாகவோ அல்லது வரட்சி அளவுக்கதிகமான மழைவீழ்ச்சி, நிலத்தின் செழிப்பின்மை, வெள்ளப்பெருக்கினால் பயிர் நிலம் பாதிக்கப்பட்டமை போன்ற காரணங்களுக்காகவோ விவசாயிகள் தமது காணி வரியைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தால் அதற்கேற்ப வரியைக் குறைப்பீராக. அப்போதுதான் அவர்களது நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். இதன் காரணமாக வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சி பற்றிக் கவலைப்படாதீர். ஏனென்றால், அது ஒரு முதலீடேயாகும். வுpவசாய நிலங்கள் செழிப்படையும் போது அவை பன்மடங்கு வருமானத்தைத் தரும். ஆதனால் பட்டினங்களை அபிவிருத்தி செய்து தேசத்தின் கீர்த்தியை நிலைநாட்ட முடியும். நீர் சகலராலும் போற்றப்படுவீர். ஊமது நியாய உணர்வின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக மக்கள் உம்மீது வைக்கும் விசுவாசம் உமது கரங்களை வலுப்படுத்துவதோடு மக்கள் உமது சுமைகளைப் பகிர்ந்துகொள்ள எப்போதும் தயாராகவே இருப்பார்கள்.

நீர் காணிகளில் மக்களை எந்த அளவு குடியேற்றிய போதிலும் அந்தக் காணி அபிவிருத்தி செய்யப்படாவிட்டால் மக்கள் மத்தியில் அபவிருத்தியே நிலவும். தமது ஆட்சி நீண்ட காலத்துக்கு நீடிக்கமாட்டாது என்ற அச்சம் காரணமாக, எல்லா வழிகளாலும் இயன்றளவு செல்வத்தைக் குவித்துக்கொள்ள வேண்டுமென்ற பேராசை பிடித்த ஆட்சியாளர்களே விவசாயியின் அழிவுக்கு காரணமாகின்றார்கள். அவர்களே தமது முன்னோர்களிலிருந்தும் முன்மாதிரிகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாதவர்களாவர்.

செயலாளர்களைத் தாபணப்படுத்தல்

உமது ஸ்தாபணத்தையும் செயலாளர்களையும் பற்றிக் கண்ணும் கருத்துமாய் இருப்பீராக. அவர்கில் மிகவும் சிறந்தவர்களை உமது இரகசியத் தன்மையுள்ள கடிதத் தொடர்புகளுக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வீராக. அரகசியங்களைப் பாதுகாத்து நாட்டின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட அவர்கள் உயர்ந்த நல்லொழுக்கமும் உமது முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும் இருத்தல் வேண்டும்.அவர்கள் தமது உயர்வான பதவியைப் பயன்படுத்தி உமக்கு எதிராகச் செயல்படாதவர்களாக அருத்தல் வேண்டும். ஒப்பந்தங்களை வரையும் போது வெளியாரின் தூண்டுதல்களுக்கு அடிபனிந்து உமது நலன்களுக்குப் பங்கம் விளைவிக்காதவர்களாக இருத்தல் வேண்டும். உமக்குச் சரியான முறையில் உதவி உமக்குப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். அவர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும்போது தம்மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்புக்களை உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இரத்தல் வேண்டும். ஏனெனில் தனது சொந்தப் பொறுப்புக்களை உணராதவர்களால் பிறரின் பொறுப்புக்களை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. அத்தகைய கருமங்களுக்கான ஆட்களைத் தெரிவு செய்யும் போது உமது முதல் அபிப்பிராயங்கள், இரக்கசிந்தனை, நல்லெண்ணம் என்பவற்றின் பலத்தால் மடடும் தீர்மானம் எடுக்காதீர். ஏனென்றால் உண்மையிலேயே நே;மையற்றவர்களும் நல்ல சூழலில் வளர்க்கப்படாதவர்களுமான பலர் தமது பகட்டான நடிப்பின் மூலம் ஆட்சியாளர்களின் அபார புத்தியைக் கூட ஏமாற்றிவிடக்கூடும். போதியளவு காலத்துக்கு நன்நடத்தையை அவதானித்த பின்னரே தெரிவுகள் செய்யப்பட வேண்டும். தகுதிகாண் காலமென்பது ஒருவரது நேர்மையைப் பரிசோதிக்கும் காலமாகும். முக்கள் மத்தியிலிருந்து நேரடியான நியமனங்களைச் செய்யும் போது அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் செல்வாக்கைப் பெற்றவர்களாக அல்லது அவர்களின் நேர்மையை மக்கள் போற்றுகின்றார்களா என்பதைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்த நியமனங்கள் இறைவனாலும் ஆட்சியாளராலும் அங்கீகரிக்கப்படும். ஒவ்வொரு நிர்வாகத் திணைக்களத்துக்கும் பொறுப்பான ஒரு தலைவர் இருக்க வேண்டும். அவர் எந்தக் கடினமான வேளைகளாலும் கவலைப்படுபவராகவோ, வேளைச் சுமைகளால் குழப்பமடைபவர்களாகவோ இருக்கக்கூடாது.

உமது ஸ்தாபனங்களிலும் செயலாளர்களின் சேவையிலும் உள்ள குறைகளை நீர் கண்டும் காணாமல் நடந்து கொள்வதால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு நீரே பொறுப்பு என்பதை மறக்க வேண்டாம்.

வர்த்தகமும் கைத்தொழிலும்

வர்த்தகம் கைத்தொழில் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகப் பயனுள்ள திட்டங்களை அமுல்செய்து உதவி செய்வீராக. அவர்களில் சிலர் பட்டினங்களில் வசிப்பவர்கள். மற்றும் சிலரோ தமது பண்டங்களையும் கருவிகளையும் எடுத்துக் கொண்டு இடத்துக்கிடம் அலைந்து திரிந்து தமது உடலுழைப்பின் மூலம் ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்பவர்களாவர். வர்த்தகமும் கைத்தொழிலும் அரசுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் துறைகளாகும். பொதுமக்கள் சிரமங்களைத் தாங்கிக்கொள்ள முன்வராத இத்துறைகளில், வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அண்மையிலிருந்தும் தொலைவிலிருந்தும், தரைமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் மலைகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் பண்டங்களைச் சேகரித்துக்கொண்டு வருவதோடு இயல்பாகவே லாபத்தையும் ஈட்டுகின்றார்கள்.back 1 2 3 4 5 6 7 next