அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத்.

நபிகளாரின் அஹ்லுல் பைத்தினரைச்சேர்த்துக் கொள்ளாத ஸலவாத் ஸலவாத் ஆகாது என இமாம் ஷாபிஈ, இமாம் அபூஹனிபா, இமாம் மாலிக், இமாம் அபூ ஹம்பல் போன்ற மார்க்க சட்டவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழுகையில் ;ஸலவாத் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். ஸலவாத் இல்லாத தொழுகை பாதில் ஆகிவிடும். ஸலவாத்தில் அஹ்லுல் பைத் சேர்க்கப்படாவிடின் ஸலவாத் பாதில் ஆகிவிடும்.

அதன்படி அஹ்லுல் பைத் மீது ஸலவாத் சொல்லாமல் நிறைவேற்றப்படும் தொழுகை கூட பாதில் ஆகிவிடும். இந்தக் கருத்தை எல்லா இமாம்களும் வலியுருத்துகின்றனர்.

இது பற்றி இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கவிதை ஒன்று உள்ளது. அதில் அவர்கள்.

                                    அஹ்லுல் பைத்தினரே!

                                    உங்களை நேசிப்பது கடமை

     யார் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ

                                    அவரின் தொழுகை கூடாது.

மேலும் அவர் தமது கவிதை ஒன்றில் பின் வருமாறு பாடுகின்றார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next