அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்..(நபியே) நீர் கூறும்: உறவினர்கள் (குர்பா) மீது அன்பு கொள்வதைத் தவிர இதற் காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை..      அல்குர்ஆன் 42:23

இந்த இரண்டு வசனங்களிலும் இருந்து நாம் விலங்கிக் கொள்வது என்ன? முதல் வசனத்தில் (அப்படிக் கேட்டிருந்தாலும்) அது உங்களுக்கே இருக்கட்டும் என்று வருகின்றது அதாவது ஓர் உதவி கேட்டு அந்த உதவியை நாம் செய்தால் அதனால் கிடைக்கும் இலாபம் கேட்டவரான நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு தேவையற்றதாகவே உள்ளது. ஆக அப்படி நம்மிடம் நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஓர் உதவியை கேட்டிருந்தால் அதன் நன்மை எமக்கே உரித்தாகும். ஆதாவது அதனை செய்து கொடுத்து லாபம் அடையப் போவது நாமேயாகும்.

  இரண்டாவது வசனத்தில் உறவினர்கள் (குர்பா) மீது அன்பு கொளவதைத் தவிர என்று வருகின்றது. இதிலிருந்து கேட்கப்படும் கூலி வரையரை செய்யப்பட்டுள்ளது. அதாவது நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தம்முடைய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துவதைத் தவிர வேரொரு கூலியையும் எம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த இரண்டு வசனங்களையும் ஆராய்ந்து விளக்கும் அல்குர்ஆனியல் அறிஞர்களின் கருத்தின்படி கூலியாக கேட்கப்பட்ட குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துதல் என்பது நிறைவேற்றப்பட்டால் அதன் மூலம் பயன்பெறுவது - நன்மை அடைவது நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் உம்மத்தாகிய நாமேயன்றி நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அல்ல. ஆக- நாம் அண்ணலாரின்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி குர்பா மீது அன்பு செலுத்தினால் எமக்கே அது நன்மைகளை அள்ளித்தரும் என்பதே உண்மையாகும்.

    மேலும் அல்குர்ஆனியல் அறிஞர்களின் கருத்துப்படி இந்த வசனத்தில் கையாளப்பட்டுள்ள குர்பா எனும் பதம் அஹ்லுல் பைத்தினரையே குறிக்கின்றது. அத்துடன் முன்னைய அத்தியாயத்தில் நாம் அறிந்து கொண்ட ஹஸ்ரத் இப்ராஹீம்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் பிரார்த்தனையையும் நாம் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். அதாவது என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயாக) இதுவே இப்றாஹீம்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் பிரார்த்தனையாகும். ஹஸ்ரத் நபிகள் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் உங்கள் குர்பா (எனும் நெருங்கிய உறவினர்) யார் யார் என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் அலீ, பாத்திமா, மற்றும் அவர்களின் இரு புதல்வர்கள் (ஹஸன், ஹுஸைன்) எனப் பதிலளித்தார்கள்.

தப்ஸீர் மேதை பஹ்ருத்தீன் அர்ராஸி தமது அத்தப்ஸீர் அல் கபீரில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

முஹம்மதின் ஆல்; என்று நான் குறிப்பிடுபவர்களின் விடயம் முற்று முழுதாகவே அன்னவர்களுள் பின்னிப்பிணைந்ததொன்றாகும்.. மேலும் அலீ, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோரைவிட எவருமே அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கட்கு நெருங்கியவர்கள் இல்லை. இது சங்கிலித் தொடராக வரும் ஹதீதுகளின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இவர்களே முஹம்மதின் ஆல் (குடும்பத்தவர்) எனப்படுவோர்.

தலைமைத்துவம்

இப்றாஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளை இட்டு சோதனை செய்தான். அவை அனைத்தையுமே அவர் முழுமையாக நிறைவேற்றினார். (அவரிடம்) நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (தலைவராக) ஆக்குகிறேன் என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான். அதற்கு (இப்றாஹீம்) என்னுடைய சந்ததியினரிலும் (இமாம்களை) ஆக்குவாயாக! எனக் கேட்டார். என் வாக்குறுதி (அச்சந்ததியிலுள்;ள) அநியாயக் காரர்களைச் சாராது என்று அவன் கூறினான். அல்குர்ஆன் 2:124

இப்றாஹீம்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களுக்கு அல்லாஹ் இமாம்; என்ற உயரிய அந்தஸ்தைப் பரிசாக அளித்த போது அவர்கள் தம் சந்ததியிலும் இமாம்களை ஆக்குமாறு வேண்டினார்கள். அதன்படியே அந்த சந்ததியின் அநியாயக் காரர்களைத் தவிர்ந்த தூயவர்கள் பலரை அல்லாஹ் தலைவர்களாக- பிரதிநிதிகளாக ஆக்கி அருள் புரிந்தான்.

உங்களுடைய வலிகள் (பாதுகாவலர்) எல்லாம், அல்லாஹ்வும், அவனது தூதரும் இன்னும் விசுவாசம் கொண்டவர்களுமேயாகும். அவர்கள் எத்தகையவர்கள் என்றால் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிந்தவர்களாக தொழுகை யை நிறைவேற்றுபவர்களாகவும் ஸக்காத்தை (ருகூவிலும்) கொடுப்பவர்களுமாகும்.  அல்குர்ஆன் 5:55back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next