இஸ்லாத்தில் சமூக உறவுகள்.1. இஸ்லாத்தின் சமூக மாதிரி உலகில் நடைமுறைப்படுத்த முடியாதது என்றும், அதேவேளை தற்போதைய நாகரிhம் அதன் தற்போதைய நிலைமையில் நடைமுறைப்படுத்தக் கூடியது என்றும் கூறப்படுகின்றது.

இந்தக் கூற்றின் கருத்தானது இஸ்லாம் விதிக்கின்ற சட்டங்களுக்கு இப்போதைய உலக சூழல் பொறுத்த மற்றது என்பதாகும். இது தெளிவானது, உலகத்தில் வழக்கில் இருக்கின்ற எல்லாக் குறிக்கோள்களும் முன் உதாரனங்

கள் இல்லாதவை. பிற்காலத்தில் தோன்றியவை. மேலும் அவை தோற்றம் பெற்ற சந்தர்ப்பங்களிலும் எல்லா நிலைமைகளும் அவர்களுக்கு எதிராகவும் சார்பின்றியுமே இருந்ததோடு அவர்களை நிராகரித்து துரத்தி அடிக்கவும் தவரவில்லை.

முன்னைய வழி முறைகள் புதிய வழிமுறைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து, அவற்றோடு சர்ச்சை புரிந்து, அவற்றுக்கு எதிராகப் போராடின.மிpகவும் சாத்தியமான புதிய குறிக்கோள்கள், எதிர்ப்புகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆரம்பத்தில் தோல்வியுற்றன. ஆனால் அவை தமக்கென ஓர் இடத்தையும், ஆதிக்கத்தையும் பெற்றுக் கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் தோன்றி இருதி வெற்றியைப் பெற்றன.

இவற்றில் சில குறிக்கோள்கள், அவற்றுக்கு சாதகமான நிலைமைகள் தூக்கி எறியப்படவும், அழிக்கப்படவும் வேண்டியதாயிற்று.

எல்லா சமய உலகாய குறிக்கோள்களிலும், ஜனநாயக, கம்யூனிஸ குறிக்கோள்களிலும் கூட வரலாறு இந்த உரிமை கோரலுக்கு ஆதரவழிக்கின்றது.           குர்ஆன் கூறுகின்றது உங்களுக்கு முன் வழிமுறைகள் வந்து அசன்றுள்ளன. பூமியில் அழைந்து திரிந்து, உண்மையை நிராகரித்து அதைப் பொய்யாகக் கருதியவர்களின் முடிவுகளைப் பாருங்கள் குர்ஆனின் இந்தக் கூற்று வரலாற்று உதாரணங்களைத்தான் மீட்டிக் காட்டுகின்றது. மேலும் இறைவசனங்களை நிராகரிக்கும் பண்புடைய ஒரு வழிமுறை நல்லதொரு முடிவினை அடைய முடியாது என்று கூறுகின்றது. ஆகவே ஒரு வழிமுறை நடைமுறையிலுள்ள மனித நிலைமைகளோடு இணக்கமாகாவிட்டால் அது தவரானதும், நேர்மையற்றதும் என நம்புவதற்கு எவ்வித காரயமுமில்லை. ஆனால் இது அதுவாகவே ஒரு இயற்கைக் கோட்பாடாக பல்வேறு விளைவுக்கும் எதிர் விளைவு களுக்கும், பல்வேறு இயற்கைக் காரணிகளின் எதிர்ப்புக்கும் பின்னால் நிகழக் கூடிய புதிய நிகழ்வுகளுக்கு மிகை நிரப்பாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும்.

இயற்கை சமூகக்கண்ணோட்டத்தில் இந்தச் சட்டத்துக்கு இஸ்லாம் விதிவிலக்கானதல்ல. ஆனால் அது ஏனைய சிந்தனைப் பரிவுகளைப் போலவே சில சமயங்களில் வளர்ச்சியையும். சில வேளைகளில் பின்னடைவுகளையும் சந்திக்கிறது. மேலும் அவற்றைப் போலவே அது, காரணிகளிலும், சூழ்நிலைகளிலுமே தங்கியுள்ளது.

இன்று நானூறு மில்லியன் மக்களுக்கும் அதிகமான வர்களின் இதயங்களில் இஸ்லாம் ஊடுருவியுள்ளது. நூஹ் நபி, இப்றாஹிம் நபி, முஹம்மத் நபி (ஸல்) ஆகியோரின் காலங்களில் விடுக்கப்ட்ட அழைப்பினை விட அது பலவீனமானதுமல்ல.இந்த தெய்வீக மனிதர்கள் ஒவ்வொருவரும் உலகம் வழிகேட்டையும், நாசத்தையும் தவிரவேறு எதனையும் உணர்ந்திராத நிலைகளிலேயே தமது அழைப்புப் பணியை தொடங்கினர். புடிப்படியாக அவர்களின் பணி கிளைவிட்டு மனித இதயங்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. அவர்கள் மறு சீரமைக்கப்பட்டு ஒன்று திரண்டனர். அவர்களின் உறுதியான பிணைப்பு இன்னும் தவரவில்லை.

தனக்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மட்டுமே ஆதரவான நிலையில்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது பணியைத் தொடங்கினார்கள். ஆனால் மற்றவர்கள் இறைவன் அவர்களுக்கு உதவியளித்து, ஒவ்வொருவரையும் பக்தியும், நன்மையும் ஆட்சி செய்யும் ஒரு சமூகமாக மாற்றும் வரைக்கும் ஒருவர் பின் ஒருவராகவே அவரோடு இனைந்து கொண்டனர். அந்த நாட்களில் மிக கஷ்டமானதும் இன்னல்கள் நிறைந்ததுமான காலகட்டமாகும்.

இந்த சமூக நலனில் ஒரு சிறிய இடைநிறுத்தம் இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின் அவர்களுடைய தலைகளிலே குழப்பங்கள் குடிபுகுந்து இந்த இயக்கத்தின் அசலான காரணத்தில் இருந்து விலகிச் செல்ல வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next