அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்அருள் பெற்ற அஹ்லுல் பைத் என்ற அந்த மரத்தின் விதையாக இத்திருமணம் நிகழ்ந்தது. பின்னர் செழித்து வளர்ந்து கிளைகளை பரப்பி பெரு விருட்சமாக அது மாறியது.

அனஸ் இப்னு மாலிக் (றழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்.

அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  அவர்களை நோக்கி நானூறு மித்கால் வெள்ளி மஹருக்கு பாத்திமாவை உமக்கு மணமுடித்து தருமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நீர் இதனை ஏற்றுக் கொள்வீரா? எனக் கேட்டார்கள்.

ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் இதற்கு சாதகமாகப் பதிலளித்தார்கள். இதனை; கேட்ட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  அவர்களை நோக்கி:

   அல்லாஹ் உம்முடன் இனைந்து கொள்வானாக! உம்மைச் சந்தோஷப் படுத்துவானாக! உம்மீது அருள் பொழிவானாக! உம்மிடமிருந்து நல்லவை பலவற்றை வெளிப்படுத்துவானாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

  மேலும் அல்லாஹ் மீது ஆணையாக அவன் அவர்களிடமிருந்து நல்ல பலவற்றை வெளிக் கொணர்ந்தான் என்றும் கூறியதாக அனஸ் (ரலி)   அறிவிக்கின்றார்.

   ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  அவர்களினதும் ஹஸ்ரத் பாத்திமா  அலைஹிஸ்ஸலாம்  அவர்களினதும் திருமணம் முடிந்த பின் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வுளுச் செய்து கொண்டார்கள். அந்த தண்ணீரை மணமக்கள் இருவர் மீதும் தெளித்தவர்களாய் பின் வருமாறு விளம்பினார்கள்:

அல்லாஹ் அவர்களின் வாரிசுகளின் பேரால் அவர்கள் மீது அருள் பொழிகின்றான். ஆதாரம்: தபாரி

ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்கள் திருமண பராயத்தை அடைந்த காலங்களில் பலர் அவர்களை பெண் கேட்டு நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களை அணுகினர். அதில் பல முக்கிய நாயகத் தோழர்களும் அடங்குவர். அப்போதெல்லாம் நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் பெண் கேட்டவர்களிடம் பின்வரும் பதிலையே கூறினார்கள்.

(அல்லாஹ்விடமிருந்து) பாத்திமாவின் திருமணம் பற்றிய கட்டளை ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next