அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்2-         அஹ்லுல் பைத் மீது அன்பு வைத்தல்

3-         பரிசுத்த குர்ஆன் ஓதுவித்தல்

நிச்சயமாக குர்ஆனை சுமந்தவன் எந்த நிலலுமே அற்ற அந்த நாளில் நபிமார்களுடனும், தூய்மையாளர்களுடனும் அல்லாஹ்வின் நிழலில் இருப்பான்.என அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸுயூதி: இஹ்யாவுல் மையித் 40ம் பக்கம், இப்னு ஹஜர்: ஸவாயிக் 103ம் பக்கம்)

அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி மீது அன்பு லைத்தலும் குர்ஆனை ஓதுதலும் எம் அனைவர் மீதும் கடமையாக உள்ளது. அது போல் அஹ்லுல் பைத்தினர் மீது அன்பு வைத்தல் கடமையாகின்றது. இவற்றில் நாம் ஒட்டி இருப்பதுடன் எமது பிள்ளைகளுக்கும் இப்பயிற்சிகளை வழங்கி அல்லாஹ்வினதும் அண்ணல் நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களினதும் திருப் பொருத்தத்தைப் பெருவோமாக.

உடலுக்கு தலை: தலைக்குக் கண்கள்

முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் அஹ்லுல் பைத் உடலுக்குத் தலையாகவும் தலைக்கு கண்களாகவும் வைத்துக் கொள்ளுங்கள. ஏனெனில் நிச்சயமாக தலையின்றி உடலும் கண்களின்றி தலையும் நேர் வழி பெறாது. (ஆதாரம்: தபராணி)

                 

                     எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்

                     சிரசின் வழிகாட்டி இரு விழிகள்

ஆம் நல்லோர் வாக்குகள் இவை. இதே உதாரணத்தை அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அஹ்லுல் பைத்தின் ஸ்தானம் பற்றிய விளக்கமாக கையாண்டுள்ளதை நாம் காண்கின்றோம். ஆக: உடலுக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு கண்களாகும். அதுபோல் எம் வாழ்விற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் அஹ்லுல் பைத்தினர் இருக்கின்றனர். அவர்களைப் பின்பற்றி விமோசனம் பெறுவோமாக.

துருவ நட்சத்திரம்

வானுலகில் வழி (திசை) காட்டியாய் நட்சத்திரம் இருப்பது போல் பூவுலகில் வழிகாட்டியாய் எனது அஹ்லுல் பைத் இருக்கின்றது. என அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறிளார்கள்.  (அறிவிப்பாளர்;: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தபராணி)

இமாம் அஹமத் இப்னு ஹம்பல் (ரலி) தனது மனாகிப் என்ற நூலிலும் இந்த கருத்துடைய ஹதீதைப் பதிவு செய்துள்ளார்.

திக்குத் தெரியாத காட்டில்:ஆழிக் கடலில்:முன் பின் தெரியாத நிலப்பரப்பில் மனிதரின் வழிகாட்டியாய் துருவ நட்சத்திரங்கள் உள்ளன. அது போலவே நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் புண்ணிய குடும்பமான அஹ்லுல் பைத் எமது வழிகாட்டியாய் உள்ளது. அல்குர்ஆனினதும் அஹ்லுல் பைத்தினதும் வழிகாட்டுதலுடன் ஈருலகிலும் ஈடேற்றம் பெற முயல்வோமாக!

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25