நிர்வாக அதிகாரிகளுக்கான ஆலோசனைகள் ஹஸரத் அலி (அலை) வழங்கியதுவிசுவாசிகளே..நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடவுங்கள் (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும் உங்கள் அதிபருக்கும் வழிபட்டு நடவுங்கள். (விசுவாசிகளே!) உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால்,

அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடத்திலும் ஒப்படைத்து விடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங் கொண்டவர்களாயிருந்தால் (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள்

திருப்தியாகவே ஒப்புக் கொள்ளுங்கள்) இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்.

அல்லாஹ்விடம் வழிகாட்டுதல் கோருவதென்பது உண்மையிலேயே அவனது புனித திருமறையைக் கலந்தாலோசிப்பதாகும். அவ்வாறே இறைத்தூதரிடம் வழிகாட்டுதல் கோருவதென்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர்களது ஹதீஸ்களைப் பின்பற்றுவதாகும்.

பிரதம நீதியரசர்

மக்கள் மத்தியிலிருந்து இயன்றவரை சிறந்த ஒருவரை உமது பிரதம நீதியரசராகத் தேர்ந்தெடுப்பீராக. அவர் வீட்டுப் பிரச்சனைகளால் அல்லற்படுபவராக இருக்கக் கூடாது. அடிக்கடி தவறிழைப்பவராக இருக்கக்கூடாது. நேர்வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்பு அதிலிருந்து விலகிச் செல்பவராக இருக்கக்கூடாது. அவர் சுயநலக்காரராகவோ இருக்கக்கூடாது. சகல உண்மைகளையும் தெரிந்து கொள்ளும்வரை ஒரு தீர்மானத்தை எடுக்காதவராக இருக்க வேண்டும். அற்ப சந்தேகங்களையும் கூட மிக நுணுக்கமாகச் சீர்தூக்கிப் பார்த்த பின்னர், சகல உண்மைகளையும் முழுக் கவனத்துக்கு எடுத்துக் கொண்ட பின்னரே தீர்ப்பு வழங்குபவராக இருத்தல் வேண்டும். வழக்கரிஞர்களின் வாதங்களைக் கேட்டுப் பொறுமை இழக்காதவராகவும், புதிதாகத் தெரிய வருகின்ற சகல உண்மைகளையும் பொறுமையுடன் பகுத்தாராய்ந்து, கண்டிப்புடன் பாரபட்சமற்ற தீர்மானத்துக்கு வருபவராகவும், புதிதாகத் தெரியவருகின்ற சகல உண்மைகளையும் பொறுமையுடன் பகுத்தாராய்ந்து, கண்டிப்புடன் பாரபட்சமற்ற தீர்மானத்துக்கு வருபவராகவும் இருக்க வேண்டும். முகஸ்துதியின் காரணமாகத் தவறான வழியிற் செல்லாதவராகவும் தனது அந்தஸ்தையிட்டு அகந்தை கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும். ஆனால் இத்தகைய (பண்புகளைக் கொண்டவர்கள் சமூகத்தில் ஒரு சிலரேயிருப்பதால்)ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாகும். ஆகவே தெரிவு செய்வதில் மிகவும் கவனமாய் இருப்பீராக.

ஆனால் இந்தப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிவு செய்து கொண்ட பின்னர் அவர் அளிக்கும் தீர்பின் ஒருசிலதை ஆராய்வீராக. அவர் ஆசைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்வதற்குப் போதுமான ஊதியம் வழங்குவீராக. எந்த செல்வாக்குக்கும் அடிபணியாவண்ணம் உமது சபையில் அவருக்கு மிக உயர்வான ஓர் அந்தஸ்தை வழங்குவீராக. பிறர் அத்தகைய அந்தஸ்தை சதிகள் மூலம் பெறுவதற்குக் கனவிலும்கூட எண்ண முடியாததாக இருத்தல் வேண்டும். அப்போது தான் புறங்கூறலும் தகாத உறவுகளும் அவரை அணுக முடியாமலிருக்கும்.                

 

கீழ்மட்ட நீதிபரிபாலனைத் துறையினர்

கவனம்! இவர்களைத் தெரிவு செய்வதில் தீவிர கவனஞ் செலுத்த வேண்டும். சுயநலமிகள் தங்கள் சுயநல அவாக்களைத் தேடவும் சுரண்டவும் இந்த உயர் பதவியின் மீதே அவாக் கொள்வார்கள். உமது பிரதம நீதியரசரைத் தெரிவு செய்து கொண்ட பின்னர் ஏனைய அதிகாரிகளைத் தெரிவு செய்வதில் அதிக கவனம் எடுப்பீராக. அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிக் காலத்தையும் தகுதி காணும் காலத்தையும் பூர்த்தி செய்த பின்னர் அவர்களை அவர்களது பதவிகளில் நிரந்தரமாக்குவீராக. பொருப்புவாய்ந்த பதவிகளுக்கு ஆட்களை நியமனம் செய்யும்போது தனிப்பட்ட தொடர்புகளுக்கு மதிப்பளிக்கவோ அன்றி எவ்வித செல்வாக்குக்கும் இடமளிக்கவோ வேண்டாம். அவ்வாறு செய்வது அநீதிக்கும் ஊழழுக்கும் வழிவகுக்கும்.back 1 2 3 4 5 6 7 next