அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்மேற்படி சம்பவமும், அல்குர்ஆனின் ஆயத்துத் தத்ஹீர் என்ற திருவசனமும் அஹ்லுல் பைத்தினரின் மேன்மையைப் பறை சாற்றுவதுடன் அவர்கள் யார், யார் என்பதையும் தெட்டத் தெளிவாக்குகின்றன. மயக்கங்கள், திரிபுகள், மாறுபட்ட விள்கங்களுக்கப்பால் அஹ்லுல் பைத்தினரின் மாண்பும், அவர்கள் யாவர் என்பதும் வெள்ளிடைமலையாக ஜொலிக்கின்றன. இதன்படி ஹஸ்ரத் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி, ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் பாத்திமா  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹஸன்  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹுஸைன்  அலைஹிஸ்ஸலாம்  ஆகிய ஐவருமே தூய்மை பெற்ற அஹ்லுல் பைத்தினராகும்.

மேற்படி சம்பவத்தில் இவர்கள் ஒரு போர்வை (அபா) யினால் போர்தப்பட்டிருப்ப்தால்; இந்த ஹதீஸ் போர்வை ஹதீத் எனவும் விளங்குகின்றது. அந்த ஐவரும் போர்வைக்குரியவர்கள் என்று புகழப்படுகின்றனர்.

புகழ் பெற்ற சங்கைக்குரிய மாப்பிள்ளை ஆலிம் சாஹிப் (ரஹ்) பாத்திமா  அலைஹிஸ்ஸலாம்  அவர்களைப் புகழும் தனது பிரசித்தி பெற்ற தலைப்பாத்திஹா வில் பின்வருமாறு பாடுகின்றார்கள்:

                               அஹ்லுல் அபா என்னும்

                               ஐவர் தம்மினில்

                               ஆகிய நாயகியைப் புகழ்வோம்

                                               (அஹ்லுல் அபா  போர்வைக்குரியோர்)

ஆயத்துத் தத்ஹீர் என்ற மேற்படி திருவசனமும் ஹதீத் அபா எனும் மேற்படி ஹதீதும் அஹ்லுல் பைத்தினராகிய அந்த ஐவரினதும் சீரையும், சிறப்பையும் தூய்மையையும் எமக்கு போதிக்கின்றன. தூய்மையான தலைமைத்துவப் பண்புகள் அஹ்லுல் பைத்தினருக்கே சொந்தமான சிறப்பியல்பாகும். இதன் அடியொற்றியே உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் வெற்றிப்படிகள் கட்டப்பட்டுள்ளன.

தொழுகைக்கு அழைத்தல்

நபியே உங்கள் குடும்பத்தினரை தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! தோழுகையின் மீது நீர் பொறுமையும் உறுதியும் கொண்டிருப்பீராக!                    அல்குர்ஆன் 20: 132.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next