அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்  ஹஸ்ரத் மூஸாவின் நப்ஸாக- நப்ஸிலிருந்தும் உள்ளவராக ஹாறூன் இருந்தது போல் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் நப்சாக- நப்ஸிலஸருந்து உள்ளவராக ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  இருக்கிறார்கள் என அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறிளார்கள்.

  ஆக புதல்வர்களாக ஹஸனும்  அலைஹிஸ்ஸலாம் , ஹுஸைனும்  அலைஹிஸ்ஸலாம் ; பெண்களில் ஹஸ்ரத் பாத்திமாவும் (அலைஹாஸலா), எங்களை என்பதாக நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும், ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  அவர்களும் சென்றார்கள். அதாவது பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்றபிரார்த்தனையை முன்னிறுத்திய விவாதத்தில் நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும், அவர்களின் பரிசுத்த குடும்பமாகிய அஹ்லுல் பைத்தினரும் மட்டுமே பணயமாக வைக்கப்பட்டனர்.

இப்படியான ஒரு நிகழ்வு பங்கு பற்றக் கூடிய தார தண்மியம் அவர்களிடம் மட்டும் இருந்தமையே இதன் காரணமாகும்.

விவாதத்திற்கான இடத்தில் இரு சாராருமே கூடிவிட்டனர். ஒவ்வொரு கணமும் பரபரப்பாக கழிந்து கொண்டிருந்தது. அங்கே அந்த கிறிஸ்தவ கூட்டத்தினரில் ஒரு வயோதிபரும் இருந்தார்.அவர் அண்ணல் நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களையும், அஹ்லுல் பைத்தினரையும் கூர்மையாகப் பார்த்தார்.பார்த்த மாத்திரத்திலேயே அவர் மனதில் ஒருவித அச்சம் கடி கொண்டு விட்டது அதனை அவரது முகம் துலாம்பரமாகக் காட்டியது.

புரபரப்படைந்த அந்த வயோதிபர் தமது கூட்டத்தினரை பார்த்து- ஜொலிக்கின்ற இந்த முகம்களைப் போன்ற வேறு முகம்களை நான் எங்குமே, என்றுமே கண்டதில்லை. இவர்கள் பரிசுத்தவான்கள். இந்த முகம்களின் பொருட்டில் பெரிய பெரிய மலைகளையே அல்லாஹ் புரட்டி விடுவான்.

எனவே அவர்களுடன் நீங்கள் விவாதம் புரியாதீர்கள் அப்படி மீறி நீங்கள் விவாதம் புரிந்தீர்களேயானால் இந்த உலகம் அழியும் வரை இந்த உலகில் ஒரு கிறிஸ்தவரேனும் மிஞ்சமாட்டோம் என்று நிதானமாக அதே வேளை அழுத்தமாக கூறினார். இந்த பேச்சைக் கேட்ட கிறிஸ்தவக் குழுவினர் பின் வாங்கி விவாதத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

மேற்படி சம்பவம், விடயங்கள் தொடர்பான ஆதாரங்கள் பல கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன. விரிவஞ்சி  சிலவற்றை மட்டுமே கீழே தருகின்றோம்.             

 ஸஹீஹுல் முஸ்லிம், ஸஹீஹுத் திர்மிதி, பஹ்ருஸ் சாலி, தப்ஸீரல் கபீர், அல் கஷ்ஷாப், தபாரி, அபுல், பிதா, இப்னு,கதிர், ஸுயூதி போன்ற வரலாற்றாசிரியர்களும, அல்குர்ஆன், அல்ஹதீஸ் விரிவுரையாளர்களும். இச்சம்பவத்தை பதிவு செய்துள்ளதுடன் இதன் சிறப்பையும் எழுதியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தின் ஒளியில் அலீ, பாத்திமா, ஹஸன், ஹுஸைன்  அலைஹிஸ்ஸலாம்  ஆகிய அஹ்லுல் பைத்தினரின் உயர்வை நாம் தெளிவுரப் புரிகின்றோம்.

இது ஓர் உலகளாவிய உண்மையாகும். அல்லாஹ்வும், அவனது அருமை நபிகளாரும் போற்றிப் புகழும் அஹ்லுல் பைத்தினரை நாமும் புகழ்ந்து அன்பு கொண்டு பின்பற்றி வாழ்வோம்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next