நிர்வாக அதிகாரிகளுக்கான ஆலோசனைகள் ஹஸரத் அலி (அலை) வழங்கியதுஅல்லாஹ்வின் அருளால் இராணுவம் மக்களுக்கு அரண்போல் இருப்பதோடு தேசத்துக்கு அந்தஸ்தையும் வழங்குகிறது. அது சன்மார்கத்தின் கௌரவத்தைப் பேணுவதோடு நாட்டில் அமைதியையும் நிலைநாட்டுகிறது. இராணுவம் இன்றித் தேசம் தலைநிமிர்ந்து வாழ முடியாது. மறுதலையாக, தேசத்தின் ஆதரவின்றி இராணுவம் தலைநிமிர்ந்திருக்க முடியாது. இறைவனுக்காகப் போரிடும் பாக்கியத்தை இறைவன் அவர்களுக்குக் கொடுத்தான் சாதாரனமாக எமது படைவீரர்கள் பகைவர்களுக்கு முன்னால் பலம் வாய்ந்தவர்களாக திகழ்ந்துன்னார்கள். எனினும் அவர்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டிய சில லௌகீகத் தேவைகள் உண்டு. ஆகவே அவர்களும் தேசத்தின் வருமானத்தில் தங்கியிருக்கின்றார்கள். வரிசெலுத்துபவர்களான இராணுவத்தினரும் பொதுமக்களும் நீதிபரிபாலனத் துறையினர், சிவில் அதிகாரிகள் அவர்களது நிர்வனங்கள் போன்ற பிறரின் ஒத்துழைப்பைப் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். நீதிபதிகள் சிவில் சட்டங்களையும் குற்றவியல் சட்டங்களையும் செயல்படுத்துகின்றனர். சிவில் அதிகாரிகள் இறைவரி சேகரிப்பதோடு தமது ஸ்தாபணங்களின் உதவியோடு சிவில் நிர்வாகம் செய்கிறார்கள். மேலும் தேசத்தின் வருவாய்க்கு பங்களிப்புச் செய்கின்ற வியாபாரிகளும் வர்த்தகர்களும் இருக்கின்றார்கள். சந்தைகளை நடத்துகின்ற அவர்களே சமூகக் கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஏனையோர்களிலும் பார்க்கப் பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள். இனி வரியவர்களையும் வசதியற்றவர்களையும் உள்ளடக்கிய மற்றுமொறு வர்க்கத்தினர் இருக்கின்றார்கள். அவர்களைப் பராமரிப்பது ஏனைய வர்க்கத்தினரின் பொருப்பாக இருக்கின்றது. சேவையாற்றுவதற்குப் பொருத்தமான வாய்ப்பை இறைவன் சகலருக்கும் வழங்கியிருக்கின்றான். இந்த வர்க்கத்தினர் அனைவருக்கும் நிர்வாகத்தின் மீது உரிமைகள் இருக்கின்றன. ஆட்சியாளர் முழுச் சமுதாயத்தினதும் நலனை மனதில் இருத்தி அந்த உரிமைகளை வழங்க வேண்டும். தானாகவே தனிப்பட்ட ஆர்வம் கொண்டு அதனை நிறைவேற்றுவதில் இறைவனிடம் உதவி கோராவிட்டால் அந்தக் கடமையை அவரால் சரிவர நிறைவேற்ற முடியாமல் போய்விடும். இந்தக் கடமையை அவர் தானாகவே கட்டாயமாகத் தம்மீது விதித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பணியில் எதிர் கொள்ள நேரிடும் இன்னல்களையும் இடையூறுகளையும் ஆட்சியாளர் பொறுமையுடன் சகித்துக்கொள்ள வேண்டும்.

இராணுவம்

உங்கள் அபிப்பிராயப்படி இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் ஆணித்தரமான விசுவாசங் கொண்டவர்களும், தமது தளபதிக்கு கீழ்ப்படிதல் உடையவர்களும், உணர்ச்சிகளால் தூண்டப்படும்போது அர்த்தமுள்ள நியாயங்களை நிதானத்துடன் செவிமடுக்கக் கூடியவர்களும், பலவீனமானவர்களை அரவணைத்து வலிமையுள்ளவர்களை எதிர்த்துப் போராடக்கூடியவர்களும், வன்முறையில் தூண்டப்படும்போது கோபாவேசத்துக்குட்படாமல் எந்த நிலைமையிலும் தவறிலைக்காதவர்களுமான படைவீரர்களின் சேமநலம் பற்றி எப்போதும் கரிசனையுடையவராக. இருப்பீராக. நிலைபெற்ற கௌரவமும் நம்பகத்தன்மையும் கீர்த்திமிக்க வரலாற்றையும் கொண்ட குடும்பங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வீராக. தைரியமும் நேர்த்தியான ஒழுக்கமும், தாராளன மனப்பான்மையும் தமது குனங்களில் தயாளத்தையும் கொண்டவர்கள் சமுதாயத்துக்கு உப்புப் போன்றவர்களாக இருப்பதால் அவர்களைச் சேர்த்துக் கொள்வீராக.

நீர் உமது குழந்தைகளிடத்தில் காட்டும் பாச உணர்வை அவர்களிடமும் காட்டுவீராக. அவர்களுக்காக நீர் யாதாயினும் நன்மை செய்திருந்தால் அவை பற்றி அவர்கள் முன்னிலையில் பேச வேண்டாம். அல்லது அவற்றுக்குப் பிரதியுபகாரமாக அவர்கள் உம்மீது காட்டும் கருணையை மதிக்காமல் விடவும் வேண்டாம். ஏனெனில் அவ்வாராக நடப்பதன் மூலமே அவர்;களது விசுவாசத்தையும் பற்றுதலையும் நல்லென்னத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு நீர் வழங்கும் பொதுவான உதவிகளைக் கொண்டு திருப்த்தியடைந்து விடாமல் அவர்களின் ஒவ்வொரு சின்னஞ்சிறிpய தேவை மீதும் அக்கரை கொள்வீராக. ஏனெனில் அவர்களின் சிறிய தேவையொன்றைக் கூட உடனடியாகக் கவனிப்பது அவர்களுக்கு அளப்பரிய ஆறுதலை வழங்கும். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உமக்கு நெருக்கடியான வேளையில் அவர்கள் உம்மையும் மறக்கமாட்டார்கள்.

தனது படைவீரர்களுக்கு உதுவுவதைத் தன் கடமையாக விதித்துக் கொள்பவரும், தனக்குக் கீழுள்ளவர்களின் நலன்களைக் கவனிப்பதற்குப் பொறுப்பான மற்றும் சகல அதிகாரிகளும் பார்க்க இரக்கத்தில் மேம்பட்டவரும், அவர்கள் வீட்டில் இல்லாத வேளைகளில் அவர்களது குடும்ப நலன்களைக் கவனிக்கக் கூடியவருமான ஒருவரையே உமது இராணுவத்தின் பிரதம தளபதியாக நியமித்துக்கொள்ள வேண்டுமென்பது வெளிப்படை. சுருங்கக் கூறினால் இராணுவத்தின் சகல படைவீரர்களும் மகிழ்ச்சியையும் துயரத்தையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறான கருத்தொருமைப்பாடு பகைவர்களுக்கு மேலதிக பயத்தைக் கொடுக்கும். அவர்கள் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வருவதன் காரணமாக அவர்கள் எப்போதும் உம்மோடு இணைபிரியாதவர்களாக இருப்பார்கள். தேசத்தில் நீதியை நிலைநாட்டுவதிலும் மக்களோடு நேச உறவுகளைப் பேணுவதிலுமேயே நிர்வாகிகளின் உண்மையான மகிழ்ச்சியும் மிக இனிமையான மனநிம்மதியும் தங்கியிருக்கின்றதென்பது உண்மை. அவர்கள் உம்மீது செலுத்தும் அன்பிலும் மரியாதையிலுமே அவர்களது பரிசுத்தமான உணர்வுகள் வெளிப்படுகின்றன. அதில் மாத்திரமே நிர்வாகிகளின் பாதுகாப்பும் தங்கியுள்ளது.

இராணுவ அதிகாரிகள் மீதும் படைவீரர்கள் மீதும் நீர் பாசத்தைப் பொழிந்தாலொழிய அவர்களுக்கு நீர் வழங்கும் அறிவுரைகளில் எத்தகைய பயனும் இருக்க மாட்டாது. அப்போது தான் அவர்கள் அரசாங்கத்தை ஓர் அடக்கியாளும் சுமையாகக் கருதி அதன் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாக்களாக இருக்கமாட்டார்கள்.

அவர்களது தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்து வருவதோடு, அவர்கள் ஆற்றிய சேவைகளுக்காக அவர்களை மீணடும் மீண்டும் புகழ்ந்துரைப்பீராக. அத்தகைய மனப்பான்மையின் காரணமாக, இறைவன் நாடினால், அவர்கள் மேலும் மேலும் தைரியமூட்டப்படுவார்கள். பயந்த சுபாவமுடையவர்கள் கூட துணிகரமான காரியங்கள் புரியத் தூண்டப்படுவார்கள்.

மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீராக. ஒருவரின் குற்றத்தை மற்றொருவர் மீது சுமத்தாதீர். பொருத்தமான வெகுமதிகளை வழங்குவதில் எவ்வித தயக்கமும் காட்ட வேண்டாம். எந்தக் காரியத்தையும் செய்யாதவர்களுக்கு அவர்களின் குடும்ப அந்தஸ்தை மட்டும் கருத்திற்கொண்டு சலுகைகள் வழங்காதிருப்பீராக. அவ்வாரே பெரும் சாதனைகள் புரிந்த ஒருவர் வாழ்க்கையில் குறைந்த அந்தஸ்து உடையவராக இருக்கும் ஒரே காரணத்துக்காக அவருக்குரிய தகுந்த வெகுமதிகளை வழங்காமலிருக்கவும் வேண்டாம்.

உண்மையான வழிகாட்டுதல்

நீர் செய்யவேண்டிய காரியம் யாதாயினும் ஒரு சந்தேகம் ஏற்பட்டால் இறைவனிடத்திலும் அவனது திருத்தூதரிடத்திலும் வழிகாட்டுதல் பெறுவீராக. அல்லாஹ் நேர்வழிகாட்ட விரும்பியவர்களுக்கு வழங்கும் ஆணைகள் அல்குர்ஆனின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.back 1 2 3 4 5 6 7 next