அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்வல்ல நாயனே! இவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர்(அஹ்லுல் பைத்). இப்றாஹீமின் குடும்பத்தினர் மீது பரகத்தையும், ஸலவாத்தையும் சொரிந்தது போல் இந்த முஹம்மதின் குடும்பத்தினர் மீதும் பரக்கத்தையும், ஸலவாத்தையும் சொரிவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்குரியவன்;;;, கீர்த்தி மிக்கவன், என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

இந்த ஹதீதினை அறிவிக்கும் உம்மு ஸல்மா நாயகி (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

இந்த பிரார்த்தனையைக் கேட்டபோது நானும் அந்த போர்வையை உயர்த்தி புகுந்து கொள்ள முனைந்தவளாக நான் (இதில்) இல்லையா? என்று நபிகளாரை வினவினேன். அதற்கு நபிகளார் இல்லை. (ஆனால்) நீங்கள் நன்மையிலேயே இருக்கிறீர்கள் என்று கூறி போர்வையுள் புகவிடாமல்

என்னைத் தடுத்தார்கள்.

இந்த சம்பவம் நடந்த உடனேயே ஆயத்துத் தத்ஹீர் என்ற மேற்படி திருவசனம் அருளப்பட்டது.

ஓ..அஹ்லுல் பைத்தினரே! உங்களை விட்டும் (சகல) அசுத்தங்களையும் நீக்கி உங்களை முற்று முழுதாகத் தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்புகிறான்.(அறிவிப்பாளர்- உம்மு ஸல்மா (ரலி)  நூல்- திர்மிதி- தபரானிp)

மேற்படி சம்பவம் சிற்சில மாறுதல்களுடன் பல கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது. அல்குர்ஆன் விரிவுரையாளர்களும், அல்-ஹதீஸ் ஆய்வாளர்களும் இந்தச்சம்பவத்தையும், இதன் பின்னால் அருளப்பட்ட திருவசனத்தையும் உறுதிப்படுத்துகின்றார்கள். இதேபோல் ஒரு சம்பவத்தை நபிகளாரின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா (ரலி) அவர்களும் அறிவிக்கின்றார்கள்.

ஒரு முறை நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி தம்மை ஒரு கறுப்பு நிறப் போர்வையால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். சிறுது நேரத்தில் அங்கே ஹஸ்ரத் ஹஸன் வந்தார்கள். அவர்களையும் போர்வையால் நபிகளார் போர்த்தினார்கள். அதன் பின்னால்  ஹஸ்ரத் ஹுஸைன்; வந்தார்கள். அவர்களும் போர்வையால் போர்த்தப்பட்டார்கள். அதன் பின்னால் ஹஸ்ரத் பாத்திமா வந்தார்கள். அவர்களும் போர்வையால் போர்த்தப்பட்டார்கள். இறுதியாக ஹஸ்ரத் அலி வந்தார்கள். அவர்களும் போர்வையால் போர்த்தப்பட்டார்கள்.

பின்னர், இவர்கள் எனது குடும்பத்தினர். இவர்கள் மீது அருள் புரிவாயாக என்று நபிகளார் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது இந்தத் திருவசனம் அருளப்பட்டது. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: கயாத் அல் மராம், தப்ஸீர் அல் கஷ்ஷாப்;)

இவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர். இவர்களை அசுத்தங்களை விட்டும் நீ தூய்மைப் படுத்துவாயாக என்று நபிகளார் பிரார்த்தனை புரிந்ததாக இன்னும் ஒரு ஹதீது வருகின்றது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next