நபியின் குடும்பத்தினரே




Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

இறை தூதரும், இருதித் தூதருமான நபி ஸல்லல்லாஹு அலைஹிவஆலிஹி வஸல்லம் அவர்கள், உலக மக்கள் அனைவரை விடவும் சிறப்பும், அந்தஸ்தும் வாய்ந்தவர்களாவார்கள். அவர்களுக்கு அடுத்தபடியான சிறப்பும் அந்தஸ்தும் வாய்க்கப் பெற்றவர்களாக,அவர்களது பரிசுத்த குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினர் விளங்குகின்றனர் என்பதை அல்குர்ஆன் மற்றும், அல்ஹதீஸ் வாயிலாக நாம் தெளிந்துணர முடிகின்றது. அஹ்லுல் பைத்தினரின் பரிசுத்த தன்மை பற்றி அல்குர்ஆன் இவ்வாறு பறை சாற்றுகின்றது.

  'நபியின் குடும்பத்தினரே! உங்களிலிருந்து அழுக்குகளை அகற்றி உங்களை முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகின்றான்;.' அல் குர்ஆன் -33. 33

மேலுள்ள இறைமறை வசனத்திற்கு முபஸ்ஸிரீன்கள் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர், பல்வேறு விதமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்;. நபிமணி (ஸல்) அவர்கள், இவ்வசனத்திற்குறிய சரியான விளக்கத்தை தமது   வாழ்க்கை மூலமாகவும், வார்த்தை மூலமாகவும் தெளிவு படுத்தியிருக்கின்றார்கள்.

நபிகளாரின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா நாயகி அறிவிக்கின்றார்கள். ஒரு நாள் காலை, நபி ஸல் அவர்கள், கறுப்பு நிறப் போர்வையினால் தம்மைப் போர்த்திக் கொண்டு வெளியே வந்தார்கள். அப்போது, ஹஸரத் அலியின் மகனாராகிய இமாம் ஹஸன் வந்தார்கள். நபியவர்கள் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார்கள். அதன் பிறகு இமாம் ஹுஸைன் வந்தார்கள். நபியவர்கள், அவரையும் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார்கள். அதன் பிறகு ஹஸரத் பாத்திமா வந்தார்கள். நபியவர்கள் அவரையும் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார் கள். பின்னர் ஹஸரத் அலி வந்தார்கள். நபியவர்கள், அவர்களையும் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார் கள். அதன் பின், நபியவர்கள் இத் திருமறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

நபிகளாரின் மனைவியருள் மற்றொருவரான உம்மு ஸல்மா நாயகி அறிவிக்கின்றார்கள். சூரா அஹ்ஸாபின் 33ம் இவ்வசனம், எனது வீட்டில் வைத்தே இறங்கியது. அப்போது என் வீட்டில் நபிகளாருடன் ஹஸ்ரத் அலி ஹஸ்ரத் பாத்திமா, இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ஆகியோர் இருந்தனர் நபியவர்கள்,இவர்கள் நால்வரையும் அழைத்து, தமது போர்லையினால் அவர்களைப் போர்த்தி விட்டு, இவ்வாறு பிரார்த்தித்தார்கள்.

اللهـم  هـولاء اهل بيتي  فاذهب  عنهم  الرجس  وطهرهم  تطهيرا

அல்லாஹ்வே ! இவர்களே எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்தினர். ஆகவே, அவர்களை விட்டும் அசுத்தங்களை அகற்றி, அவர்களை பரிசுத்தவான்களாக்கி வைப்பாயாக!

உம்மு ஸல்மா நாயகி தொடர்ந்து கூறுகின்றார்கள், அவ்வேலையில் நான் போர்வையை சற்று விலக்கி, இறைத்தூதர் அவர்களே! நானும் தங்களுடன் இல்லையா ? எனக் கேட்டேன்.  அதற்கு பிறகு நபி ஸல் அவர்கள்

 இவ்வாறு கூறினார்கள்.

انت  على  مكانك  وانت على  خير



1 2 3 4 5 6 7 next