இஸ்லாத்தில் சமூக உறவுகள்.இந்த ஒழுங்குமுறை ஏதோ மாற்றமில்லாததும், நிலையானதும் ஆகும். அது விதிவிலக்குகளை அனுமதிப்பதில்லை. எல்லா கல்விமான்களும், தெளிவான பார்வையுடையவர்களும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்தினைக் கொண்டுள்ளனர். இந்த உண்மை குர்ஆனும் கூட உறுதிப்படுத்துகின்றது;.

ஆகவே வெளிவாரியான நிகழ்வுகள் நிரந்தரமானவை. முhற்றங்கள் இல்லாதவை. மேலும் எந்த வன்முறையும் அனுமதிப்பதில்லை, அனுமானத்தின் மூலம் நாம் ஓரளவுக்கு தெரிந்து கொள்ளக் கூடிய அடிக்கடி நிகழ்கின்ற சம்பவங்கள் கூட அவற்றின் பெரும்பான்மையில் மாற்றமில்லாததும், நிரந்தரமானவையுமாகும். (அடுத்தடுத்து காணப்படும் அடிச்சுவடுகள் என்பன).

உதாரணமாக, வெப்பநிலை கூடிய நிலையில் நெருப்பு சுவாலையைக் கிளப்புகின்றது என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். இந்தப் பௌதிகக் காரணியான நெருப்பு எப்போதும் உய்த்துணரக் கூடியது உண்மை.

(ஆகவே வெளிவாரியான எல்லா விடயங்களும் காரணி, விளைவு, முறைமைக்கு உட்பட்டவை என்றும், மேலும் இந்த முறைமை நிரந்தரமானதால் வெளிவாரியான நிகழ்வுகளுக்கும் கூட நிரந்தரமானதும், மாறாததும் எனடபது தெளிவாகின்றது.)

ஆ) மனிதன் இயல்பாகவே ஏதோ ஒரு வகையில் உண்மையானதும்,வெளிவாரியானதும் எனக் கருதுகின்ற ஒன்றினைப் பின்பற்றுகின்றான்.(மனிதன் இல்லாத ஒன்றுக்கு மட்டும் கீழ்ப்படிவில்லை. அவன் இருப்பது: இல்லாதது ஆகிய விடயங்களில் தவறு செய்யவும் கூடும். ஆனால் அவன் முதலில் நிலையானது எனக் கருதுவதைப் பின்பற்றுகின்றான்).

மனிதன் இயல்பாகவே ஒண்மையைப் பின்பற்றுகின்றவன். தீர்க்கமான அறிவு ஒன்று இருப்பதை மறுப்பவர்கள் கூட (மனிதன் எந்த ஒரு விடயத்திலும் இறுதியான அறிவை பெற்றுவிட முடியாது எனக் கூறுகிரவர்கள்) அவர்களுக்கு சந்தேகமில்லாத ஒன்றினை நீங்கள் கூறுகின்றபோது மிகவும் தாழ்மையாக ஏற்றுக் கொள்வார்கள்.

ஆகவே மனிதன் உண்மையைப் பின்பற்றுகின்றான் எனக்கூறி நாம் முடிக்கின்றோம்.

இ) நீங்கள் அவதானித்தபடி, உண்மையென்பது மனிதன் நம்பி, நடைமுறையில் பணிவோடு பின்பற்றுகின்ற ஒரு வெளிவாரியான விவகாரமாக உள்ளது. ஆனால் மனிதனின் சிந்தனையும், புரிந்துணர்வுமே அவனது புறத்தோற்றத்துக்கு வழிகாட்டும் துயைக்கருவிகளாக உள்ளன. ஒரு பொருள் கண்ணாடியில் பிரதிபலிப்பதைப்போல்.

இப்போது உண்மையாக இருப்பது என்பது வெளிவாரியாக இருக்கும் நிலையானதும் அடிக்கடி நிகழ்வதுமான விஷேட பண்பு என்றும் அறிவினுடைய அல்லது புரிந்துனர்வினுடைய ஓர் உடமையல்ல என்பதும் உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்.வேறுவார்த்தையில் கூறுவதாயின், அது அறிவுக்கு சொந்தமற்ற ஏற்கனவே தெரிந்த ஒரு விஷேட பண்பு எனலாம். ஊண்மையாக இருப்பது என்பது இயல்பாகவே நிலையானது அல்லது அடிக்கடி நிகழ்வது. இந்த தொடர்ச்சியான நிகழ்வுகளின் இறுதி இலக்கு நிரந்தரமானதாகும்.

ஆகவே ஒருநிலையான சம்பவம் உண்மையாகும். இதே வழியில் அடிக்கடி ஏற்படும் நிகழ்வும் வெளிப்புறத்தோடு தொடர்புடை;ய ஓர் உண்மையாகும். ஆனால் பெரும்பான்மையினரின் கண்ணோட்டங்களும், நம்பிக்கைகளும்எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. (எங்களுக்கு நாம் கூறுவோம்! ஊண்மை என்பது ஸ்துலமான ஒரு யதார்த்தம். அது ஒருவரின் அறிவு, புரிந்துணர்வு என்பவற்றால் பொருளுக்குரிய வகையில் பாதிப்புக்குள்ளாகிறது.பெரும்பான்மையினரின் கருத்துக்களும், எண்ணங்களும் யதார்த்தத்தோடு பொருந்தியிருக்குமானால் அப்போது அது உண்மையாகின்றது. மேலும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அது பொய்யாகின்றது. ஆகவே மனிதன் அதன் முன்னிலையில் அடக்கமாயிருக்க வேண்டும் என்பது சரியானதல்ல. மேலும் அவன் அதனை உணர்ந்து கொண்டால் அதன் முன்னிலையில் அவன் அடக்கமாயிருக்கமாட்டான். ஓருவிடயத்தைப் பற்றி நீங்கள் உறுதியாக இருந்தால், ஆனால் எல்லோரும் உங்களோடு அதல் முரண்பட்டடால், நீங்கள் அதற்கு வளைந்து கொடுக்க வேண்டி இருந்தாலும் கூட நீங்கள் தாழ்வடையவில்லை. ஆனால் அட்சம், வெட்கம் அல்லது வேறுகாரணிகளால் வளைந்து கொடுத்திருக்கலாமே தவிர, உங்களது எதிராளிகளின் கருத்துக்கள் சரியானவையும் உண்மையானவையும், ஏற்றுக் கொள்ளக் கூடியதும் என்பதால் அல்ல.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next