இஸ்லாத்தில் சமூக உறவுகள்.இதனால் தான்  சமூக விவகாரங்களில் இஸ்லாமும் அதன் பிரயத்தனங்களும் பின்பற்றிய முறைகள் ஏனைய எல்லா வழிகளையும், முறைகளையும் விட சிறப்பானவை என்று நாம் உரிமை கோருகின்றோம்.

இஸ்லாமிய சமூகச் சட்டம் நிலiயானதும் நடைமுறைப் படுத்தக் கூடியதுமா?

சிறப்பான வாசகர்களான நீங்கள் முன்னைய குறிப்புக்கள் உண்மையானவை என்று நீங்களாகவே கூறக் கூடும். பெருமதிமிக்க, முறையான ஒரு சமூகத்தை உருவாக்குவதில் இஸ்லாத்தின் கண்ணோட்டம் மிகவும் முன்னேற்றகரமானதாகும், இந்த அடிப்படையில் இன்று நாகரிகத்தில் முன்னேற்றம் கண்டுள்ள நாடுகளால் உருவாக்கப்பட்ட சமூகங்களின் அடித்தளத்தை விட இஸ்லாமிய சமூகத்தின் அடித்தளம் மிகவும் சிறப்பாக உள்ளது என்று நீங்கள் கூறிக்கொள்ளலாம். அப்படியானால் அது ஏன் நடைமுறைச் சாத்தியமற்றது? ஒரு சீறு காலப்பகுதியைத் தவிர அது ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? தன்னுடைய சொந்த சமூகத்தை வைத்துக் காப்பாற்றிக் கொள்ள முடியாத இஸ்லாத்தால் எப்படி சீஸர்களினதும், ஷாக்களினதும் அரசாங்கங்களை மாற்ற முடிந்தது?

இஸ்லாமிய அரசாங்கம் அதற்கு முன்னைய பேரரசுகள் அசய்ததைவிட கொடிய, வருந்தத்தக்க காரியங்களைச் செய்து பேரரசுகளாக மாறின. ஆனால் மேலைத் தேச நாகரிகம் மிகவும் முன்னேற்றகரமானதாகவும் அவற்றின் சட்டங்கள் உறுதியானவையாகவும் நம்பக் மூடியவையாகவும் இருந்தன.

மேலைத் தேச நாடுகள் அவற்றின் சமூக மாதிரிகளையும், சட்டங்களையும் தேசத்தின் நலனையும், இயற்கைத் தேவைகளையும் பெரும்பான்மையினரின் விருப்பத்தையும் அடிப்படையாக வைத்தே அமைத்துக் கொண்டன என்றும், வழமையாக ஒரு விடயத்தில் எல்லோருடைய சம்மதத்தையும் பெற்றுக் கொள்வது சாத்தியமற்றதாக இருந்தது என்றும் ஒருவர் கூறலாம். வஸ்துக்களின் இயற்கை ஒழுங்கமைப்பிலும் கூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்தக்காரணிகள் பெறுமதியானவையாக இருந்தன. ஆனால் எல்லாவற்றிலும் ;இன்னும் பல்வேறு காரணிகள் ஒன்றோடு ஒன்று விரோதமாக இருக்கையிலும், ஒரு காரணி விரோதமான முறையில் இன்னொரு காரணி மீது தாக்குதலை ஏற்படுத்த உத்தேசிக்கும் போதும், பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருப்பதாலேயே அதனை செய்ய முடிகின்றது. சிறுபான்மையால் அது முடியாது என்பதோடு எல்லா வற்றின் மீதும் செல்வாக்கு செலுத்தப்படுவதுமில்லை.

இனி இதுதான் காரணிகளின் வழியாகின்றது. ஓரு சமூகத்தின் கட்டமைப்பை பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடித்தளத்தில் உள்ள சட்டங்களிலும், வழிமுறைகளிலும் அமைத்துக் கொள்வது எவ்வாறு சமயேசிதமாகும்? நாகரிகத்தின் அடிப்படைத் தர்க்கமே இதுதான்.

இன்றைய உலகில் சமயத் தத்துவம் என்பது வெறும் கற்பனையும் கனவுமன்றி வேரென்றுமில்லை.அது தத்துவம் என்ற கட்டத்துக்கு அப்பால் செல்வதுமில்லை. சமயத்தை எந்த குறிக்கோளுமின்றி மனதுக்குள் ஊடுருவிய ஒன்றாகத்தான் அவர்கள் கருதுகின்றார்கள். நவநாகரிகம் எல்லா நாடுகளிலும் இடம் பிடித்துள்ளது. அதிகாரத்தின் பாதுகாவலனாகவும் அது செயற்பட்டுள்ளது. சமூகம் ஒரு போதும் அங்கீகரிக்காத வஞ்சகம், தேசத்துரோகம், அடக்குமுறை, அயோக்கியத்தனம், குற்றங்களின் சேயற்கையுடனான நீசத்தனம் என்பவை நாகரிகங்களால் அழிக்கப்பட்டவைகளாகக் கருதலாம்.

மேலே கூறப்பட்டவை. சில விடயங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் கீழைத்தேசத்தவராக எம்மில் சிலரது, குறிப்பாக சமூக, அறிவு பூர்வமான விவாதங்களில் ஆர்வமுள்ள மாணவர்களினதும், கல்விமான்களினதும் சிந்தனையைத் தூண்டுவதாகவும், அந்த விடயங்களைப் படிக்க வேண்டும் என்ற மனோபாவத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன.

ஆனால் இத்தகைய ஒரு விவாதம் முறையற்றது எனக் கூறுவதற்காக நாம் வருத்தப்படுகின்றோம. மேலும் அதனை விவரித்தவர்கள் உண்மைக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு கண்ணோட்டத்தை  தவறாகப் புரிந்து கொண்டனர்.

இந்த விடயத்தை தெளிவுபடுத்துவதற்காக, மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விடயத்துக்கும் நாம் பதில் தருகின்றோம்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next