அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்  அது போல் ரஸுலுல்லாஹ  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் வாரிசுகளான அஹ்லுல் பைத்தினர் அனைவரும் தூய்மையாளர்கள் தூய இஸ்லாத்தைப் போதிக்க வந்த நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தூயவர்களாகவே இருந்தார்கள். அதுபோல் அவர்களின் வீட்டாரும் தூயவர்களாகவே இருந்தார்கள்.

  ரஸுலுல்லாஹ்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் வாழ்க்கை முறையை அப்பழுக்கின்றி அச்சொட்டாகப் பின் பற்றி வாழ்ந்தவர்கள் அஹ்லுல் பைத்தினர். மேலும் அண்ணலாரின்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி ஒவ்வொரு செயலிலும் உதவியாளர்களாய் அஹ்லுல் பைத்தினர் வாழ்ந்தார்கள்.

  இப்படியான உயர்வுகளை தம்மகத்தே கொண்டுள்ள அஹ்லுல் பைத்தினரின் சிறப்புக்கள் பற்றி சுருக்கமான ஓர் அறிமுக நூலாக இது அமைகின்றது.

அறிமுகம்

வல்ல அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா உலக மாந்தரை நேர்வழிப்படுத்த நெறிப்படுத்த காலத்துக் காலம் நபிமார்களையும், ரஸுல்மார்களையும் அனுப்பினான். தூய்மை பொருந்திய அந்த நபிமார்கள், ரஸுல்மார்களில் எல்லாம் எமது நாயகம் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் உயர்ந்தவர்கள் உன்னதமானவர்கள் அதிலும் ஏனைய இறைத்தூதர்களை போலன்றி இவர்கள் ஒரு சமூகத்திற்காக அல்லது ஒரு நாட்டினர்க்காக வந்தவர்களல்லர். மாறாக ரஹ்மதுல்ஆலமீன் என்று இறைவனாலேயே போற்றப்பட்ட அகிலத்திற் கெல்லாமே ஓர் அருட்கொடையாக அமைந்தார்கள்.

  அந்த உயர்ந்த இறை தூதர்களின் முத்திரையான எங்கள் நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் பரிசுத்த குடும்பத்தினரே அஹ்லுல் பைத் என அழைக்கப்படும் (நபியவர்களின்) வீட்டார்கள் அல்லது குடும்பத்தவர்கள் ஆகும்.

அஹ்லுல் பைத்தினர் உயர்வு பெற்றவர்கள், தூய்மையானவர்கள். அவர்கள் மீது உலக மாந்தர் அனைவருமே அன்பு கொண்டுளளனர். நபிகளார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் இறை தூதை விசுவாசிக்கும் யாவரும் அன்னவர்களின் அடியொறறி வாழ்ந்த அஹ்லுல் பைத்தினர் மீது நேசம் கொண்டவர்களே. அவர்களின் சீரான வழிகாட்டலைப் பின்பற்றியே வாழ்கின்றனர்.

  இஸ்லாம் எனும் தொடுவானில் தோன்றும் நம்பிக்கை நட்சத்திரங்கள் அஹ்லுல் பைத்தினர். ஆஹ்லுல் பைத்தினரை அல்லாஹ் சுபுஹானஹு தஆலா தனது புனித மறையில் புகழ்ந்துரைக்கின்றான்.

    ஓ அஹ்லுல் பைத்தினரே! உங்களை விட்டு (சகல) அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்று முழுதாகத் தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்பகிறான். அல் குர்ஆன் 33:33

    இந்த திருவசனம் தொடர்ச்சியான தெய்வீக வழிகாட்டலின் ஒரு வெளிப்பாடேயாகும். நேர்வழி காட்டக் கூடிய தூய்மையான ஒரு கூட்டத்தினர் மீது உலக முஸ்லிம்களின் கவனத்தை செலுத்தவே அல்லாஹ் இதன் மூலம் அஹ்லுல்பைத்தினரின் அப்பழுக்கற்ற தூய்மை தெளிவாகின்றது. அவர்களின் மாசற்ற குணவியல்பு இதன் மூலம் கோடிட்டு காட்டப்படுகின்றது. முஸ்லிம் உம்மத்தினரை வழி நடாத்திச் செல்லக் கூடிய முன்னணி வீரர்கள் அஹ்லுல் பைத்தினரே என்று இத்திருவசனம் பறை சாற்றுகின்றது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next