அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்அஹ்லுல் பைத்தினரின் முக்கியத்துவம் பற்றி பின்வரும் ஹதீத் எமது அவதானத்துக்குரியதாகும். அஹ்லுல் பைத் விடயத்தில் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறும் விடயங்களை அவதானித்துக் கொண்டிருங்கள். (அறிவிப்பாளர்: அபூபக்கர் இப்னு உமர், நூல்: புஹாரி பாகம் 5, 26ம் பக்கம்)

அஹலுல் பைத் சம்பந்தமான எமது நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் மிக முக்கியமானவையாகும். ஆது மட்டுமன்றி அவர்கள் மீது எமக்கு கடமையாக்கப்பட்டுள்ளவற்றை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும். இவற்றையே இந்த ஹதீத் வலியுருத்துகின்றது. இந்த விடயத்தில் பெரும்பாலான ஹதீஸ் நிபுணர்கள் ஒன்று பட்ட கருத்தையே தெரிவிக்கின்றனர்.

ஹதீது தக்லைன் என்ற ஹதீது சிற்சில மாற்றங்களுடன் பல ஹதீதுகள் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது. உதாரணமாக இமாம் அஹ்மது இப்னு ஹம்பலின் முஸ்னாத் (அத்தியாயம்:3 பக்கம்:17) திலும் இது பதியப்பட்டுள்ளது.

ஸபீனா: கப்பல்

எனக்கும் என்னுடைய அஹ்லுல் பைத்துக்குமான உதாரணம்: நூஹ்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் கப்பலாகும்.எவர் அதில் ஏறிக் கொண்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றார். எவர் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் மூழ்கடிக்கப்படடு நஷ்டமடைந்தார். (அண்ணல் நபிகள்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி ஆதாரம்: முஸ்தத்ரகுல் ஹாகிம் 2ம் பாகம் 343ம் பக்கம் கனஸுல் உம்மால் 6ம் பாகம் 216ம் பக்கம்)

இமாம் முஸ்லிமின் நிபந்தனைகளின் படி இந்த ஹதீத் ஸஹீஹானது என்று இமாம் ஹாக்கிம் குறிப்பிட்டுள்ளார் மேலும் இந்த ஹதீத் அபூதர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் தபராணியிலும் பதியப்பட்டுள்ளது.

நூஹ்  அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் அல்லாஹ்வின் உத்தரவின் படி ஒரு கப்பலை அமைத்தார்கள். நிராகரிப்போரின் தொல்லைகளிலிருந்து தப்புவதற்காய் அல்லாஹ்வின் உத்தரவின் படி அமைக்கப்பட்ட அந்த கப்பலில் ஏறிய விசுவாசிகள் அந்தக் பெரு வெள்ளத்தில் இருந்தும் தப்பி ஈடேற்றம் பெற்றார்கள். அதில் ஏற மறுத்து நூஹ்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் இறைபனியை நிராகரித்தோர் பெரு வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டார்கள்.

பெரு வெள்ளம் வரும் என்ற நபிகளாரின் எச்சரிக்கையை நம்ப மருத்து அவர்கள் அமைத்த அந்தக் கப்பல் அப்படியான வெள்ளத்தில் தம்மைக் காப்பாற்றுமா என்று சந்தேகம் கொண்டு ஏளனம் செய்த நிராகரிப்போர் அல்லாஹ்வினால் மூழ்கடிக்கப்பட்டு அப்படியே நாசம் செய்யப்பட்டார்கள்.

அண்ணலார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தம் உம்மத்தாராகிய எம்மை நோக்கி பெருஞ் சேதம் விளைவிக்க வல்ல அந்தப் பெருவெள்ளத்தில்இருந்து தப்புவதற்கான ஒரு ஸபீனாவாக:கப்பலாக தமது அஹ்லுல் பைத்தினரை அறிமுகம் செய்துள்ளார்கள்.

இதன் மூலம் நாம் அஹ்லுல் பைத் எனப்படும் இந்த பாதுகாப்பளிக்கக் கூடிய ஸபீனாவின் சிறப்பை அறிந்து கொள்கின்றோம். இதில் ஏறி ஈடேற்றம் பெறுவோமாக!back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next