அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்ஹஸ்ரத் நூஹ்  அலைஹிஸ்ஸலாம்  ஹஸ்ரத் நூஹ்  அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் தமது சமுதாயத்தினரை நோக்கி-

      நிச்சயமாக நான் உங்களுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய தூதனாவேன். ஆகவே அல்லாவுக்கு அஞ்சுங்கள், எனக்கு வழிப்படுங்கள். இதற்காக நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கின்றது என்று கூறினார்கள். அல்குர்ஆன் 26:107,108,109

ஹஸ்ரத் நூஹ்  அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் தம் சமுதாயமக்களிடம் தனது பணிக்காக எதுவித கூலியையுமே கேட்கவில்லை

ஹஸ்ரத் ஷுஐப்  அலைஹிஸ்ஸலாம்

ஷுஐப்  அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் தமது மக்களை நோக்கி பின்வருமாறு கூறினார்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன். ஆகவே அல்லாவுக்கு அஞ்சுங்கள் எனக்கும் வழிப்படுங்கள்.   மேலும் இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிppலங்களின் இறைவனிடமே இருக்கின்றது.  அல்குர்ஆன் 26: 178,179,180. 

ஹஸ்ரத் ஷுஐப்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களும் தம்முடைய மக்களிடம் தமது இறைபனிக்காக யாதொரு கூலியையும் கேட்கவில்லை.

இவ்வாரே ஏனைய நபிமார்களும் மக்களிடம் தமது பனிக்காக சேவைக்காக யாதொரு பலனையும். கூலியையும் எதிர்பார்க்கவுமில்லை கேட்கவுமில்லை.

இறை தூதர்களின் தொடரில் இறுதியாக வந்த எமது நபிகளார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் எல்லாம் வல்ல இறைவன் கூறுகின்றான்.

கூறுவீராக! நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை (அப்படிக் கேட்டிருந்தாலு ம் அது)உங்களுக்கே இருக்கட்டும். என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி(உங்களிடம்) இல்லை. அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாய் இருக்கின்றான். அல்குர்ஆன் 34:47;

அல்குர்ஆனின் இன்னுமோர் இடத்தில் அல்லாஹ் நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் பின்வருமாறு கூறுகின்றான்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next