அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்களை மணம் முடித்து சில வருடங்களில் அவர்களுக்கு ஹஸன்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களும் ஹுஸைன்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களும் பிறந்தார்கள் இந்த இருவரும் கூட அண்ணல் நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி நேரடி வழிகாட்டுதலிலேயே வளர்க்கப்பட்டார்கள்.

ஆக அஹ்லுல் பைத்தினரான ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம், ஹஸ்ரத் ஹஸன்  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹுஸைன்  அலைஹிஸ்ஸலாம்  ஆகிய நாள்வருமே அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களாலேயே வளர்க்கப்பட்டனர்.இதனால் அவர்களின் வாழ்வு இறைத்தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களை அச்சொட்டாகப் பின்பற்றியே அமைந்திருந்தது. இறைத்தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் வாழ்வு இறைமறையாகவே இருந்தது. இதனால் தான் இறைமறையும், இறைத்தூதரின் புண்ணிய குடும்பமும் ஒன்றில் ஒன்று பிரியாது பின்னிப் பிணைந்ததாக அமைந்தது. இவ்வாரான பெருமைகள் உயர்வுகள் நிரம்பிய அஹ்லுல் பைத் பற்றி நூற்றுக் கணக்கான ஹதீதுகள் வந்துள்ளன. அவற்றுட் சிலவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.

தக்லைன்: இரு முக்கிய விடயங்கள்

எம் பெருமானார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மானுடர்க்கெல்லாம் ஓர் அழகிய முன்மாதிரியாக வந்தவர்களாகும். இறை தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்த அவர்கள் அன்னவர்களுக்கெல்லாம் ஒரு முத்திரையாகத் திகழ்ந்தார்கள். எல்லாம் வல்ல இறைவன் மானுடர்க்கு வழிகாட்டியாய் அருளிய தீனுல் இஸ்லாம் என்னும் வாழ்க்கை வழியை பூரனம் செய்தவர்கள் எம் பெருமானார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களே!

பெருமானார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தூய மார்க்கத்தினை நிறைவு செய்ததன் பின்னரே அதாவது இறை பனியை முடிவு செய்ததன் பின்னரே எல்லாம் வல்ல நாயன் இஸ்லாத்தை எமது மார்க்கமாக முடிவு செய்தான்.

முஹம்மதை படைக்கும் நோக்கம் இல்லா விடின் இந்த பிரபஞ்சங்களையே படைத்திருக்க மாட்டேன் என்று இறைவன் கூறுமளவிற்கு பெருமதி மிக்க எம் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தமது மறைவுக்குப் பின்னரும் நாம் வழிதவராமல் இருக்க அறிவுறுத்தல்களையும் அறிவுரைகளையும் அள்ளி வழங்கியுள்ளார்கள்.

எம்பெருமானார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் இந்த தொடரில் எமக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில் மிகப் பிரதானமானது ஹதீது தகலைன் எனப்படும் அறிவுறுத்தலாகும்.

ஹதீது தகலைன்

நான் உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன.ஒன்று அல்லாஹ்வின் வேதம் இரண்டாவது எனது அஹ்லுல் பைத் (குடும்பம்). இவ்விரண்டையும் நீங்கள் கைக்கொள்ளும் வரை என்றுமே வழிதவர மாட்டீர்கள். (நிச்சயமாக)ஹவ்லுல் கவ்ஸரில் என்னிடம் வரும் வரை அவை இரண்டும் ஒன்றை ஒன்று பிரிய மாட்டாது என அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்போர் அலி  அலைஹிஸ்ஸலாம் , இப்னு அப்பாஸ் (ரலி), அபூதர் கப்பாரி (ரலி), ஜாபிருள் அன்ஸாரி (ரலி), இப்னு உமர் (ரலி),ஹுதைபத் இப்னு அஸ்யத் (ரலி), ஸெய்யித் இப்னு அர்கம் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி), அபூஹுரைரா (ரலி), ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), அபூ ஐயூபல் அன்ஸாரி (ரலி), இப்னு தாபித் (ரலி), உம்மு சல்மா (ரலி), அபூ சயீத் அல் குத்ரி (ரலி) போன்றோர் பிரபல்யமான 33 அறிவிப்பாளர்கள்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next