ஒழுக்கமே உயர்வைத் தரும்




Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

ஒழுக்கம் என்பதை ஒரு முஸ்லிம் தன் கலாச்சாரத்தோடு சேர்த்து வைக்க வேண்டிய விஷயமாகும். மறுமையை நம்பக்கூடிய முஸ்லிம் நன்மை தீமை கணக்கிடப்படும் என நம்பக்கூடிய ஒரு மனிதன் இறைவிசுவாசி அதை கண்டிப்பாக பேணவேண்டும் ஏனெனில்
(
மக்களை)அதிகமாக சொர்க்கத்தில் புகுத்துவது இறையச்சமும் நற்குணமும் தாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா அறிவிக்கிறார். திர்மிதீ.
இறையச்சமும்நற்குணமும் இரு சகோதரர்களாகும் இரண்டும் இணைபிரியாத தண்டவளாங்கள் ஏனென்றால் இறையச்சம் இருக்கின்ற மனிதனிடம் ஒழுக்கக் கேடுகள் இருக்காது ஒழுக்கக்கேடு உள்ள மனிதன் இறை விசுவாசியாக இருக்கமாட்டார். இதை இஸ்லாம் இவ்வாறு கூறுகின்றது
''
உலோபித்தனமும், தீயகுணமும்ஓர் இறைநம்பிக்கையாளனிடம் ஒன்று சேராது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறனார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ.
உலோபித்தனமாகஇஸ்லாம் கருதக்கூடிய விஷயம் என்னவெனில் ஜகாத் என்பதாகும் ஏழை மனிதர்களுக்கு உதவ வேண்டி அல்லாஹ் சில மனிதர்களை தேர்ந்தெடுத்து பணத்தைக் கொடுத்து அல்லாஹ் சோதிக்கின்றான். நாம் கொடுத்த இந்த பணத்தை ஏழைகளூக்கு கொடுக்கின்றானா அல்லது சேர்த்து வைத்து பேசாமல் இருந்து விடுகின்றானா என்று சோதிக்கின்றான் இதை அல்லாஹ் கூறும்பொழுது உங்களுக்கு நாம் அளித்ததிலிருந்து தான தர்மம் செய்யுங்கள்( )
என்றுதான்குறிப்பிடுகின்றான் இல்லையில்லைஇவையெல்லாம் நானாக சம்பாதித்தவை என் முயற்சியின் பலனால் கிடைத்த வெற்றி என்று யாராவது முனுமுனுத்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் இவ்வாறு தாக்கீக் கூறுகின்றார்கள்
''
நீங்கள்உங்கள் சொத்துக்களால் மக்களைக் கவர முடியாது. மாறாக, உங்களுடைய மலர்ந்த முகம் மற்றும் நற்குணத்தால் தான் (அவர்களைக்) கவர முடியும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்
இதுதான் பணத்திற்கும்பணத்திற்கு பின்னால் போகும் பிணத்திற்கும் (மனிதர்களுக்கும்) இஸ்லாம் கொடுக்கும் வெகுமதி.
இதுநல்லது அல்லது கெட்டது என்று எப்படி ஒரு மனிதன் முடிவு செய்வது அதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. ஏனென்றால் புகைபிடிப்பதை மது அருந்துவதை நல்லது என்று கூறக்கூடியவர்கள் கூட இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர் ஆனால் அப்படிப்பட்டவர்கள் கூட சிலரை கண்டால் ஒழிக்கின்றனர் சிலருக்கு அல்லது அவர்கள் விரும்பக்கூடியவர்களுக்கு நாம் செய்யக்கூடிய இந்த காரியம் தெரியக்கூடாது என நினைக்கின்றனர் அதைத்தான் இஸ்லாமும் கூறுகின்றது.
நல்லவை மற்றும்பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமும், நற்செய லும் நன்மையாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
ஆகசகோதரர்களே இஸ்லாம்நற்குணத்தை முஸ்லிமின் தலையாய கடமையாக கருத வேண்டும் என போதிக்கின்றது நற்குணத்தின் மூலமாகத்தான் ஒரு முஸ்லிம் தன்னை மற்ற சமூகத்தாரிலிருந்து வேறுபடுத்தி காட்டமுடியும். எனவே அதை பேணி நடக்கக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக ..!!

முஸ்லிமிடம் வேண்டாத பண்புகள்

பொறாமை கொள்ளாதிருக்கும் படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

கோபத்தில்கொதிப்பவன் வீரனல்ல. மாறாக கோபமூட்டப்படும்போது தன்னைத் தானே அடக்கிக் கொள்பவனே வீரன்'' என்று நபி(ஸ ல்) அவர்கள் கூறினார்கள்

அநியாயம்(எவன் செய்கிறானோஅது அவனுக்காக) மறுமை நாளில் (அடுடக்கடுக்கான) பல இருள்களாக வந்து நிற்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அநியாயத்தைத்தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அது மறுமை நாளில் (உங்கள் முன்பு) இருளாக வந்து நிற்கும், இன்னும் தீய கஞ்சத்தனத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களுக்கு முன்பிருந்தோரை அழித்துவிட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களைக்குறித்து நான் மிகவும் அஞ்சுவதெல்லாம் நீங்கள் சிறிய இணைவைப்பில் ஈடுபட்டு விடுவீர்கள் என்பது தான். பிறருக்குக் காட்டிக் கொள்வதறக்காக வணக்கத்திலும், நற்செயல்களிலும் ஈடுபடுவதே சிறிய இணைவைப்பாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நயவஞ்சகனுடையஅடையாளங்களை மூன்று 1. அவன் பேசினால் பொய்யே பேசுவான். 2. அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். 3. அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.



முஸ்லிமைத்திட்டுவது பாவமாகும். அவனுடன் பேராடுவது இறைநிராகரிப்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான்உங்களை சந்தேகப்பட வேண்டாமென எச்சரிக்கின்றேன். ஏனெனில் செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான்உங்களை சந்தேகப்பட வேண்டாமென எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குடிமக்களைப் பராமரிக்கும்பொறுப்பை ஒரு மனிதரிடம் அல்லாஹ் ஒப்படைத்திருக்க, தன் பிரஜைகளை மோசடி செய்தவனாக அவன் மரணிக்கும் நாளில் உயிர்துறப்பானாயின், அவன் மீது சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விடுவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என்னுடையஇரட்சகனே! எவரேனும்ஒருவர் ஒரு வேலைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபின், (அவரது பொறுப்பில் கவனமில்லாமல்) அவர் அதில் கஷ்டத்தை ஏற்படுத்தினால், அவர் மீது நீ கஷ்டத்தை உண்டாக்குவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


உங்களில்எவரேனும் சண்டையிட்டுக் கொண்டால் (எதிரியின்) முகத்தை (சேதப்படுத்தாமல்) தவிர்த்து விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒருமனிதர் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்டார். அதற்கு, கோபம் கொள்ளாதே! என்று அவர்கள் கூறினார்கள். அவர் மறுபடியும் கேட்டார். அப்போதும்,கோபம் கொள்ளாரே! என்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நிச்சயமாகசிலர் அல்லாஹ்வுடைய சொத்தில் நியாயமின்றி நுழைகிறார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகம் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்விடமிருந்துஅறிவிப்பவற்றில் (ஹதீஸ் குதுஸியில்) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய அடியார்களே! அநியாயத்தை எனக்கு நானே விலக்கிக் கொண்டேன். இன்னும் உங்களுக்கிடையேயும் அதை விலக்கி விட்டேன். எனவே, நீங்கள் உங்களுக்கிடையேயும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்

புறம்பேசுதல் என்றால்என்ன வென்று அறிவீர்களா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவர் என்று கூறினார்கள். உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா?' என்று கேட்டார். அதற்கு, நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்

ஒருவருக்கொருவர்பொறாமை கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் தீய வார்த்தை பேசிக்கொள்ளாதீர்கள். இன்னும் நஜ்ல்' செய்யாதீர்கள். இன்னும் ஒருவருடைய வியாபாரத்தில் மற்றவர் (இடையே புகுந்து) வியாபாரம் செய்யாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வுடைய அடியார்களாகவும் (உங்களுக்குள்) சகோதரர்களாகவும் இருங்கள், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கும் சகோதரனாவான். அவன், அவன் மீது அநியாயம் செய்யாமாட்டான். அவன் அவனை ஏமாற்ற மாட்டான் அவன் அ வனை இழிவுபடுத்த மாட்டான் இறையச்சம் இங்கே இருக்கிறது என்று (கூறி) தன்னுடைய நெஞ்சை மூன்று முறை சுட்டிக் காண்பித்து, மனிதன் தன்னுடைய சகோதரனை இழிவு படுத்துவதே பெரும் தீங்கிற்குப் போதுமானதாகும். முஸ்லிமுடைய இரத்தமும் அவனுடைய சொத்தும், மேலும் அவனது தன்மானமும் மற்றொரு முஸ்லிம் மீது ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

இருவர் ஒருவருக்கொருவர்திட்டிக் கொண்டால் அதன் பாவம் (திட்ட) ஆரம்பித்தவரைச் சாரும். இது எதுவரை எனில், அநியாயம் செய்யப்பட்டவர் வரம்பு மீறாதவரை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

எவன்ஒரு முஸ்லிமிற்குத்தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமைக் கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் கஷ்டத்தில் ஆழ்த்துவான்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

பகைமைகொள்பவர்களும். தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

இறைநம்பிக்கையாளன்குத்திப் பேசுபவனாகவும், அடிக்கடி சாபமிடுபவனாகவும்இருப்பது இல்லை; மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், (சண்டையில்) தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

இறந்தவர்களைத்திட்டாதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்களின் செய்கையின் பால் சென்று விட்டனர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

புறம்பேசுபவன் சுவர்க்கம்புக மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

எவர்தன்னுடைய கோபத்தைத் தடுத்துக் கொள்கிறாரோ, அவரிடமிருந்து அல்லாஹ் தனது தண்டனையைத் தடுத்துக் கொள்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்


ஒரு கூட்டம்வெறுக்கக் கூடிய நிலையில், அவர்களது பேச்சைக் கேட்பதற்கு எவர் முயற்சிக்கிறாரோ, மறுமை நாளில் அவரது காதில் (காய்ச்சிய) ஈயம் ஊற்றப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தன்னைத்தானே பெரியவன் என்று எண்ணிக்கொண்டும், பெருமையாக பூமியில் நடந்து கொண்டும் இருப்பவன் (மறுமையில்) அவன் மீது கோபமாயிருக்கும் நிலையில் அல்லாஹ்வைக் சந்திப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அவசரப்படுவது ஷைத்தானின்(செயல்களில்) ஒன்றாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

சபிப்பவர்கள்மறுமையில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சி சொல்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்

எவனொருவன்தன் முஸ்லிம் சகோதரனை பாவம் புரியத் தூண்டுகிறானோ அவன் அந்தப் பாவத்தைத் தானும் செய்யாதவரை மரணிக்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

மக்களைச்சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடுதான். அவனுக்குக் கேடுதான். அவனுக்கு கேடு தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

கடுமையாகச்சண்டையிடுபவன், மனதில்பகைமையை வைத்திருப்பவன்.அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்