அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்ஸலாமும் ஸலவாத்தும்

அகிலத்தார்க்கெல்லாம் அருட்கொடையாக வந்த அண்ணல் நபிகளார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களைக் கௌரவிப்பதற்காய் அன்னவர்கள் மீது ஸலாமும், ஸலவாத்தும் கூறுமாறு வானவர்களை அல்லாஹ் பணித்தான். அது போல் அன்னவர்கள் மீது முஃமின்களும் ஸலாமும் ஸலவாத்தும் கூறுமாறும் அவன் கட்டளையிட்டான்.

இந்த நபியின் மீது அல்லாஹ் ஸலவாத் சொல்கின்றான் மலக்குகளும் ஸலவாத் சொல்கின்றனர்.முஃமீன்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லி ஸலாமும் சொல்லுங்கள்.

இந்த இறை வசனம் அருளப்பட்டபோது நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் ஸஹாபாக்கள் பின்வருமாறு கேட்டனர்.

யாரஸுலுல்லாஹ்! உங்கள் மீது ஸலாம் சொல்வதை நாங்கள் கற்றுக் கொண்டோம். உங்கள் மீது ஸலவாத் கூறுவது எவ்வாறு:

அதற்குப் பதிலாக நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் பின்வரும் ஸலவாத்தை கூறிக்காட்டினார்கள்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலி முஹம்மதின் கமா ஸல்லைய்த அலா இப்றாஹீம் வ அலா ஆலி இப்றாஹீம் வபாரிக் அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம் வஅலா ஆலி இப்றாஹீம் இன்னக ஹமீதுன் மஜீத்.

(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), தல்ஹா (ரலி), அபூ சபீத் அல் குத்ரி (ரலி), அபூஹுரைரா (ரலி),அபூ மஸ்ஊத் அல் அன்ஸாரி (ரலி), கஅப் இப்னு அம்ரா (ரலி), அலி  அலைஹிஸ்ஸலாம் )

ஸலவாத் சொல்லும் போது முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீதும் அவர்களின் அஹ்லுல் பைத்தினர் மீதும் ஸலவாத் சொல்லுவது வாஜிபாகும். அத்துடன் இப்றாஹீம்  அலைஹிஸ்ஸலாம்  மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் ஸலவாத் சேர்த்துச் சொல்லுதல் ஸுன்னத்தாகும்.  இந்த விடயம் சம்பந்தமான 18 ஹதீதுகள் பல்வேறு கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன.

மேலும் ஆகக்குறைந்த ஸலவாத் என அறிஞர் பெருமக்கள் கருத்தொருமித்து கூறிய ஸலவாத் பின்வருமாறு அமைகின்றது: ;back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next