அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்என்மீது கொண்ட நேசத்திற்காக எனது அஹ்லுல்பைத்தை நேசியுங்கள். என அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹுத் திர்மிதி : பாகம் 2 பக்கம் 308, தாரிக் பஃதாதி: பாகம் 4 பக்கம் 159முஸ்தத்ரகுல் ஹாக்கிம்: பாகம் 3 பக்கம் 149

   எனது மரணத்தின் பின்னர் உங்களில் சிறந்தவர் யாரெனில் எனது குடும்பத்தினரில் அன்புடையவரே.என அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள்.

இமாம் ஹஸன்  அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் கூறுகின்றார்கள்:

     நான் அஹ்லுல் பைத்தை சேர்ந்தவன். முஸ்லிம்கள் எல்லோரும் அன்பு செலுத்த வேண்டும் என்று இறைவனால் பணிக்கப்பட்ட அஹ்லுல்பைத்தைச் சேர்ந்தவன். இவ்வாறு அவர்கள் கூறியதுடன் நிற்காமல்.

 (நபியே) நீர் கூறும்! உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத்தவிர இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை என்ற அல்குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.

இந்த அறிவிப்பில் வரும் குர்பா என்ற பதம் அஹ்லுல் பைத்தையே குறிக்கின்றது என்பதற்கு சான்றாக அமைகின்றது.

அண்ணலாரின்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வழியில் அஹ்லுல்பைத்

அண்ணல் நபிகளார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் ஹதீதுகளிலும், அவர்களின் அஹ்லுல் பைத்துடனான தினசரித் தொடர்புகளிலும் அஹ்லுல் பைத்துடனான உறவு முறைகளிலும் ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் பாத்திமா  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹஸன்  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹுஸைன்  அலைஹிஸ்ஸலாம்  ஆகியோரின் சிறப்பியல்புகள் உயர்வுகள் நிறைநிதிருப்பதை நாம் காணலாம். அல்லாஹ் தமது திருமறை அல்குர்ஆனில் தூய்மைப்படுத்தியுள்ள அஹ்லுல் பைத்தினர் ஓர் உன்னத பணிக்காகவே அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

இஸ்லாமிய சமூகத்தை வழிநடத்துவதிலும் இஸ்லாமிய வரலாற்றை செப்பனிடுவதிலும் அஹ்லுல் பைத்தினரின் பணி மகத்தானது. அதனாலேயே அஹ்லுல் பைத்தினர் பற்றிய விடயங்களை அண்ணல் நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அடிக்கடி வலியுருத்தி கூறியுள்ளார்கள். அஹ்லுல் பைத்தினரின் பிரகாசமிக்க வழிகாட்டுதலை பல தடவைகள் எதிர்வு கூறியுள்ளார்கள். சாதாரணமாக இரத்த உறவுக்காரர் என்பதால் அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அஹ்லுல் பைத்தினரைப் புகழலவில்லை. அல்லாஹ்வின் கட்டளைப்படி அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வாழ்ந்தார்கள்: வழகாட்டினார்கள். அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் முடிவுகளும் ஏன் சிந்தனைகளும் கூட அல்லாஹ்வின் கட்டளைக்கு இனங்கவே அமைந்திருந்தன.

அஹ்லுல் பைத்தினர் என்ற கட்டமைப்பின் அடிக்கல்லாக ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் பாத்திமா  அலைஹிஸ்ஸலாம் , அவர்களின் திருமணம் அமைகின்றது. ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் சிறு வயது முதலே நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களால் வளர்க்கப்பட்டார்கள். தனது சிறிய தந்தையின் ஏழ்மை நிலையினால் அவரது மகனான ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  அவர்களை வளர்க்கும் பொறுப்பை அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மேலும் ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்கள் அண்ணலாரின்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அருமைப் புதல்வியாவர். எனவே அண்ணலாரின்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி நேரடியான வழிகாட்டுதலிலும் பராமரிப்பிலுமே இவர்கள் வாழ்ந்தார்கள்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next