அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்ஆதாரம்: ஸஹீஹுல் முஸ்லிம் அத்தியாயம்: 7 பக்கம். 127, முஸ்னத் அஹ்மத்    அத்தியாயம்: 4 பக்கம். 366, பைஹகி அத்தியாயம்: 2 பக்கம்.148, தாரமி அத்தியாயம்: 2 பக்கம். 431, ஸஹீஹுல் திரிமிதி   அத்தியாயம்: 2 பக்கம். 308, கன்ஸுல் உம்மால்   அத்தியாயம்: 1 பக்கம். 45  மேலும் இப்னு கதிர் எனும் பிரபல்யமான தப்ஸீரின் 4ம் அத்தியாயத்தில் 113ம் பக்கத்திலும் இது பதியப்பட்டுள்ளது.

ஹதீது கலை நிபுனர்களின் முடிவின் படி இந்த ஹதீத் மிகப் பிரபல்யமான ஆதாரங்கள் நிரம்பிய முதவாத்திரான ஹதீதாகும்.

எம்பெருமானார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அருளியதாக ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்:

ஒரு நாள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மக்காவிற்கும் மதினாவிற்கும் இடையில் உள்ள கும் என்ற இடத்தில் வைத்து பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து ஆரம்பித்த அவர்கள்.

மக்களே அல்லாஹ்வுடைய தூதர் ஒருவர் என்னை அழத்து அதற்கு பதில் சொல்ல வேண்டியவனாக நான் இருக்கின்றேன். இந்நிலையில் நான் உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அல்லாஹ்வின் வேதத்தைக் கைக்கொண்டு அதனை பின்பற்றி நடவுங்கள்..

   என்று கூறியதுடன் அல்லாஹ்வின் வேதத்தை நாம் பின்பற்றி நடப்பதற்காய் எமக்கு ஆசையும் ஆர்வமும் ஊட்டினார்கள். தொடர்ந்து அவர்கள்..

இரண்டாவது விடயம் எனது அஹ்லுல் பைத் (குடும்பம்) ஆகும். எனது அஹ்லுல் பைத் விடயத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகின்றேன் என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினார்கள். (ஸஹீஹுல் முஸ்லிம் அத்தியாயம்: 7: 122ம் பக்கம்)

இதே கருத்தை வலியுருத்தும் இன்னும் பல ஹதீதுகள் பல கிரந்தங்களில் உள்ளன. அவற்றை விரிவஞ்சி விடுகின்றோம்.

அண்ணலார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அருளிய இந்த ஹதீதுகள் முஸ்லிம்கள் மீது இரு பெருமதிமிக்க பின்பற்றி நடக்க வேண்டிய முக்கிய விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றன. அவற்றை பின்பற்றி நடக்காவிடின் நாம் வழிதவரி நடக்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கையும் நபிகளார் முஹம்மதத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களால் விடுக்கப் கட்டுள்ளதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் பின்பற்ற வேண்டிய இரு முக்கிய விடயங்களில் அஹ்லுல் பைத்தும் ஒன்று என்பது இங்கு கோடுகாட்டப்பட்டுள்ளது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next