நிர்வாக அதிகாரிகளுக்கான ஆலோசனைகள் ஹஸரத் அலி (அலை) வழங்கியதுDeprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 போற்றுதற்குரிய பொக்கிஷம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஓமாலிக் நீர் அறிந்து கொள்வீராக! கடந்த காலங்களில் நீதியான ஆட்சியையும் நீதியற்ற ஆட்சியையும் அனுபவித்துள்ள ஒரு தேசத்துக்கு நான் உம்மைக் கவர்னராக அனுப்புகின்றேன். உமக்கு முன்னால் உள்ள மக்களின் நடத்தைகளை நீர் கூர்ந்து அவதானித்துப் பகுத்தாராய்வு போலவே, மக்கள் உமது செயல்களையும் கூர்ந்து அவதானித்துப் பகுத்தராய்வு செய்வார்கள். நீர் பிறரை விமர்சிப்பது போலவே அவர்களும் உம்மை விமர்சிப்பார்கள். நல்லதைச் செய்பவர்களைப் பற்றியே மக்கள் நல்லதைக் கூறுவார்கள். உமது செயல்களுக்கு சாட்சிகளாக இருப்பவர்கள் அவர்களே. எனவே நீர் போற்றுதற்கரிய பொக்கிஷமாகக் கருத வேண்டியவை உமது நன்நடத்தைகளின் பொக்கிஷமே. உமது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக. அவற்றைத் தவிர்த்து நடப்பதன் மூலமாக மட்டுமே நீர் (மக்களுக்கு) நன்மையானவற்றையும் தீங்கானவற்றையும் பிரித்தறிந்து கொள்ள முடியும். உமது இருதயத்தில் உமது மக்கள் மீது நேச உணர்வை வளர்த்துக் கொள்வீராக. அதுவே அவர்களின் மீதான இரக்கத்தினதும் நல்லாசிகளினதும் தோற்றுவாயாக இருக்கட்டும். மக்களோடு காட்டுமிராண்டி போல நடந்து கொள்ளாதீர். அவர்களுகுச் சொந்தமான எதனையும் நீர் அபகரிக்க வேண்டாம். ஒரு தேசத்தின் குடிமக்கள் இரண்டு வகையானவர்கள் என்பதை மறவாதீர். ஒரு வகையினர் மதரீதியாக உமக்குச் சகோதரர்களாகவும் மற்றைய வகையினர் மனித ரீதியாக உமக்குச் சகோதரர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் தவறுகள் செய்வார்கள். தவராகவும் கவனயீனமாகவும் நடந்து கொள்ளவும் கூடும். இறைவன் உம்மை மன்னிப்பதை நீர் விரும்புவது போலவே நீரும் அவர்களை மன்னித்து விடுவீராக. நீர் எனது பொறுப்பில் இருப்பது போலவே அவர்களும் உமது பொறுப்பில் இருக்கின்றார்கள். நீர் உமக்கு கீழுள்ள மக்களைக் கவனித்து அவர்கள் திருப்திப்படக் கூடியவாறு நடந்து கொள்வதற்காக உம்மை ஒரு கவர்னராக நியமித்தவருக்கும் மேலாக இறைவன் இருக்கின்றான். நீர் மக்களுக்காக ஆற்றும் பணியைக் கொண்டே உம்மைப் பற்றித் தீர்பளிக்கட்டும். நீர் இறைவனின் பகைவனாகிவிடாதீர். ஏனெனில் அவனது அதிருப்திக்கெதிராக உம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் சக்தியும் உம்மிடமில்லை. அவனது கருணையும் மன்னிப்புமின்றி உம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. நீர் வழங்கிய மன்னிப்பையிட்டுக் கவலைப்படவோ அன்றி நீர் யாராயினும் ஒருவருக்கு வழங்கிய தண்டனையையிட்டு மகிழ்ச்சியடையவோ வேண்டாம். நீர் கோபப்பட வேண்டாம். கோபத்தினால் எவ்வித நன்மையும் ஏற்படுவதில்லை. நான் உங்களின் எஜமானாகவும் சர்வதியாரியாகவும் இருக்கின்றேன் ஆகவே நீங்கள் எனது ஆணைகளுக்கு அடிபணிய வேண்டும் என ஒரு போதும் கூற வேண்டாம். அவ்வாறு கூறுவது உமது இருதயத்தைக் கெடுத்து உமது மத நம்பிக்கையைப் பலவீனப்படுத்தி சீர் குலைவைத் தோற்றுவிக்கும். நீர் அதிகாரத்தின் காரணமாகப் பெருமிதம் கொள்ளும் போதே அன்றி பெருமை, கர்வம் என்பவற்றின் அற்ப அறிகுறிகளாவது உமது உள்ளத்தில் உருவாவதை உணரும்போதே, உம்மால் எந்தவகையிPலும் கட்டுப் படுத்த முடியாத முழுப் பிரபஞ்சத்தையும் ஆட்சிபுரியும், இறையாட்சியின் அதிகாரத்தையும் மாண்பையும் பற்றிச் சிந்தித்துக் கொள்வீராக. அது உமது தடுமாறும் புத்திக்குச் சமநிலையைத் தருவதோடு உம்மை விட்டகன்ற சாந்தியையும் நிதானத்தையும் உமக்கு வழங்கும். இறைவனின் மகிமை, மாட்சிமை என்பவற்றுடன் உம்மை ஒப்பிடாமலும் எங்கும் வியாபித்திருக்கும் அவனைப் போல் பாவனை செய்யாமலும் எச்சரிக்கையாக இருப்பீராக. ஏனெனில் இறைவனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்பவர்களையும் மனிதனுக்கெதிராக விஷமம் புரிபவர்களையும் அவன் எப்போதும் தாழ்த்தியே இருக்கின்றான். உமது செயல்கள் மூலம் இறைவனின் உரிமைகளுக்கும் மனிதனின் உரிமைகளுக்கும் உமது உள்ளம் மரியாதை செலுத்தட்டும். உமது சகாக்களையும் உறவினர்களையும் அவ்வாரே செய்யுமாறு தூண்டுவீராக. இன்றேல் நீர் உமக்கு மட்டுமன்றி முழு மனித குலத்துக்குமே அநீதி இழைத்தவராகிவிடுவீர். அதன் மூலம் மனிதனோடு இறைவனும் உமது எதிரியாகிவிடுவான். இறைவனையே பகைத்துக்கொள்ளும் ஒருவனுக்குப் புகலிடம் என்பதே இல்லை. தனது தவரை உணர்ந்து அவன் மன்னிப்புக் கோரும்வரை அவன் இறைவனுக்கெதிராகப் போர் புரிபவனாகவே கருதப்படுவான். கொடுமை புரிவதைத் தவிர வேறு எதுவுமே இலகுவாக மனிதனுக்கு இறைவனுடைய நல்லாசிகளை மறுக்கவோ அல்லது அவனுக்கெதிராக இறைவனின் கோபத்தைத் தூண்டவோ முடியாது. நிச்சயமாக இறைவன் ஒடுக்கப்பட்டவனின் குரலுக்குச் செவிமடுப்பவனாகவும், அடக்கியாள்பவனைத் தண்டிப்பவனாகவும் இருக்கின்றான்.
|