அஹ்லுல் பைத்தின் சிறப்புகள் ஆல இப்றாஹீம், ஆல இம்ரான் எனப்படுபவர்கள் இப்றாஹீம், இம்றான், முஹம்மத் ஆகியோரின் (சந்ததிக்) குடும்பத்தினரில் முஃமீன்கள் ஆவர் எனப் பதிலலித்தார்கள். (அறிவிப்பாளர்: அப்பாஸ் (ரழி), ஆதாரம்: துர்ருல் மன்சூர், இமாம் ஸுயூதி)

இது பற்றிய மேலதிக தெளிவை பின்வரும் அல்குர்ஆன் எமக்கு தருகின்றது:

(அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார். மேலும் அல்லாஹ் (யாவரையும்) செவியுருவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கிளன்றான்.                     அல்குர்ஆன் 3:34.

ஹஸ்ரத் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஆதம்  அலைஹிஸ்ஸலாம்  நூஹ்  அலைஹிஸ்ஸலாம்   ஆகியோரின் வரிசையில் இப்றாஹீம்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் சந்ததியினராகும். இதன்படி ஹஸ்ரத் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் யாவரையும் மிகைத்த, யாவரிலும் மேலான ஒரு சந்ததியைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்கின்றோம். இதுபோலவே முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் பிற் சந்ததியினரும் யாவரையும் விட மேலான ஓர் உயர் அந்தஸ்தைக் கொண்டவர்களாய் இருக்கின்றனர். ஹஸ்ரத் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் முற்சந்ததியும், பிற்சந்ததியும் பரிசுத்தவான்களாவர். தூய்மை பெற்ற அவர்கள் உலகத்தாரை வழிநடத்தும் தகுதி பெற்றவர்களாய் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும்.

மவத்தாஹ் - பிரியம் கொள்ளல்

சேவைக்குக் கூலி

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா இவ்வுலகையும், பிரபஞசங்களையும் படைத்து, உயிரினங்களையும் படைத்து அவற்றைப் பரிபாலித்துப் போஷித்து வருகின்றான். எமக்கு பிறப்பையும் மரணத்தையும் தருகின்றான். அதில் இன்மையையும் மறுமையையும் அமைத்துள்ளான்.

மானுடரைப் படைத்து நல்லது, கெட்டது எவை என்பதைப் பிரித்தறியும் பகுத்தறிவையும் கொடுத்து, நல்லது எது கெட்டது எது என்பவற்றிக்கான வரையரைகளையும் வகுத்து நேர்வழி காட்டுவதற்காய் ஆதம்  அலைஹிஸ்ஸலாம்  முதல் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் வரை ஓர் இலட்சத்து இருபதினாயிரம் இறை தூதர்களையும் அனுப்பி வைத்தான்.

இத்தனைக்கும் இவ்வுலகின் இப் பிரபஞ்சத்தின் அத்தனை வசதிகளுக்குமாய் இறைவன் எம்மிடம் எதிர்பார்க்கும் கூலிதான் என்ன? அதுபோல் அவனால் அனுப்ப்பட்ட இறை தூதர்கள் எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் ஏச்சும் பேச்சும் சக்த்து, கல்லடி பொல்லடி பெற்று தம் இன்னுயிர்களையே இறை பணிக்காய் அர்ப்பணித்து மக்களை நேர்வழி காட்டியதற்காய் என்ன கூலியை எம்மிடம் கேட்டார்கள்? எமது ஈருலக ஈடேற்றத்திற்கு வழிகாட்டிய அந்த ஒளி விளக்குகள் எம்மிடம் எதிர்பார்த்தது என்ன?

இத்தனை சேவைக்கும் நாம் அவர்களுக்கு செய்த கைமாறுதான் என்ன? மானிடவர்க்கம் அன்று முதல் இன்று வரை அவர்களின் சேவைக்கு வழங்கிய கூலிதான் என்ன? பிரதியுபகாரம் எதிர்பார்த்தா அன்னவர்கள் எம்மை நெரிப்படுத்தினர்? மிருகங்களாக வாழ்ந்த எம்மை- ஷைத்தானியத்தனம் நிறைந்திருந்த எம்மை நாகரீகத்தின் பால் அழைத்து வந்த அவர்கட்கு நாம் கொடுத்த பரிசுதான் என்ன? இறை தூதர்கள் என்ன கூலியைக்கேட்டார்கள் என்பது பற்றி இறைமறை கூறுவதைக் கவனிப்போம்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next