அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்  இஸ்லாமிய கலாசாரத்திலும், இஸ்லாமிய வரலாற்றிலும் பல செய்மையாக்கள்கல் இடம் பெற்றதன் அடிப்படைக் காரணி இத்திருவசனம் இஸ்லிம்களிடம் ஏற்படுத்திய தாக்கமே. இந்த விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் யாவருமே ஒரே கருத்தையே கொண்டுள்ளனர். அல்லாஹ்வின் நேர்வழியை எமக்குப் போதித்த ரஸுல் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின்னால் அஹ்லுல் பைத்தினரின் வழிகாட்டுதல் எமக்குக் கிடைத்தது. அல்லாஹ் உலக மாந்தரை எப்போதுமே வழிகாட்டுதல் இன்றி விட்டுவிடவில்லை. அஹ்லுல் பைத்தினரை வழிகாட்டிகளாகத் தந்து எம்மை இரட்சித்துள்ளான்.

எங்கள் ரஸுல் முகம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின் உலக மாந்தர் அனைவரையும் விட அந்தஸ்தில் உயர்ந்தவர்களாய் அஹ்லுல் பைத்தினர் உள்ளனர்.  அஹ்லுல் பைத் எனப்படுவது அருள்பெற்ற ஒரு மரம் என்றே அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.

ரஸுல் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் உயர்வும், கீர்த்தியும், கௌரவமும் மதிக்கப்படுவது போல அஹ்லுல் பைத்தினரின் கௌரவமும் அறிஞர்களால் போற்றிப் புகழப்படுகின்றது.

அல்லாஹ் மீது, அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீதும், அவர்களின் அஹ்லுல் பைத்தினர் மீதும் வைக்கும் நேசத்தின் மீதே எமது விசுவாசம் தங்கியுள்ளது.

அஹ்லுல் பைத் எனப்படுவோர் அல்லாஹ்வினால் முற்று முழுதாக தூய்மைப்படுத்தப்பட்டவர்கள். அவன் மீது பரிபூரண விசுவாசம் கொண்ட நல்லடியார்கள். வழிகாட்டலுக்கு தகுதியானவர்களாய் முத்திரை குத்தப்பட்டவர்கள்.

அஹ்லுல் பைத் எனப்படுவோர் அருமை ரஸுல் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் நேரடி வழிகாட்டலிலேயே வாழ்ந்தார்கள். அதனாலேயே அவர்களின் சொல்லும் செயலும் இறைவழியில் பின்னிப் பிணைந்திருந்தன.

அஹ்லுல் பைத்தினரான ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம், ஹஸரத் ஹஸன்  அலைஹிஸ்ஸலாம் ,ஹஸரத் ஹுஸைன்  அலைஹிஸ்ஸலாம்  ஆகியோர் ரசூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களினால் வளர்க்கப்பட்டிருந்தார்கள். அல்லாஹ் அவர்களைத் தூய்மைப்படுத்தினான்.

அஹ்லுல் பைத்தினர் மீது அன்புசெலுத்துவதை அல்லாஹ் கட்டாயப்படுத்தி உள்ளான். இது பற்றிய பல திருவசனங்கள் அல்குர்ஆனில் வந்திருக்கின்றன. அஹ்லுல் பைத்தினர் தூய்மை நிறைந்த தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த உம்மத்தினை வழிநடத்தும் உயரிய தகுதியினைக் கொண்ட உதாரணப் பிறப்புகளாகும்;. நபிகளார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின்னால் அஹ்லுல் பைத்தினரின் சீரிய வழிகாட்டுதலில் வாழ எமக்கு அல்லாஹ் தௌபீக் புரிவானாக.  

உலகளாவிய இஸ்லாமியத் தூதை எடுத்துச் செல்வதிலும், உலகில் தீன் கொடியை நிலை நாட்டுவதிலும் அஹ்லுல் பைத்தினரின் சீரிய தலைமைத்துவப் பண்புகளும் வழிகாட்டல்களும் அளப்பரிய இடத்தை வகிக்கின்றன.

அல் குர்ஆனின் ஒளியில் அஹ்லுல் பைத்back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next