அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்ஒரு முறை இமாம் அபூ ஹம்பலிடம் (ரஹ்) அவரது மகனார் சஹாபாக்களில் சிறப்பானவர்கள் யார், யார் எனக் கேட்டார்.

அதற்கு இமாம் அபூ ஹம்பல் அபூபக்கர், உமர், உதுமான் எனப் பதிலளித்தார் இதைக்கேட்ட மகனார் அப்படியானால் அலி  அலைஹிஸ்ஸலாம்  ..? என வினவிய போது அலீ  அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் அஹ்லுல் பைத்தைச் சார்ந்தவர்கள். ஒப்பீட்டுக்கு அப்பாலுள்ளவர்கள் எனப் பதிலளித்தார் இமாம் அபூ ஹம்பல் (ரஹ்).

இமாம் ஹஸன்  அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் கூறுகின்றார்கள்:

அஹ்லுல் பைத்தினராகிய எமக்கு ஹிக்மத் எனும் ஞானத்தை வழங்கிய அல்லாவுக்கே எல்லாப் புகழும். ஆதாரம்: இமாம் அஹ்மத்: மனாகிப், இப்னு ஹஜர்: அஸ்ஸவாயிக்குல் முஹ்ரிகா

எனவே தூய்மைமிக்க, உயர்வு மிக்க, தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த பரிசுத்த குடும்பத்தினர் மீது அன்பு (ஹுப்பு) வைத்தவர்களாகவும், எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு வல்ல அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக!.

துர்ரியத் - முன்னோர்

நிச்சயமாக ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியாரையும், இம்ரானின் சந்ததியாரையும், அல்லாஹ் அகிலத்தார் அனைவரையும் விட மேலானவர்களாய் தேர்ந்தெடுத்தான். அல்குர்ஆன் 3:33

அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறை தூதர்கள் அவ்வப்போது தோன்றி மானுடரை இறை பாதையில் வழி நடத்தி வந்தார்கள். அவர்கள் சகல அசுத்தங்களை விட்டும் தூய்மைப்படுத்தப் பட்டவர்களாகும். விசுவாசம், பக்தி, இறையச்சம், பிரசாரம், அல்லாஹ்வை அன்றி யாருக்குமே அடிபணியாமை, நற்குணவியல்புகள், ஞானம் என்பவற்றில் இறை தூதர்கள் மானுடர் அனைவரையும் மிகைத்தவர்களாகும். ஊயர்ந்தவர்களாகும்.

இறை தூதர்கள் வரிசையில் முதலாமவர் ஹஸ்ரத் ஆதம்  அலைஹிஸ்ஸலாம் . இறுதியானவர் ஹஸ்ரத் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி. ஆதம்  அலைஹிஸ்ஸலாம்  தொட்டு இறுதித் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் வரை. ஒரு சங்கிலித் தொடரான சந்ததித் தொடர்பு இருந்து வருகின்றது. இது வல்ல நாயனின் ஏற்பாடாகும்.

எமது தூதர் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் இப்றாஹீம்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் வழித்தோன்றலாகும். இப்றாஹீமின் சந்ததியாரும், இம்ரானின் சந்ததியாரும் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் முன்னோர்களாகும். இந்த சந்ததியினரின் முஃமின்கள் வரிசையிலே முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தோன்றினார்கள். இதுபற்றி மேற்குறித்த திருவசனம் தெளிவான விளக்கத்தை தருகின்றது. ஹஸ்ரத் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் சந்ததியார் பற்றிய விளக்கம் கோரப்பட்டபோது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next