அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்வல்ல இறையோனாகிய அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு வஹீ மூலம் இறக்கியதே அல்குர்ஆன். முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களைத் தூய்மைப் படுத்திய அல்லாஹ் தனது வழிகாட்டுதலை கொண்டு செல்லக் கூடிய தெய்வீகப் பணியினை அன்னவர்கள் மீது சாட்டி வைத்தான்.

அல்குர்ஆன் இறைவழிகாட்டுதலின் இன்ப ஊற்று. இறையாட்சியின் சட்டங்கள், திட்டங்கள் நிறைந்த கருவூலம் அது. மானுடப் பன்புகளை விளக்கும் அறநூல் அது. கடந்த காலச்சரித்திரத்தை படிப்பினையாகக் கூறும் வரலாற்றுப் பொக்கிசம். மோட்சத்தை வழங்கும் ஞானபீடம்;.

அல்குர்ஆன் மானுட வாழ்வின் அனைத்திலுமே சீரிய வழிகாட்டுதலை வழங்குகிறது. எங்கும் எவர்க்கும் எப்போதும் பொருந்தக்கூடிய முன்பின் முரணற்ற வசனங்கள் அதன் சிறப்பம்சமாகும்.

எதனை எவற்றை, எப்படி மக்கள் அடியொற்றி வாழ வேண்டும் என்பதனைத் தெளிவாக அவ்குர்ஆன் கற்றுத்தருகின்றது. அண்ணல் நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அல்குர்ஆனை அச்சொட்டாபகப் பின்பற்றி அதன்படியே முற்று முழுதாக வாழ்ந்தார்கள். அவர்களின் சீரிய தலைமைத்துவத்தினாலும், போதனைகளாலும் இருள் சூழ்ந்திருந்த அராபியாவும், அதனைச்சூழவுள்ள பிரதேசங்களும் ஒளி பெற்றன. மாக்களாய் வாழ்ந்தோர் நன் மக்களாய் மாறினர்.

அல்குர்ஆன் அஹ்லுல் பைத்தினர் பற்றியும் அவர்தம் தூய்மை பற்றியும் அவர் மீது நேசம் கொள்ளல் பற்றியும் அவர்களின் வழிகாட்டுதலில் வாழ வேண்டிய கடமை பற்றியும் பல இடங்களில் எடுத்து இயம்புகின்றது. நேரடியாகவும் மறைமுகமாகவும் பல திருவசனங்கள் அஹ்லுல் பைத்தினரின் உயர்வுகளைப் பறைசாற்றுகின்றன. மறைமுகமான திருவசனங்களுக்கு மானபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் விழக்கம் ஈந்துள்ளார்கள்.

தத்ஹீர்-தூய்மை

ஓ.. அஹ்லுல் பைத்தினரே ! உங்களை விட்டும் (சகல) அசுத்தங்களையும் விட்டும் நீக்கி உங்களை முற்று முழுதாகத் தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்புகின்றான். அல் குர்ஆன் 33:33

ஆயத்துத் தத்ஹிர் என்னும் இந்த இறை வசனம் அல் குர்ஆனின் சூரத்துல் அஹ்ஸாபில் வருகின்றது. அல்லாஹ் தமது தூதர்கள் அனைவரினதும் சகல அசுத்தங்களையும் நீக்கி அவர்களை முற்று முழுதாகவே தூய்மை யாக்கியுள்ளான். அதே வழியில் இறை தூதர்களுக்கெல்லாம் முத்திரையாகவும் அகிலத்தின் அருட் கொடையாகவும் வந்துதித்த வள்ளல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களையும் அவர்களின் புண்ணிய குடும்பத்தினரையும் அல்லாஹ் முற்று முழுதாகவே தூய்மைப் படுத்தியுள்ளான்.

போர்வைக்குரியர்கள்

ஒரு முறை ஹஸரத் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தமது அருமை மனைவியாகிய உம்மு ஸல்மா நாயகி (ரலி) அவர்களின் வீட்டில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே அருமை மகளார் ஹஸரத் பாத்திமா அலைஹாஸலாம்  அவர்கள் வந்தார்கள். ஹஸரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்களை நோக்கி  மகளே! உங்கள் கணவரையும், புதல்வர்களையும் அழைத்து வாருங்கள் என நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள். அதன் படியே ஹஸரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்கள் தமது அருமைக் கணவரையும் தம்மிருமைந்தர்களையும் அழைத்து வந்தார்கள் அப்போது நாயம்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் எமனில் செய்யப்பட்ட ஒரு போர்வையினால் தம்மையும் ஹஸரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  ஹஸரத் பாத்திமா அலைஹாஸலாம் ஹஸரத் ஹஸன்  அலைஹிஸ்ஸலாம்  ஹஸரத் ஹுஸைன்  அலைஹிஸ்ஸலாம்  ஆகிய நால்வரையும் போர்த்தினார்கள். போர்த்திய பின் தமது திருக்கரங்களை உயர்த்தியவர்களாகback 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next