இஸ்லாத்தில் சமூக உறவுகள்.இருந்த போதிலும் இந்த சிறிய மாதிரி, அதன் வாழ்நால் குருகியதாக இருந்தாலும் அரை நூற்றாண்டுக்கும் குறைவான காலப்பகுதியில் கிழக்கிலும் மேற்கிலும் மிக வேகமாகப் பரவியது. மேலும் இன்றும் கூட நாம் அதன் அடிச்சுவடுகளைக் காணக்கூடியதாக வரலாற்றையும் மாற்றியமைத்து. இந்த அடிச்சுவடுகள் சாசுவதமானவை.

தற்கால உலகின் எல்லா மாற்றங்களினதும்; மூலாதாரங்களும், காரணிகளும் இஸ்லாமிய வழியில் உதயமானவைதான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர சரியான, துணிச்சலுடன் வரலாற்றை கருத்தில் கொண்டு நடத்தப்படும் ஆத்மீக, சமூகக்கலந்துரையாடல்களால் இந்த உண்மையை நிராகரிக்க முடியாது

ஆனால் துரதிஷ்டவசமாக விவாதங்களில் ஈடுபடும் ஐரோப்பியர் தவறான சமய எண்ணங்களாலோ அல்லது அரசியல் காரணங்கனாலோ மனித சமூகத்தில் இஸலாமிய உயத்தின் செல்வாக்கை திருப்த்திகரமான முறையில் முன்வைக்கத்தவறிpவிட்டனர். தான் ஆன்மீகத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், பௌதீக விவகாரங்களிலோ அல்லது அரசாங்கத்திலோ அரசியலிலோ அக்கறை செலுத்தவில்லை என்று உறுதியாக கூறும் போது சரியான தகவல்களைக் கொண்டு வாதம் புரியும் ஒருவர், எவ்வாறு புதிய நாகரிக இயக்கத்தை ஒரு கிறிஸ்தவ இயக்கமாகும் என்றோ அல்லது அதன் பதாகையைத் தாங்கி நிற்பவர் இயேசுதான் என்றும், அவரே அதன் தலைவர் என்றும் கூற எவ்வாறு அனுமதிக்க முடியும்?

கூட்டுவாழ்க்கைக்கும், திருமண உறவுக்கும்  அழைப்பு விடுத்து மனிதனின் சமூக விவகாரங்கள் அனைத்திலும் எவ்வித விதி விலக்குமின்றி கவனம் செலுத்துவது இஸ்லாம் மட்டுமே.

ஐரொப்பிய அறிஞர்களின் இந்த அலட்சிய போக்குக்குக் காரணம், இஸ்லாமிய ஒளியை அனைத்து மனித இதயங்களில் அது கொழுந்துவிட்டு எரியச் செய்யும் தீயினை அணைத்துவிடும் நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியுமா? இவையெல்லாம் நியாயமற்ற முறையில் செய்து இஸ்லாத்தை இனவாதப் பொருளொன்றாகக் காட்டுவதே அவர்களின் நோக்கமாகும். இஸ்லாத்தில் இனவாதப்பாகுபாட்டைத் தவிர வேறு பலன்கள் எதுவும் இல்லை எனக் காட்ட முனைந்தனர். ஆனால் இறைவனின் நாட்டம் இந்த ஒளியை பூரணப்படுத்துவதாக இருந்தது.

சுருங்கக் கூறின் மக்களுக்கு சந்Nதூஷமான வாழ்வை அளிப்பதிலும், இந்த இலக்கை நோக்கி அவர்களுக்கு வழி காட்டுவதிலும் இஸ்லாம் தனது தகுதியை உறுதிப்படுத்தி உள்ளது. இத்தகைய பண்பாடுகளடங்கிய நம்பிக்கையொன்று மனித வாழ்க்கைக்கு பொருத்தமற்றது என்றும், ஆதாரமற்ற அநுமானம் என்றும் கூறமுடியாது. ஊண்மையான சந்தோஷத்தை தனது இருதி இலக்காகக் கொண்ட இத்தகைய ஒரு குறிக்கோள் மனிதர்களின் உலக விவகாரங்களின் பாதுகாப்பில் ஒரு போதும் நம்பிக்கையற்ற நிலையழல் இருக்க முடியாது.

ஜீவன்களின் நிலைமை பற்றி ஆழமான ஆய்வு மனித சமூகம் எதிர்பார்த்திருக்கும் இறுதி இலக்கை அடைந்து கொள்ளும் என்ற முடிவுக்கு எம்மை இட்டுச் செல்கின்றது. அப்போது இஸ்லாம் அதன் எல்லா யதார்த்தங்களுடனும் உயர்ந்து நிற்கும். மேலும் மனித சமூகத்தின் மேற்பார்வையை மொத்தமாகப் பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்தக் கண்ணோட்டத்தின்படிஇறைவன் இந்த உறுதியை அல்குர்ஆனில் வழங்கியுள்ளான்.

அலட்சியம் செய்யப்பட்ட இன்னோரு விடயம் என்னவென்றால் அடிப்படைக் கோட்பாட்டில் இஸ்லாத்தின் சமூகக் குறியீடானது சிந்தனையிலும், செயலிலும் நல்ல வற்றைப் பின்பற்ற வேண்டும் என்பதும் அதேவேளை நவ நாகரிக சமூகம் பெரும்பான்மையினரின் விருப்பத்தையும,சம்மதத்தையும்; பின்பற்றுகின்றது என்பதும் ஆகும்.

இவ்விரு தரங்களும், பொதுவாக நடைமுறையில் இருக்கும் சமூகங்களின் இரண்டு குறிக்கேர்ளுக்கும் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றது. அதாவது இஸ்லாத்தினால் உருவாக்கப்பட்ட சமூகம், நாகரிகத்தினால் உருவாக்கப்பட்ட சமூகம் என்பனவே அவை. முன்னையதன் இலட்சியம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்மையான சந்தோஷத்தை வழங்கள். அதாவது ஒரு மனிதன் தனது சொந்த சக்திகளின், சூழ்நிலைத் தேவைகளுக்கு எதிராக நிதானத்தை அனுஷ்டித்தல். அவனுக்கு அவனுடைய பௌதிகத் தேவைகளும் வழங்கப்படல் வேண்டும். இறைவனை உணர்ந்து, அவனுக்கு தன்னை அர்ப்பணிக்கும் வழியில் இருந்த திசை திரும்பிடாத அளவுக்கே அவனது பௌதிக தேவைகள் வழங்கப்படல் வேண்டும். மேலும் உடம்பைப் பாதுகாத்தல் என்பது இறைவனை அறிந்து கொள்வதற்கான முன்னுரையாக மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த வழிமுறை உலகின் எல்லா விடயங்களிலும் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அவனுடைய எல்லா சக்திகளும் மகிழ்ச்சியை அடைந்து கொள்ளும். ஏமது சமூகத்தில் இஸ்லாமியக் கல்வியின் ஒழுங்கீனம் காரணமாக, நாம் இதனை உனர்ந்து கொள்ள முடியாத போதிலும் இது பெரும் நிம்மதியான ஒரு நிலையாகும். இத்தகைய ஒரு இலக்கை மனிதனுடைய இருதி சந்தோஷத்துக்காக இஸ்லாம் சிபார்சு செய்கின்றது. ஆகவே இந்த சமயம், அதன் சட்டஙகளை நியாய அவதானிப்பின் அடிப்படையில் அமைத்திருப்பதை நாம் காணலாம். அந்த நியாயம், உண்மையானதையும் சரியானதையும் பின்பற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. பொது அறிவினைக் குழப்பும் எல்லா விமடயங்களையும் இஸ்லாம் கண்டிப்பாகத் தடுத்துள்ளது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next