இஸ்லாத்தில் சமூக உறவுகள்.மு;, நெரியற்றதாகவும் அல்லது ஒழுக்கமற்றதாகவும் கருதப்படுகின்றவை மமோபாவம, மனவெழுச்சி ஆகியவற்றின்படி ஒழுக்கமானவையாகக் கருதப்படுகின்றன. மேலும் தவறுதலாக அவை சந்தோசமானவையாகவும், ஆண்மைமிக்கவையாகவும், விநயமானவையாகவும் அழைக்கப்படுகின்றன. இன்று இந்த நிலைக்கு உயிர் வாழும் அத்தாட்சியாக, ஐரொப்பாவில் தற்போதைய நிலைமையாகும்.இலம் வயதினருக்கு இடையிலான உறவு, ஆண்களுக்கும் திருமணமான பெண்களுக்கும் இடையிலான உறவு, ஆண்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும், கிட்டிய உறவினர்களுக்கும் இடையிலான உறவுகள் இரவு நேர கேளிக்கைகளிலும் நடன வைபவங்களிலும் நிலவுகின்ற சூழ்நிலைகள் இன்னும் இது போன்ற எத்தனையோ விடயங்களை கண்ணியம் கருதி இங்கு குறிப்பிடாமல் விடுவதே சிறந்ததாகும்.

இத்தகையமனிதர்களுக்குஇந்த விடயங்கள் சாதாரணமானவை யாகவும், வழமையானதாகவும், வினோதமானதாகவும, நகைச்சுவையானதாகவும் இருக்கின்றதுஇவற்றுக்கு எல்லாம் காரணம் சிந்தனையினதும், புரிந்துணர்வினதும் வித்தியாசமான வழிழுறையே. இதற்கு காரணம்: நாம் ஏற்கனவே கூறியதுபோல் பரிபூரணத்துவத்துக்கு வித்தியாசமான ஒரு வழிமுறையைப் பின்பற்றியதே.

இந்த மனோபாவமான குறிக்கோள்களில் சுரண்டலுக்கும், இன்பத்துக்கும் வழி விடப்படுவரதத் தவிர வேறு எந்த நியாயமான பலனையும் நீங்கள் காண முடியாது.

தற்கொலை, மற்றும் அது போன்ற சில செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதையும் இங்கு நடைமுறையிலுள்ள சட்டங்களில் நீங்கள் அவதானிக்கலாம். சுருக்கமாக கூறுவதாயின் மனித விருப்பத்துக்கு, சமூகவிருப்பத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத எல்லா வேடிக்கை விநோதங்களுக்கும் உரிமையுண்டு இந்த வித்தியாசத்தை நீங்கள் முறையாக சிந்தனை செய்தால் மேற்கத்திய சமூகம் சமய சமூக மாதிரியைவிட, மனித மனவிருப்பங்கயோடு ஏன் பெரிதும் இசைவாகக் காணப்படுகிறது? என்பதையும் நீங்கள் கண்டு கொள்ளலாம. இங்கே குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், மேலைத்தேச நாகரிக மாதிரி மட்டும் மக்களின் கலையோடு ஒத்துப் போகவில்லை. பண்டைய காலம் முதல் இன்றுவரை உலக மக்களிடையே பரிச்சயமாகவுள்ள எல்லா மாதிரிகளும், அவை கூடாரங்களில் வாழ்ந்த காலப்பகுதிக்கு சொந்தமாயிருப்பினும் சரி, அல்லது நாகரிகத்தோடு பிண்ணிப்பிணைந்திருப்பினும் சரி, அவர்களுக்கு முதன்முறையாக ஒரு மார்க்கம் சமர்பிக்கப்பட்டபோது மார்க்கத்துக்கு பழைய மாதிரிகளே உசிதமானது என அவர்கள் நினைத்தனர். மனிதனை நேரான பாதைக்கு சமயங்கள் அழைத்தன. இருப்பினும் அவன் உலகாயத விக்ரக ஆராதனைகளுக்கு முன் அடிமைப்பட்டே கிடந்தான்.

இந்த விடயத்தில் இன்னும் ஆழமாக நீங்கள் சிந்தித்தால், நவீன நாகரிகம் தனி மனிதனிடமிருந்து சமூக வடிவை மேற் கொண்டிருப்பதையும் சாதாரன ஒன்றிலிருந்து முழுமையான வடிவத்தை மேற் கொண்டிருப்பதையும் தவிர, நவநாகரிகம் பண்டைய விக்ரக ஆராதனையில் இருந்தே பெருவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இஸ்லாமிய சமூக மாதிரி உண்மையைப் பின்பற்றும் அடிப்படைத் தத்துவத்தில் அன்றி, மனோநிலைக்கு எற்ப அமையப் பெறவில்லை என்ற எமது கூற்று திருக்குர்ஆனில் மிகத் தெளிவாகவுள்ளது. குர்ஆன் கூறுகின்றது. பெரும்பாலானோரின் சலனங்களுடனும் விருப்பங்களுடனும் ஒத்துப் போவது அழிவுக்கும், நாசத்துக்குமே இட்டுச் செல்லும். மேலும் அவர்களைப் பின்பற்றக் கூடாது. சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் நேர்மையீனம் தீவர மாகும் என்று. குர்ஆன் மேலும் ஒறுதியுடன் கூறுகின்றது.

ஆகவே தற்காலத்தில். இஸ்லாம் பின்பற்றமுடியாத ஒரு கோட்பாடு என்று அவர்கள் ஒரு முடிவுக்கு வருகின்றார்கள். ஆனால் ஏன் இஸ்லாம் பின்பற்றமுடியாதது? என்ற ஒரு கேள்வியும் எழுகின்றது? முன்னைய நீண்ட கலந்துரையாடலில் இதற்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாத்தின் இலட்சியம் அறிவு, நியாயம் என்பவற்றின் அடிப்படையிலான உண்மையான மகிழ்ச்சி என்பது தான் இந்த இரகசியம். ஆனால் அதேவேளை நாகரிக சமூகத்தின் குறிக்கோள் உலகாயுத் சுரண்டலாகவே உள்ளது. மனித சமூகத்தின் நலனில் உண்மையான அக்கறை கொண்டது எது என்பதையும் இந்த விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.

2. பெரும்பான்மையைப் பின்பற்றுவதே உலகின் இயற்கையான தேவை என்றும், இயற்கை அதன் அவதாரத்தில் பெரும்பான்மைக்கு கீழ்ப்படிகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இpல்லை என்றும் கூறப்படுகிறது. இயற்கைக் காரணிகளும், விளைவுகளும் எப்போதுமே சக்தி வாயந்தவை என்பதல்ல இதன் கருத்து. ஆனால் அவை தடைகளைச் சந்திக்காத நிலையில் அநேகமான விடயங்களில் அவற்றின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும் இந்த நடவடிக்கை உண்மையைப் பின்பற்றுவதைத் தடை செய்ய வேண்டிய ஒரு அவசியத்தையோ அல்லது அதற்கு எதிராக வேண்டிய நிலைமையையோ தோற்றுவிக்கவில்லை. இந்த அடிப்படைக் கொள்கையையே ஓர் உண்மையாக இருக்கையில் அது எப்படி தன்னையே தடை செய்ய முடியும்?

இந்த விடயத்தை விளக்க நீங்கள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

அ) கோட்பாடு ரீதியானதும் செயல் நீதியானதுமான மனித நம்பிக்கைகளின் ஆணிவேராக இருக்கும் வெளிவாரியான விடயங்கள். படைப்பிலேயே அவற்றின் காரணி, விளைவு என்பவற்றின் ஒழுங்குமுறையைப் பொருத்த மட்டில் பல்வேறு மாற்றங்களுக்கு உற்படுகின்றன.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next