பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 புனித ஷஃபான் மாதம் வருவதையிட்டு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் வந்தனங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அந்த புனித மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் நோம்பு நோற்று அதன் இராத் தொழுகைகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அந்த மாதத்தில் கேட்கப் படும் துஆக்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்படும். இன்னும் அதற்கு ரஸுலுல்லாஹ்வுடைய மாதம் என்றும் பெயர் வைக்கப் பட்டுள்ளது என ஹதீஸ்களிலே வந்துள்ளது. ஆகவே அப்புனித மாதத்தில் இறை வணக்கத்தில் அதிகமாக ஈடுபட்டு பாவங்களை செய்யாது இருக்க இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரிவாணாக ! ஆமீன், என வேண்டியவர்களாக மர்ஹும் முஹத்தித் கும்மி அவர்களின் மபாதீஹுல் ஜினான் எனும் நூலில் இருந்து ஷஃபான் மாத்தில் செய்ய வேண்டிய அமல்களை நீங்கள் செய்து பிரயோசனம் அடைய வேண்டும் என இங்கு தருகின்றோம். ஷஃபான் மாதத்தின் சிறப்பும் அதில் செய்ய வேண்டிய அமல்களும். ஷஃபான் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்றாகும். அது உலகத் தூதர் உத்தம நபி (ஸல்) அவர்களுடைய மாதமாகும். நபி (ஸல்) அவர்கள் அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்று பின் அதைத் தொடர்ந்து வரும் றமழான் மாதமும் நோன்பு பிடித்தார்கள். இதைப் பற்றி அவர்கள் சொன்னார்கள்: ஷஃபான் எனது மாதமாகும். எவர் ஒருவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாறோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகி விடும். இன்னும் ஹஸரத் இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்கள் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளதாவது: ஷஃபான் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஹஸரத் செய்னுல் ஆபிதீன் (அலை) அவர்கள் தனது சகாக்களை ஒன்று சேர்த்து சொன்னார்கள் ஏய் எனது தோழர்களே! இது எந்த மாதம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் இது நபி (ஸல்) அவர்கள் எனது மாதம் எனக் கூறிய மாதமாகும். ஆகவே நோன்பு பிடியுங்கள். இறை நெருக்கத்கிற்காகவும்,இறைத்தூதரின் நேசத்திற்காகவும் இந்த மாதத்தில் நோன்பு பிடியுங்கள். அலி இப்னு ஹுஸைனுடைய உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, எனது தந்தை ஹுஸைன் இப்னு அலி கூற நான் கேட்டேன் அவர்கள் சென்னார்கள் அமீருல் முஃமினீன் அவர்கள் கூற நான் கேட்டேன், எவர் ஒருவர்? இறைவனை நெருங்க வேண்டும் எனவும், இறைத்தூதரை நேசம் கொள்ள வேண்டும் எனவும் நோன்பு பிடிக்கின்றாரோ அல்லாஹ் அவரை நேசிக்கின்றார். நாளை மறுமையில் சுவனத்தை அவருக்கு கடமையாக்குகின்றான் என்றார்கள். ஹஸ்ரத் இமாம் ஜஃப் ஸாதிக் (அலை) கூறியதாக சப்வான் ஜமால் அறிவிக்கின்றார். ஹஸரத் சொன்னார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாத தலைப்பிறையைக் கண்டதும் மதீனா மக்களை அழைத்து ஓ மக்களே! நான் இறைவனால் அனுப்பப்பட்ட அவனது தூதராவேன் அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக ஷஃபான் மாதம், என்னுடைய மாதமாகும். எவர் இந்த மாதத்தில் எனக்கு உருதுணையாக இருக்கின்றாரோ அதாவது நோன்பு நோக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும் என்றார்கள். மேலும் சொன்னார்கள், ஹஸரத் அலி (அலை) அவர்கள் சொன்னார்கள் எப்போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டேனோ அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஷஃபான் மாத நோன்பை நான் விடவில்லை இன்ஷா அல்லாஹ் எனது உயிர் இருக்கும் காலமெல்லாம் அவை கலாவாக மாட்டாது. ஷஃபான், றமழான் போன்ற இருமாதத்தில் பிடிக்கும் நோன்பு இறைவனிடத்தில் இருந்து கிடைக்கும் தௌபாவும், பாவமன்னிப்புமாகும் என்றார்கள். இஸ்மாயீல் இப்னு அப்துல் காலிக் அறிவிக்கின்றார்கள். நாங்கள் இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்களிடத்தில் இருந்தோம் அப்போது ஷஃபான் மாதத்துடைய அமல்கள் திக்ருகள் பற்றி பேசப்பட்டது. இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஹஸ்ரத் அவர்கள் ஷஃபான் மாதத்தின் சிறப்புகளையும் அதில் ஓத வேண்டிய திக்ருகளையும் பற்றி எங்களுக்கு அழகாக சொல்லிக் காட்டினார்கள். யாருடைய இரத்தமாவது ஹராத்துடன் சேர்ந்தால் அவர் ஷஃபான் மாதம் நோன்பு நோற்று அம்மாதத்தை திரன்பட பிரயோசனப்படுத்திக் கொண்டால் அவருக்கு மன்னிப்புகிடைக்கும் என்று கூறிய அவர்கள் இந்த கண்னிய மிக்க மாதத்தில் செய்யப்படும் அமல் இரண்டு வகைப்படும் ஒன்று பொதுவான கூட்டான அமல், மற்றது இந்த மாதத்திற்கு குறிப்பான அமல் எனச் சொன்னார்கள். பொதுவான அமல்களாவன. 1. ஒவ்வொரு நாளும் 70 தடவை أَسْتَغْفِرُ اللَّهَ وَ أَسْأَلُهُ التَّوْبَةَ? என்று சொல்லுதல் 2. ஒவ்வொரு நாளும் 70 தடவை أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الْحَيُّ الْقَيُّومُ وَ أَتُوبُ إِلَيْهِ என்று கூறுதல். ஹதீஸ்களில் வந்துள்ளவாறு இந்த மாதத்தில் சொல்லப்படும் சிறந்த திக்ரு, கேட்கப்படும் துஆ, இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்புத் தேடலாகும். எவர் ஒருவர் இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் 70 தடவை இஸ்திஃபார் செய்கின்றாரோ அவர் இது அல்லாத மாதங்களில் 70 ஆயிரம் தடவை இஸ்திஃபார் செய்ததைப் போலாகும். 3. ஸதகா கொடுத்தல் எவர் ஒருவர் இந்த மாதத்தில் ஈத்தம் பழத்தின் ஒரு பாதியையாவது தருமம் செய்தால் அல்லாஹ் அவருக்கு நரக நெருப்பை ஹராமாக்குகிறான். இமாம் சாதிக் (அலை) அவர்களிடம் இருந்து கூறப்பட்டிருப்பதாவது, ஹஸரத்திடம் ரஜப் மாதத்துடைய நோன்பின் சிறப்புகளைப் பற்றி கேட்டகப் பட்டபோது அவர்கள் ஏன் ஷஃபான் மாத நோன்பை விட்டும் பராமுகமாக இருக்கின்றீர்கள் என்றார்கள். ராவி (அறிவிப்பவர்) நபியின் பேரரே ஷஃபானில் ஒருநாளில் நோன்பு பிடிக்கும் ஒருவருடைய கூலி என்ன வென்று கேட்டதற்கு, இமாம் இறைவன் மீது சத்தியமாக அவருடைய கூலி சுவனமாகும் என்றார்கள். மேலும் ராவி, இம்மாதத்தில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்று கேட்டதற்கு தான தருமம் செய்தலும் பாவ மன்னிப்பு கேட்டலுமாகும் என்றார்கள். 4. இந்த மாதம் முழுவதும் 1000 விடுத்தம்? لا إِلَهَ إِلا اللَّهُ وَ لا نَعْبُدُ إِلا إِيَّاهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَ لَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
|