அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்இன்னும் எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசம் கொண்டவர்களையும் தமது பாதுகாவலர்களாய் எடுத்துக் கொள்கின்றார்களோ நிச்சயமாக அவர்கள்தான் அல்லாஹ்வின் கட்சியினர். அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.  அல்குர்ஆன் 5:56

   மேற்குறித்த இறைவசனங்களில் குறிப்பிடப்படுகின்ற விசுவாசம் கொண்டவர்கள் என்ற பதங்கள் ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  அவர்களையே குறிக்கின்றன என்று அல்குர்ஆன் விரிவுரையாளர் ஸமக்ஷரி தமது அல்-கஷ்ஷாப் என்ற தப்ஸீரில் குறிப்பிடுகின்றார். மேலும் பல விரிவுரையாளர்கள் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

முபாஹலா - விவாதம்

இஸ்லாத்தின் தூதை எம் பெருமானார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் திக்கெட்டும் பரப்பிக் கொண்டிருந்த காலம் அது. இஸ்லாத்தின் பால் மானுடர் கூட்டங் கூட்டமாக சேர்ந்து கொண்டும், சேரத் துடித்துக் கொண்டுமிருந்தனர். இது ஒருபுறம். முறுபுறத்தில் இஸ்லாத்தை நம்பாமல் நிராகரித்து நபிகளார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களை பொய்யர் புழகர் என்று பிரச்சாரமும் நடந்து கொண்டிருந்தது. விதண்டாவாதம், குதர்க்கவாதம் என்பவற்றை ஆயதங்களாகக் கொண்டு சில மதக் குழுக்களும், சிலை வணங்கிகளும் இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

அக்காலங்களில் இவ்விடயம் சம்பந்தமான தெளிவிற்கான அறைகூவலாக இறங்கியது பின்வரும் இறைவசனம்.

நபியே இது பற்றி முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் இதைக் குறித்துத் தர்க்கம் செய்தால் வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் புதல்வர்களையும், உங்கள் பெண்களையும் எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக்கொண்டு) பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என்று நாம் பிரார்த்திப்போம் என நீர் கூறும்.

இந்த வசனம் இறங்கிய காலம் கவனத்திற்கொள்ளத்தக்கது. நஜ்ரான் தேசத்து கிறிஸ்தவர்கள் சிலர் இஸ்லாத்தினை ஏற்காது தம்முடைய மார்க்கமே சிறந்தது என்று கூறிக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு இஸ்லாமிய விளக்கங்கள் கசப்பாய் இருந்தன. அவற்றை அவர்கள் பொய்யாக்கிக்கொண்டிருந்தனர். குதர்க்கவாதம் செய்த கொண்டிருந்தனர். எனவேதான் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை இப்படியானதொரு சிக்கல் நிறைந்த விவாதத்திற்கு வருமாறும் அதில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்திற்க ஒப்புக் கொள்ளுமாறும் அழைக்கும்படி கூறினான். இந்த இறை கட்டளைப்படி நஜ்ரான் தேசத்துகிற்ஜஸ்தவ தலைவருக்கும் அவரது கூட்டத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டது.

நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும் அந்தக் கிறிஸ்தவக் குழுவினரும் விவாதத்திற்கு தயாரானார்கள்.நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தம்முடன் ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம் , ஹஸரத் பாத்திமா அலைஹாஸலாம், ஹஸ்ரத் ஹஸன்  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹுஸைன்  அலைஹிஸ்ஸலாம் ஆகியோரை அழைத்துச் சென்றார்கள். அல்குர்ஆன் வசனத்தின் படி எங்கள் புதல்வர்களையும் என்ற ரீதியில் ஹஸ்ரத் ஹஸன்  அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹுஸைன்  அலைஹிஸ்ஸலாம்  ஆகியோரும், எங்கள் பெண்களையும், என்ற ரீதியில் ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்களையும், எங்களையும் என்ற ரீதியில் ஹஸ்ரத் அலி  அலைஹிஸ்ஸலாம்  அவர்களையும் நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள்.

இதில் எங்களையும் என்ற பதம் அன்புஸஹும் என்ற அறபு பதத்தின் தமிழ் வடிவமே ஆகும். எங்களை எனும் போது ஒரே நப்ஸில் (ஆத்மாவில்) இருந்து பிறந்த ஒன்றுக்கு மேற்பட்டவர் என்ற பொருள் வருகின்றது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next