அப்துல்லாஹ் இப்னு ஸபா ஓர் கற்பனை மனிதன்.Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்று ஆசிரியர்களில் சிலர் அப்துல்லாஹ் இப்னு ஸபா பற்றியும் ஸபஈன்கள் பற்றியும் இன்னோரன்ன விடயங்களையெல்லாம் கூறி வந்துள்ளனர். இப்னு ஸபா பற்றிய உண்மை விளக்கத்தை அறிந்து கொள்ளவே இவ் ஆய்வுரை முன்வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு சமூகத்தை இப்ன ஸபாவோடு தொடர்பு படுத்த முனையும் விடயத்தின் உண்மையை தெளிவாக விளங்க ஏதுவாக அமையும் என நினைக்கின்றோம். எனவே இப்ன ஸபா பற்றிய விடயத்தை சுருக்கமாகவும் அதனையடுத்து இது பற்றிய உண்மை நிலையை தெளிவு படுத்தவும் விரும்புகின்றோம். அப்துல்லாஹ் இப்னு ஸபா பற்றி வரலாற்று ஆசிரியர்கள் கூறும் கூற்று இதுதான்: எமன் நாட்டில் சன்ஆஃ எனும் பிரதேசத்தில் பிறந்து யூத மதத்தை பின் பற்றி வாழ்ந்த ஒருவன் தான் இப்னு ஸபா. முஸ்லிம் சமுகத்தைப் பிரித்து பிளவு படுத்த தன்னால் முடிந்த சகல சதித்திட்டங்களையும் மேற்கொண்டான். இதற்காக அவன் யதார்த்தத்தில் யூதனாக இருந்தாலும் தன்னை ஒரு முஸ்லிமாக மற்றோருக்கு காட்ட முனைந்தான். ஷாம், பஸரா, கூபா, ஈராக், எகிப்து போன்ற நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டு அங்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி அவர்களுக்கு மத்தியில் தவரான கருத்துக்களைப் பரப்பலானான். அவன் கூறிய கருத்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் ஈஸா (அலை) அவர்களைப் போன்று இவ்வுலகிற்கு மீண்டும் வருவார்கள். முன்வாழ்ந்த நபிமார்கள் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு பிரதிநிதியை கலீபாவை வைத்திருந்தனர். முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும் ஒரு பிரதி நிதி இருந்தார். அவர்தான் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள். ஆனால் முஹம்மத் நபி (ஸல் ) அவர்களால் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கொடுக்கப் பட்;ட அந்த கலீபாப் பொறுப்பை உதுமான் பின் அப்பான் பறித்துக் கொண்டார். அலிக்கு சொந்தமான கிலாபத் பதவியை உதுமானிடமிருந்து மீட்டெடு த்து அலியிடம் ஒப்படைப்பது எமது கடமை. அதற்காக நாம் போராட வேண்டும். என்ற கருத்துக்களை யெல்லாம் உணர்வு பூர்வமாக மக்கள் மத்தியில் முன்வைத்தான். இவ்வாரான கருத்துக்களைச் சொல்லி குழப்பம் விளைவித்த இவனை வரலாற்று ஆசிரியர்கள் அப்துல் லாஹ் இப்னு ஸபா என பெயரிட்டு அவனை இப்னு அமதிஸ் ஸவ்தா ( கறுப்ப நிற அடிமைப் பெண்ணி ன் மகன்) என புனைப் பெயரும் சூட்டியுள்ளனர். அப்துல்லாஹ் இப்னு ஸபா தனது பிரதி நிதிகளை முஸ்லிம் நாடுக்ளுக்கு அனுப்பி நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் எனும் போர்வையில் அந்தந்த நாட்டு மனிதர்களையும் கவர்னர்களை யும் ஆட்சியிலிருந்து வீழ்த்திட முனைந்தான். இதன் பெறுபேராக முஸ்லிம்களில் அதிகமானவர்கள் அவனது மாய வலையில் அகப்பட்டு அவனது திட்டங்களை பின் தொடர்ந்தார்கள். அப்படி அவனது மாயவலையில் அகப்பட்டவர்களில் ஸஹாபாக்கள், தாபியீன்கள் போன்றோரும் காணப்படுகிறனர். உதாரணத்திற்கு அபூ தர்ருல் கெப்பாரி, அம்மார் பின் யாசீர், அப்துர் ரஹ்மான் பின் உதைஸ், மாலிக் அஸ்தர் போன்றோரைக் குறிப்பிடலாம் எனக் கூறுகின்றனர். இன்னும் ஸபஈன்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம் முஸ்லிம்களை தங்களது நாட்டு கலீபாக்களுக்கு எதிராக போராடும் படியாக வேண்டிக் கொண்டிருந்தார்கள். இவ்விடயங்களிலெல்லாம் தங்களது தலைவனாக இப்னு ஸபாவைப் பின்பற்றி பிரதேசங்களின் கவர்னர்களுக்கு எதிராக கடிதங்களை எழுதினார்கள். இதன் காரணமாக முஸ்லிம்களில் பலர் ஸபஈன்களின் பிரச்சாரத்திற்குட்பட்டு மதீனா நகரை நோக்கி விரைந்து அங்கு உதுமான் பின் அப்பான் அவர்களின் வீட்டை முற்றுகையிட்டார்கள். இம்முற்றுகை ஈற்றில் கலீபா உதுமானின் கொலைக்கு காரணமாகி விட்டது. இத்தனை காரியங்களுக்கும் ஸபஈன்களே காரண கர்த்தாக்கள் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறிவிடத் தவரவில்லை. தொடர்ந்து கூறுகையில் அலிக்கு கிலாபத் பதவியைக் கொடுத்து பைஅத் (உடன்படிக்கை) செய்ததன் பின் தல்ஹா, சுபைர் போறோர் உதுமானின் கொலைக்குப் பழிக்குப்ட பழி வாங்க (ஜமல் யுத்தமெனும் ஒட்டக யுத்தத்திற்காக) பஜராவுக்கு வந்தார்கள். அலிக்கெதிராக போர்கொடி தூக்கிய இவர்களுக்கும், அலி அவர்களுக்குமிடையில் இணக்கம் ஏற்பட்;ட ஆரம்பமானது. இதை அறிந்த ஸபஈன்கள் இவ்விரு பிரிவினருக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டால் உதுமானின் கொலைக்கு சூத்திரதாதியாக இருந்த இவர்கள் மக்கள் மத்தியில் இனங்காணப்பட்டு விடுவார்கள் என்றஞ்சி அலிக்கும் எதிர் படையினருக்குமிடையில் ஏற்பட இருந்த இணக்கத்தை இரவோடு இரவாக குழப்பி விட முனைந்தார்கள். இதற்கான சதிகளை மேற்கொண்டு அலி (ரழி) அவர்களுக்கும் அவர்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியோருக்கு மிடையில் யுத்த நெருப்பை மூட்டி விட நினைத்த ஸபஈன்கள் தங்களது ஸஹாபாக்களை இரு பிரிவினராக பிரித்து இரு தரப்புப் படையிலும் ஊடுருவச் செய்தனர். இரகசியமாக ஊடுருவிய இவர்கள் இரவின் இரளைப்பயன் படுத்தி உரு பிரிவினர் மற்ற தன் எதிரிப்படையோடு யுத்தம் செய்யுமளவு தந்திரோபாயங்க ளைக் கையாண்டனர். ஊடுருவியவர்கள் மற்ற படையை நோக்கி அம்புகளை வீசினர். இதைக் கண்ட மற்ற பிரிவினரும் எதிர்த் தாக்குதலை ஆரம்பித் தனர். ஈற்றில் யுத்தம் சூடு பிடித்தது. எனவே பஸராவில் நடைபெற்ற ஒட்டகை யுத்தம் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணிகளாக இருந்தவர்கள் ஸபஈன்களும், அப்துல்லாஹ் இப்னு ஸபாவுமேயாகும். மாறாக ஹஸரத் அலியோ ஆயிஷா நாயகியோ காரணமல்ல என்கின்றார்கள்.
|