அஹ்லுல் பைத்தின் சிறப்புகள் மேற்படி திருவசனம் அருளப்பட்டதிலிருந்து பல மாத காலங்களாக நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்காக செல்கையில் ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  ஹஸ்ரத் பாத்திமா  அலைஹிஸ்ஸலாம்  ஆகியோரின் வீட்டைக் கடக்கும்போது இத்திருவசனத்தை தினமும் ஓதுவார்கள்.

மேலும் ஓ..அஹ்லுல் பைத்தினரே! உங்களை விட்டு அசுத்தங்களை நீக்கி வைக்கவும் உங்களை (ப்பாவங்களை விட்டு) முற்றுமுழுதாகத் தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்புகின்றான். (33:33)  என்ற திருவசனத்தையும் அங்கே ஓதுவார்கள்.

இது பற்றி பிரசித்தி பெற்ற அல்குர்ஆன் விரிவுரையாளர் பஹ்ருத்தீன் அர் ராஸி தமது அத்தப்ஸீருல் கபீர் என்ற கிரந்தத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்கள். (அனஸ் இப்னுமாலிக் (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீது அலி இப்னு ஸெஸ்யித் அவர்களால் பதியப்பட்டுள்ளது.         ஆதாரம்: ஜாமி உல் உஸுல் பாகம் 9. பக்கம்-156, முஸ்தத்ரகுல் ஹாகிம் பாகம் 3. பக்கம்-158, ஸஹீஹுத் திர்மிதி, அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)

அஹ்லுல் பைத்தினரின் வீட்டை ஹஸ்ரத் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கடக்கும் போது மேற்படி திருவசனங்களை ஓதி வந்தது மிகப் பெரிய உள்ளர்த்தம் கொண்டதொரு  செயலாகும். வெருமனே தொழுகையை ஏவதல் என்பதாக இது அமைய மாட்டாது. வேறு எவரினதும் வீட்டை நோக்கி அன்னவர்கள் இவ்வாறு ஒரு போதும் அழைத்ததில்லை. காரண காரியம் இன்றி அண்ணலார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் சொல்லும் செயலும் இருந்ததில்லை.

இதன் மூலம் உலகலாவிய முஸ்லிம் உம்மத்தினர் பரிசுத்த அஹ்லுல் பைத்தினரின் சீரிய தலைமைத்துவப் பண்புகளையும் தூய்மைகளையும் நோக்கி தமது பின்பற்றலைத் தொடரவுமே இவ்வாறான சம்பவங்கள் அறிவுரை பகர்கின்றன. இந்த விடயத்தில் சகல அறிஞர்களுமே ஒன்றுபட்ட கருத்தை தெரிவிக்கின்றனர்.

முத்தஹ்ஹரூன் தூய்மையாளர்கள்

தூய்மைகளைத் தவிர வேறொருவரும் இதனைத் தொட மாட்டார்கள். அல்குர்ஆன் 56:79

அல்குர்ஆனில் உள்ளடக்கம், சிறப்புக்கள் பற்றி அல்லாஹ் விபரிக்கையில் மேற்படி வசனம் இறங்கியது. மேலோட்டமாகப் பார்க்கையில் சுத்தமானவர்கள் அல்லாதோர் அல்குர்ஆனைத் தொடமாட்டார்கள் அல்லது அசுத்தமானவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற பாங்கில்தான் இந்த இறை வசனத்தின் கருத்து விபரிக்கப்படுகின்றது. ஆனால் இதன் உள்ளர்த்தமான கருத்து தத்ஹீருடைய- தூய்மை நிறைந்த முத்தஹ்ஹரூன் - தூய்மையாளர்களே இந்த அல்குர்ஆனின் உள்ளடக்கத்தை உன்மையாக - விபரமாக் - ஆழமாக அறிந்து கொள்வார்கள் என்பதாக அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன்படி தத்ஹீர் நிறைந்தவர்கள் அல்லாஹ்வின் திருவசனப்படி (33:33) அஹ்லுல் பைத்தினரே ஆவர். மேலும் பின்பற்றக் கூடிய இரண்டு விடயங்களாக  தக்லைன் அல்குர்ஆனும் அஹ்லுல் பைத்துமே உள்ளன.

ஞானம்

அஹ்லுல் பைத்தினர் இறை ஞானம் மிக்கவர்கள். அவர்களின் அறிவு ஞானத்துக்;கு ஒப்புவமை கிடையாது. அவர்களுக்கு இணையாக வேறு எவரையேனும் குறிப்பிட்டுக் காட்டவும் முடியாது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next