இஸ்லாத்தில் சமூக உறவுகள்.வரலாற்றில் விவரண முறையை முதன் முறையாக புகுத்தியவர் பிரான்ஸிய வரலாற்றாசிரியரான அகஸ்டிகொகொன்ட் என்று ஆவார், அவர் கி.பி. 1858 இல் காலமானார் என்று கூறப்படுகின்றது.

தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையிலான உண்மையான உறவுக்கு தேவையான வலுவான தனிமனித சக்திகளுக்கு சமூகத்தில் எதிர்ப்புக்களும், முரண்பாடுகளும் தென்படுகின்ற போது உறுதியான பல சமூக சக்திகளும், பண்புகளும் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் என்று சுரக்கமாகக் கூறலாம்.

இன்னும் விளைவுகளையும் எதிர் விளைவுகளையும் உண்டாக்குகின்ற அந்த சக்திகளையும், பண்புகளையும் பற்றிய எமது கருத்துக்களை எமது அனுபவங்களும் அறிவு ஞானங்களும் உறுதி செய்கின்றன. அதாவது ஏனைய சக்திகள் மீதும், பண்புகள் மீதும் செல்வாக்கு செலுத்துகின்ற அந்த சக்திகள் அவற்றின் சுழற்சியில் பாதிக்கப்படுகின்றன.

சமூகக் கலவரங்களோடும்;, கிளர்ச்சியோடும் தொடர்புடைய தனி மனிதனின் சித்தமங்கள், மேலும் அந்த விடயத்தில் வேறு ஏதாவது நிகழ்வுகள் சமூகத்தின் விருப்பத்தையும், பிரயத்தனத்தையும் எதிர்க்கவோ, தடுக்கவோ முடியாது என்றுதான் கூற வேண்டும். ஒரு பகுதிக்கு முற்றாக கீழ் படிவதையும் முற்றாக ஒரே பாதையை பின்பற்றுவதையும் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை. சமூகத்தின் பலம் எந்த அளவு விவேகத்தையும், சிந்தனைகளையும் அது கொண்டுள்ளது என்பதைப் பொருத்தே அளவிடப்படுகின்றது.

தோல்வி, பாதுகாப்பின்மை, பூமி அதிர்ச்சி, பஞ்சம், வாந்திபேதி, அல்லது தோல்வியும் அது போன்ற ஏனைய விவகாரங்களும் ஏற்படுத்தும் பாதிப்பை விடக் குறைவான பாதிப்பினையுடைய சாதாரண தேசிய பழக்க வழக்கங்கள், பரம்பரை பழக்கங்கள் ஆகியவற்றால் உண்டாகும் பொதுவான பீதி போன்ற விடயங்களிலும் இதுவே உண்மையாகக் காணப்படுகின்றது. சமூகம் தனிமனிதர்களிலுமிருந்து சிந்தனை சக்தியையும், புரிந்துனர்வு சக்தியையும் கிரகித்துக் கொள்கின்றது. ஆனால் அது அவர்களை சமூகத்துக்கு கீழ் படியுமாறு நிர்பந்திக்கின்றது.

வேறு எந்த ஒருமார்க்கத்திலும், நாகரிகமடைந்த நாடுகளின் சட்டங்களிலும் காண முடியாத அளவுக்கு நமூக அந்தஸ்தை உயர்துவதற்கு இஸ்லாம் பெரும் பிரயத்தனங்களை எடுத்துள்ளது. இந்தப் பிரயத்தனத்துக்கான அத்தாட்சியை ஏற்கனவே நாம் விளங்கப்படுத்தினோம். துனி மனித ஒழுக்கத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒழுக்கவியலும் இயல்பூக்கங்களும் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் சக்தியையும் மீறி, சமூக உருவாக்கத்துக்கு அடிப்படையான தனி மனித ஒழுக்கம், இயல்பூக்கம் என்பவற்றின் பயிற்சிக்கு வெற்றிவாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்த காரணத்தால் தான் இஸ்லாம் சமூக அத்திரவாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதன் சட்டங்களிலும் தெய்வீகக் ஆக்ஞைகளிலும், எடுத்துக்காட்டாக, யாதம்திரை மேற்கொள்ளல்(ஹஜ்), தொழுகை, ஜிகாத்,(இஸ்லாத்தின் நன்மைக்காகப் போராடுதல்). தானம் செய்தல், மேலும் விரிவாக கூறுவதாயின் சகல சமயத் தேவைகளிலும், கடமைகளிலும் இஸ்லாம் சமூக அத்திவாரத்தை மிகவும் முக்கியமான ஒன்றாக கொண்டுள்ளது.

இஸ்லாம் உண்மையான சந்தோஷத்தை சுவீகாரம் செய்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தின் இலக்குகளாக இறைவனை சமீபிப்பதும், இறைவனின் அன்பைப் பெற்றுக் கொள்வதும் உள்ளன. சமூகத்தில் இந்தக் குறிக்கோள்; என்பது கண்டிப்பான ஒரு உள்ளார்ந்த கண்காணிப்பாக உள்ளது. எந்த ஒரு மனிதனுடைய சிந்தனையும், பண்பும்

இந்தக் குறிக்கோள் மேற்கூறிய ஆணைகளைப் பாதுகாக்கும் உத்தரவாதமாக அமைகிறது.

போதுமக்களின் பழக்கங்களையும், சமயவரம்புகளையும் பாதுகாக்கும் இஸ்லாமிய அரசு என்ற சக்தியும் அது போலவே தர்மம் கொடுப்பதற்கான பொதுசட்டங்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்கும் சட்டங்கள் என்பனவும் மேலே கூறப்பட்ட இந்த உள்ளக சக்திகளோடு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

இவ்வாராக சமூகம் பிரத்தியட்சமான பாதுகாவலரை மட்டும் கொண்டிருக்க வில்லை. அது இரகசியமான உள்ளக காவலாலியையும் கொண்டிருப்தையும் காணலாம். மேலும் சில சமூக வழி பிறழ்தல்கள் பொது சட்டங்களை நிறை வேற்றும் சமூகப் பொறுப்புடைய சமூகத் தலைவர்களாலயே கவனியாது விடப்பட்டாலும் கூட மனச்சாட்சியின் அவதானிப்பு மிக்க பார்வையில் இருந்து தப்ப முடியாது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next