அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்பொறுப்புக்கள்: அமான்

நிச்சயமாக அல்லாஹ் மூன்று பொருப்புக்களை எம்மிடம் ஒப்படைத்துள்ளான். யார் அவற்றைப் பாதுகாக்கின்றார்களோ அவர்களின் தீன், துன்யா ஆகிய விடயங்களை அல்லாஹ் பாதுகாக்கின்றான்.அவ்வாறு பாதுகாக்காதவர்களின் எதனையும் அல்லாஹ் பாதுகாப்பதில்லை, அவையாவன:

1-         இஸ்லாத்தின் கண்ணியம்

2-         எனது கண்ணியம்

3-         எனது குடல்வாய் சனங்களின் கண்ணியம். என அண்ணலார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: தபராணி, இப்னு ஹஜர்: அஸ்ஸவாயிக் அல் முஹ்ரிகா 90ம் பக்கம்)

ஒரு முஸ்லிம் இஸ்லாத்தினதும் இறைத்தூதரினதும் கண்ணியத்தைக் காப்பது கடமையாகும். ஏனெனில் அவனது ஈருலோக ஈடேற்றத்தை இஸ்லாம் உறுதி செய்கின்றது. அத்துடன் இஸ்லாத்தை அவனுக்கு வழங்கியவர் இறைத்தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களேயாகும்.

இங்கு இறைவேதம் இறைத்தூதர் என்பவற்றுடன் இறை தூதரின் குடும்பத்தினரும் சேர்க்கப்பட்டு மூன்று பொருப்புக்கள் எமமீது பொறுப்புச் சாட்டப்hட்டுள்ளன. இப்பொறுப்புக்களைப் பேண்ப் பாதுகாக்க வல்ல இறைவன் எமக்கு அருள் பாலிப்பானாக!

ஒழுக்கப் பயிற்சிகள்

மூன்று விடயங்களில் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கப் பயிற்சி அளியுங்கள்:

1-         நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீது அன்பு வைத்தல்back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next